லக்ன பலம்
By DIN | Published On : 04th January 2019 10:00 AM | Last Updated : 04th January 2019 10:00 AM | அ+அ அ- |

லக்னாதிபதி ஆட்சி உச்ச பலத்துடன் இருக்க வேண்டும். அதோடு 6,8,12 ஆம் வீடுகளில் மறையாமல் இருக்க வேண்டும்.
லக்னாதிபதி நட்பு, சமம் என்கிற சாதாரண பலத்துடன் நின்றாலும் 3,6,8,12 ஆம் வீடுகளில் மறையாமல் நிற்பது நல்லது.
லக்னாதிபதிக்கு சூரிய, சந்திரபகவான்கள் கேந்திரம் பெற்று நிற்பது லக்னத்திற்கும் லக்னாதிபதிக்கும் வலுவூட்டும்.
சூரிய, சந்திர பகவான்கள் நிற்கும் வீட்டின் அதிபதிகள் 1,5,9 ஆம் இடங்களில் நிற்பதும் லக்னத்திற்கு வலுவினைக் கூட்டும்.
லக்னாதிபதியுடன் அதிக கிரகங்கள் சேர்ந்து நிற்பதும் லக்னாதிபதி நின்ற வீட்டிற்கு 4,5,7,10 ஆம் இடங்களில் அதிக கிரகங்கள் இருப்பதும் லக்னம், லக்னாதிபதி மற்றும் ஜாதகத்திற்கு வலுக்கூடும்.
லக்னாதிபதி நின்ற இடத்திலிருந்து 6,8,12 ஆம் வீடுகளில் கிரகங்கள் எதுவும் இல்லாமல் இருப்பது லக்னம் வலுவடைய உதவும்.
சுகாதிபதி எனப்படும் நான்காம் வீட்டுக்குரியவர் வலுவுடன் நல்ல இடங்களில் நின்றால் லக்னம் வலுவடையும்.
லக்னத்தையும் லக்னாதிபதியையும் அசுபர்கள் பார்வை செய்யக் கூடாது. லக்னாதிபதியுடன் அசுபர் சேர்க்கைக் கூடாது.
லக்னம் வலுத்திருப்பதால் அந்த ஜாதகர் யோக சுபராக விளங்குவார்.
- கே.சி.எஸ். ஐயர்