நிகழ்வுகள்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 8- இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது
Updated on
2 min read

சித்திரைப் பெருவிழா
 மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 8- இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஏப்ரல் 15- மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்ரல் 16- திக்விஜயம், ஏப்ரல் 17 - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப்ரல் 18- தேரோட்டம், மற்றும் ஏப்ரல் 19- தேவேந்திர பூஜை.
 தொடர்புக்கு: 0452- 2344360 / 2349868.
 •••••••••••••••
 மதுரை அருள்மிகு கள்ளழகர் சித்திரைப் பெருவிழா, ஏப்ரல் 15 -இல் தொடங்குகிறது. ஏப்ரல் 19- காலை 5.45 மணிக்குமேல் 6.15 மணிக்குள் அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகின்றார்.
 •••••••••••••
 காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் அருள்மிகு திரிபுரசுந்தரியம்மை இடங்கொண்ட அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா, ஏப்ரல் 12 -ஆம் தேதி முதல் 20 வரை நடைபெறுகின்றது.
 ••••••••••••••
 திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அருள்மிகு தர்மசம்வர்த்தினியம்பாள் உடனாகிய அருள்மிகு பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் சித்திரைப் பெருவிழா, ஏப்ரல் 12 -ஆம் தேதி முதல் 22 வரை நடைபெறுகின்றது.
 •••••••••••••••
 தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஏப்ரல் 12 - ஆம் தேதி முதல் 20 வரை சித்திரைப் பெருந்திருவிழா நடைபெறுகின்றது.
 ஸ்ரீ ராமநவமி மஹோத்ஸவம்
 திருவண்ணாமலை மாவட்டம் கேட்டவரம் பாளையத்தில் 113 -ஆவது வருஷ ஸ்ரீராமநவமி மகோத்ஸவம் அக்ரஹார வீதியில் உள்ள ஸ்ரீராம பஜனை மந்திரத்தில் ஏப்ரல் 13- இல் தொடங்கி 22 வரை நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு : ஸ்ரீ ராமபஜனை மந்திரம் டிரஸ்ட் 044: 4553 4041.
 •••••••••••••
 குரோம்பேட்டை கிருஷ்ணா நகர், இரண்டாவது மெயின் தெருவில் உள்ள ஸ்ரீராமபக்த சமாஜம் மண்டபத்தில் 48 -ஆம் ஆண்டு ஸ்ரீராமநவமி ஜனனோத்ஸவம் ஏப்ரல்12 -இல் தொடங்கி 29 வரை நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு : 98412 84637/ 98409 70419.
 ••••••••••••
 புதுச்சேரி முத்தியால்பேட்டை, எம்.எஸ். அக்ரஹாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயகோதண்டராமருக்கு 24- ஆம் ஆண்டு ஸ்ரீராமநவமி மஹோத்ஸவம் ஏப்ரல் 13- இல் தொடங்கி 23 வரை நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 93805 97788.
 ••••••••••••••
 செய்யார் தாலுக்கா, கீழப்பழந்தை, 84 -ஆவது ஆண்டு ஸ்ரீராமாவதார வைபவ மகோத்ஸவம் அக்ரஹாரத்தில் ஏப்ரல்13 -இல் தொடங்கி 18 வரை நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 98840 53775 / 89396 20662.
 ஸ்ரீ கிருஷ்ண யஜூர்வேதக்ரம பாராயணம்
 திருவையாறு பிரம்மோற்சவ நாட்களில் ஸ்ரீ பஞ்சநதீஸ்வரஸ்வாமி சந்நிதியில் ஸ்ரீஹரதத்த சிவாச்சாரியார் சிஷ்ய பரம்பரை திருவையாறு வேதஸ்ரீ முத்து சிரௌதிகள் அவர்களால் ஸ்ரீ கிருஷ்ண யஜூர்வேத பாராயணம் கிரமமாக பல வருடங்களாக காஞ்சி மகாசுவாமிகள் அனுக்கிரகத்தால் நடத்தப்பட்டு தற்போது அவரது சந்ததியர், சீடர்களால் அந்த கைங்கர்யம் தொய்வில்லாமல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு, நிகழ்ச்சியில் (ஏப்ரல் 12 முதல் 22 வரை) காலையில் சுவாமி சந்நிதியிலும், மாலையில் வேதபாராயண க்ருஹத்திலும், இரவு கோயிலிலும் பலவேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு வேத பாராயணம் செய்கின்றனர்.
 தொடர்புக்கு: எம். அனந்த நாராயணன் - 94439 75933 / 09885 319387.
 படித்திருவிழா
 சென்னை குமரன் குன்றம் திருப்புகழ் மன்றம் முருகுகவி அறப்பணி திருப்புகழ் ஆராய்ச்சி மையத்தின் 41- ஆவது ஆண்டு தமிழ் புத்தாண்டு படித்திருவிழா அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏப்ரல் 14 - ஆம் தேதி காலை 5.30 மணிக்கு ஆரம்பித்து அன்று இரவு 8.00 மணி வரை நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 044 2223 5645.
 ஸ்ரீ சீதா ராம விவாக மஹோத்ஸவம்
 வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், ஹவுசிங் போர்டு பகுதி1-இல் விசேஷமாய் அலங்கரிக்கப்பட்டுள்ள பந்தலில் ஏப்ரல் 13, மாலை 4.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள்ளாக, ஸ்ரீ சீதா தேவிக்கும் ஸ்ரீ ராமசந்திர மூர்த்திக்கும் விவாக மஹோத்ஸவம் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 94432 70477 / 99436 68769.
 வார்ஷிக உற்சவம்
 திருக்கழுக்குன்றம் அருகில் வல்லிபுரம் கிராமத்தில் ஸ்ரீ அம்புஜவல்லி நாயிகா சமேத ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் 12 -ஆவது வார்ஷிக உற்சவம், ஏப்ரல் 17- ஆம் தேதி, திருவீதிவுலா, திருமஞ்சனம், அன்னப்பாவாடை போன்ற வைபவங்களுடன் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 98408 16446.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com