

இறைவனின் படைப்பில் மனிதனின் படைப்பு மிகவும் சிறப்பானது. மனிதனின் உடல் உறுப்புகளில் இரு கரங்கள் மிகவும் சிரேஷ்டமானது. ஐந்து விரல்களையும் உள்ளங்கையுடன் சேர்த்து மணிக்கட்டுடன் இணைத்து, முழங்கை, தோளுடன் பொருத்தியுள்ளார்.
கையின் மூட்டுகள் மிகவும் சிறப்பு மிக்கவை. கையை எப்படியும் அசைக்கலாம், திருப்பலாம், உயர்த்தலாம். பிறப்பில் இரு கரங்களும் சம செயல்பாடு உடையவை. மேலும் அனைத்து விரல்களின் செயல்பாடுகளையும் நாம் போற்றியே ஆக வேண்டும். அத்தனை சிறப்புமிக்கவை நமது கரங்கள்!
வேதாகமத்தில் கையில்லாத ஒருவரின் செய்தி உள்ளது. இயேசு ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே செயல்பாடு இல்லாத கையையுடைய ஒரு மனிதன் இருந்தான். இயேசு ஓய்வு நாளில் அவனை சுகமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று நோக்கமாயிருந்தார்கள் சிலர்.
அப்பொழுது இயேசு, செயல்பாடு இல்லாத கையுடைய மனிதனை நோக்கி, "" எழுந்து நடுவே நில்'' என்று சொன்னார். கூடியிருந்தவர்களைப் பார்த்து ஓய்வு நாளில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ எது நியாயம் என்பதை எடுத்துச் சொல்லியும் அவர்கள் பேசாமல் இருந்தனர். அவர்களின் இதயம் அத்தனை கடினமாக இருப்பதை எண்ணி அவர் விசனப்பட்டு கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்தார். அந்த மனிதனை நோக்கி, "" உன் கைகை நீட்டு'' என்றார். அவன் நீட்டினான். அவனது கை மறுகையைப் போன்று சொஸ்தமாயிற்று. (மாற்கு 3:1-5)
பிறவியிலேயே அவனது வலதுகை சரியாக வளர்ச்சி அடையாத நிலையிலேயே அவன் பிறந்திருந்தான். இருகரங்கள் இருந்தால்தான் வேலை செய்து பிழைக்க முடியும். ஆனால் தெய்வமாகிய இயேசு , "கையை நீட்டு' என்றார். "என்ன அற்புதம்! குறைபாடுடன் இருந்த அவனது கை நன்றாக செயல்படும்படி ஆயிற்று.
மனிதனால் ஆகாதவை இறைவனால் கூடும். இவ்வாறு நமக்கு இப்பிறவியைத் தந்து எல்லா உறுப்புகளையும் தாயின் கருவில் உருவாக்கிய கர்த்தர் நல்லவர். நாம் பெற்றிருக்கும் இவ்வுருவம் நம்மை குறைவின்றி படைத்தமைக்கு தினமும் இருகரம் குவித்து வணங்குவோம். கர்த்தரின் அருள், அன்பு, ஆசீர்வாதம் நம்மை மகிழ்வாய் இப்பிறவியில் காக்கும்.
- தே. பால் பிரேம்குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.