நண்பகல் தொழுகை - லுஹர்

ஒருநாளின் ஐங்கால தொழுகைகளில் இரண்டாவது தொழுகை லுஹர். லுஹர் தொழுகை நேரத்தை நிர்ணயிக்கும் இறுதிமறை குர்ஆனின் வசனங்களையும் வள்ளல் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டி தொழுததையும் தொடர்ந்து ஆயும்
Updated on
2 min read

ஒருநாளின் ஐங்கால தொழுகைகளில் இரண்டாவது தொழுகை லுஹர். லுஹர் தொழுகை நேரத்தை நிர்ணயிக்கும் இறுதிமறை குர்ஆனின் வசனங்களையும் வள்ளல் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டி தொழுததையும் தொடர்ந்து ஆயும் அறிஞர்களின் கூற்றையும் காண்போம்.

பகலின் இருமுனைகளிலும் இரவிலிருந்து ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்த கூறுகிறது 
குர்ஆனின் 11}114 ஆவது வசனத்தில் பகலின் இரண்டாவது முனை என்பது நண்பகலில் சூரியன் சாய்ந்ததும் ஆரம்பிக்கும் நேரம். இந்த நேரமே லுஹர் தொழுகைக்கான நேர துவக்கம் என்பதை எடுத்துரைக்கிறது இந்த வசனம். சூரியன் சாய்ந்ததிலிருந்து தொழுகையை நிலைநாட்ட நினைவுறுத்தும் 17}78 ஆவது வசனம் சூரியன் வானின் நடுப்பகுதியிலிருந்து சாய்ந்துவிட்டால் தொழும் லுஹர் தொழுகையை குறிப்பிடுகிறது. 30}18 ஆவது வசனத்திலுள்ள துதுல் ஹிரூன என்ற அரபி சொல் லுஹர் தொழுகையை குறிக்கிறது. 20}130 ஆவது வசனத்தில் வரும் அத்ராப் பன்னஹாரி என்ற அரபி சொற்றொடர் குறிப்பிடும் பகலின் ஓரங்கள் என்பது லுஹர் தொழுகையை  குறிப்பதாக தப்ஸீர் ஜலாலைன் என்னும் குர்ஆன் விரிவுரை நூலில் குறிப்பிடப்படுகிறது.
தொண்ணூறு வயதில் பெற்று தொட்டு தொட்டு அன்பைப் பிட்டு பிட்டு பாசத்தைக் கொட்டி கொட்டி பேணி வளர்த்த பிரிய மகன் இஸ்மாயில் நபியை இறைவன் கட்டளைப்படி இப்ராஹீம் நபி பலியிட முனைந்த
பொழுது ஆட்டை இறக்கி மகனைக் காப்பாற்றிய கருணையாளன்  அல்லாஹ்விற்கு அடிபணிந்து நான்கு ரக் அத்துகள் தொழுதார்கள். அந்த தொழுகையே பின்னர் நடுப்பகல் லுஹர் தொழுகையாக கடமையாக்கப்பட்டது. முதன் முதலில் லுஹர் தொழுதது இப்ராஹீம் நபி என்று நவில்கிறது ரூஹுல் பயான் என்னும் நூல்.
சுவைத்தறிதலில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய நான்கு சுவைகளை உணர்ந்து உண்ணும் நன்றிக்காக லுஹர் தொழுகையில் நான்கு ரக்அத்துகள் தொழப்படுகின்றன. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகை தொழுத நேரம் கோடை காலத்தில் மூன்று முதல் ஐந்து காலடிகள் நிழல் அளவாக இருந்தது. மழை காலத்தில் ஐந்து முதல் ஏழு காலடிகள் நிழல் அளவாக இருந்தது  என்று இயம்புகிறார் இப்னு மஸ்வூத் (ரலி) நூல் அபூதாவூத், நஸஈ. அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் நிலத்தின் சூடு குறித்து கூறி சூடு தணிந்த பிறகு லுஹரைத் தொழ முறையிட்டோம். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எங்களின் முறையீட்டை ஏற்கவில்லை. அறிவிப்பவர்- கப்பாப் இப்னுல் அரத். நூல் }முஸ்லிம், நஸஈ. லுஹர் தொழுகையில் முதல் இரு ரக் அத்துகளில் நிற்பதில் பாதியளவு நேரம் பின் இரு ரக் அத்து
களில் நிற்பார்கள் நீதர் நபி (ஸல்) அவர்கள் என்பதை அறிவிக்கிறார் அபூஸஈத் (ரலி) நூல்- முஸ்லிம், அபூதாவூத், நஸஈ.
தோழமை நபி (ஸல்) அவர்கள் தோழர்களுக்குத் தொழுது காட்டி தொழ சொன்ன நேரத்தில் லுஹர் தொழுகையை நியமமாக தொழுது அபயம் அளிக்கும் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com