அல்லல் அகற்றும் அனுமந்தராயன்!

ராமாயணக் காலம் முதல் இன்று வரை, "இடுகம்பாளையம் அனுமந்தராயர்கோயில்' என்றும் "ஜயமங்கள ஆஞ்சநேயர் கோயில்' என்றும் அழைக்கப்படும் இக்கோயில் ஒரு குறுகலான
அல்லல் அகற்றும் அனுமந்தராயன்!

ராமாயணக் காலம் முதல் இன்று வரை, "இடுகம்பாளையம் அனுமந்தராயர்கோயில்' என்றும் "ஜயமங்கள ஆஞ்சநேயர் கோயில்' என்றும் அழைக்கப்படும் இக்கோயில் ஒரு குறுகலான நிலப் பரப்பில் அமைந்திருக்கின்றது. இடுகம் என்றால் சுருக்கம் என்பது பொருள். பரந்து விரிந்திருந்த நிலப்பரப்பின் சுருக்கமான பகுதி இடுகம் எனப்படுகிறது.
 வியாசராய தீர்த்தர் இங்கு வந்தபோது, பாறையொன்றில் ஆஞ்சநேயர் தியானம் செய்யும் காட்சி நிஷ்டையில் தட்டுப்பட, அனுமன் நின்ற பாறையில் அதே கோலத்தில் மங்களங்கள் அருளும் ஜெயமங்கள ஆஞ்சநேயரின் திருவுருவத்தைத் தாமே பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவர் நிறுவிய ஆஞ்சநேயர் சுயம்புமூர்த்தியாக எட்டடி உயரமுடைய பாறையில் சுமார் ஆறு அடி உயரமும் 5 அடி அகலமும் உடைய புடைப்பாக உள்ளது. நேரான பார்வை, இடது கையில் சவுகந்தி மலர், வலது கையால் ஆசி செய்வதாக அமைந்துள்ளது. தலைக்கு பின்புறமாக வளைந்து தோன்றும் வாலில் மணி கட்டப்பட்டுள்ளது. கால்களில் தண்டையுடன் காட்சி தருகிறார். கோயிலின் முன்புறம் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த தீப ஸ்தம்பம் உள்ளது. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் வாயு புத்திரனான அனுமந்தராயப் பெருமான் எழுந்தருளியுள்ளார்.
 ஜெயமங்கள ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்குத் தென்புறத்தில் விநாயகரும், கன்னிமூலையில் ராமர் பூசித்த ராமலிங்கேஸ்வரரும் திருநந்தி தேவரும் செல்வமுத்துக்குமரன், பர்வதவர்தினி அம்மன் சந்நிதிகள் உள்ளன. ராமலிங்கேஸ்வரர் கோயிலும் அற்புதங்கள் பல கொண்டதாகும். கருவறைக் கடவுள் ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபட நவகிரக தோஷங்கள் நீங்குவதோடு, குழந்தை பாக்கியம், திருமணம் கை கூடும். சுபகாரியங்களில் இருக்கும் தடைகளும் நீங்குகிறது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், ஒரு கைப்பிடி அரிசியை தங்கள் வீட்டிலேயே தனியாக எடுத்து வைத்து முப்பது நாள்கள் முடிந்ததும் கோயிலில் கொண்டு வந்து சமர்ப்பிக்கின்றார்கள். காணிக்கையாக வரும் அரிசியைக் கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது. வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள், ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை, மூல நட்சத்திர நாள், பெüர்ணமி, புரட்டாசி சனிக்கிழமைகள், விஜய தசமி, கார்த்திகை தீபம், தனுர் மாதம், தைத்திருநாள், ராமநவமி, ஆகியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
 அல்லல் நீங்க வேண்டி வெண்ணெய்காப்பு சார்த்துதல் சந்தனக் காப்பு அலங்காரம், வெள்ளிக்கவசம், பெüர்ணமி திருவிளக்கு பூசை, வடைமாலை, வெற்றிலைமாலை சாத்துதல், திருமஞ்சனம், சஹஸ்ரநாம பூஜை, பூ கேட்டல் போன்ற பிரார்த்தனைகள் பக்தர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.
 தினமும் காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஆறுகால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மதிய நேரம் திருக்கோயில் நடைசாத்துவது வழக்கத்தில் இல்லை.
 அனுமத் ஜயந்தி விழா இத்திருக்கோவிலில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 2019 -ஆம் வருடம் ஜனவரி 5 -ஆம் தேதி நடைபெற இருக்கும் அனுமத் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அருகில் உள்ள சிறுமுகைப்புதூர் அருள்மிகு கோதண்டராமர் கோயிலில் இருந்து பாதயாத்திரை ராமர் மாலை மரியாதைகளுடன் புறப்பட்டு வந்து கோயிலை பிற்பகல் அடையும். அன்று காலையே ஸ்ரீமஹாசுதர்சன ஹோமமும் 108 கலச திருமஞ்சனமும் லட்சார்ச்சனையும் நடைபெறும். பின்னர், பஜனை கோஷ்டி மூலம் வந்த மாலை மரியாதைகள் அனுமந்தனுக்கு முடிந்து தீபாராதனையும் நாம சங்கீர்த்தனமும் நடைபெறும். மாலை 5.00 மணிக்கு புறப்பாடு நடைபெறும்.
 கோவை மாவட்டம், இடுகம்பாளையம் சிறுமுகையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இவ்வாலயம்.
 தொடர்புக்கு: 99653 69873 / 97878 88983.
 - க. இராமஜோதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com