பொன்மொழிகள்!

கடுங்காற்றில் கைவிளக்கை வைத்துக்கொண்டு, "காற்று அணைத்துவிட்டது!' என்ற சொல்வது அறியாமையே ஆகும்.
பொன்மொழிகள்!
Updated on
1 min read

* கடுங்காற்றில் கைவிளக்கை வைத்துக்கொண்டு, "காற்று அணைத்துவிட்டது!' என்ற சொல்வது அறியாமையே ஆகும். அது போலவே எந்த ஒரு முயற்சியும் செய்யாமலே இருந்துவிட்டு, "விதி எம்மை வீழ்த்தி விட்டது' என்று சோர்வதும் 
அறிவின்மையேயாகும்.
- குமரகுருபரர்

* நன்றி கெட்டவர்களுக்கு அபகீர்த்தியுடன் பல கஷ்டங்களும் வரும். அவை இந்த உலகத்தில் மட்டுமின்றி மறு உலகத்திலும் தொடரும்.
- பஞ்சதந்திரம்

* நெருப்பு உள்ள இடங்களில்எல்லாம் ஒளி உண்டு என்றாலும், விளக்கிடம் அதற்குத் தனிப்பெருமை உண்டு. அது போலவே, "உலகப் பொருள்கள் அனைத்திலும் இறைவன் அருள் வெளிப்படும்' என்றாலும், சிறந்த தெய்வபக்தர்களிடம் அவனருள் மிகவும் நன்றாக வெளிப்படும்.
- நீதிவெண்பா

* தாறுமாறான எண்ணங்கள் கொள்ளுதல்; ""தானத்தினால் என்ன பயன்?'', ""யக்ஞம் செய்தவர்கள் என்ன கண்டார்கள்?'',  ""புண்ணியமாவது, பாபமாவது'', ""இந்த உலகத்திலும் தர்மம் ஒன்றுமில்லை, பரலோகமும் கிடையாது'' என்றெல்லாம் நினைப்பது தவறாகும்.
- பெளத்த மதம் 

* அஞ்ஞானத்தால் தோன்றிய அனைத்தும் ஞானம் உதித்தவுடன் மறைந்து போகிறது.

* உடல் முதலிய தொகுதிகளை "தான்' அல்லது "ஆத்மா' என்று கருதுவது அவித்தை அல்லது அக்ஞானம்.

* தன்னுடைய சிருஷ்டியில் இறைவன் ஒருபோதும் இரக்கமற்றவனாகவும் நீதி வழுவியனாகவும் இருப்பதில்லை.        - ஆதிசங்கரர்

* இறைவனை வணங்கி வழிபட்டாலன்றி பொய், பொறாமை முதலிய தீய குணங்களை அகற்ற முடியாது.

* இறைவா! பிறரிடம் நான் சென்று யாசிக்காமல் இருக்கும் தகுதியை நீ எனக்கு அருள் புரிய வேண்டும். பிறர் என்னிடம் வந்து யாசிக்கும்போது, "இல்லை' என்று மறுக்காத இயல்பையும் நீ எனக்கு அருள்புரிய வேண்டும்.
- வடலூர் வள்ளலார்

* காலம் தவறாமல் நீராடுவதும், காய்கறி வகைகளை உண்பது மட்டுமே முக்தியளிக்கும் என்று நினைத்தால்  மீன்களுக்கும் குருவிகளுக்குமே முதலில் முக்தி கிடைக்கும்.
- கபீர்தாசர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com