நவக்கிரகங்களும் நவரத்தினங்களும்...!

எண்- 1, அதிதேவதை- சிவபெருமான்,  சிவப்பு நிறம். தேர்- மயில், உலோகம்- தாமிரம், தானியம்- கோதுமை, மலர்- செந்தாமரை -பூஜைக்குரியது , எருக்கு சமித்து- யாகத்திற்குரியது, சத்திரியர், குணம்-
நவக்கிரகங்களும் நவரத்தினங்களும்...!
Updated on
1 min read

சூரியபகவான்:  எண்- 1, அதிதேவதை- சிவபெருமான்,  சிவப்பு நிறம். தேர்- மயில், உலோகம்- தாமிரம், தானியம்- கோதுமை, மலர்- செந்தாமரை -பூஜைக்குரியது , எருக்கு சமித்து- யாகத்திற்குரியது, சத்திரியர், குணம்- குரூரம், சுவை- காரம், நோய்- பித்தம், ஆண் கிரகம், நடுத்தர உயரம், மொழி -சம்ஸ்கிருதம், தலம்- ஆடுதுறை, நவரத்தினம்- மாணிக்கம். சூரிய ஆதிக்கமுடையவர்கள் மாணிக்கம் (ரெட்கார்னெட்) ரூபி, டொபாஸ் கல் வைத்து தங்க மோதிரம் செய்து அணிந்தால் சகலத்திற்கும் யோகம் தரும். 

பலன்கள்: தனிமையில் இனிமை காண்பார்கள். பெருந்தன்மை உண்டாகும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். விபத்து, கண்டம் ஏற்படாது. பிரபுத்துவம் பெறுவார். திருப்திகரமான வாழ்வு அமையும். வயிற்றுக்கோளாறு ஏற்படாது. 

சந்திரபகவான்:  எண்- 2, அதிதேவதை- பார்வதி தேவி, நிறம் - வெண்மை, ரத்தினம்- முத்து, உலோகம்- ஈயம், தானியம்- நெல், மலர்- வெள்ளை அல்லி மலர் பூஜைக்குரியது. முறுக்க மர சமித்து யாகத்திற்குரியது. வைசியர், வளர்பிறையில் சௌம்யர், தேய்பிறையில் குரூரர், சுவையில் தித்திப்பு, சிலேத்தும வியாதி, தென்கிழக்குக்கு அதிபதி, பெண் கிரகம். தமிழ்மொழி ஆதிக்கம் உடையவர்கள், நல்முத்து, வெண்பவழம், சந்திரகாந்தக் கல் வைத்து வெள்ளியில் மோதிரம் செய்து அணிந்தால் அது சகலத்திற்கும் யோகம் தரும். 

பலன்கள்:  தைரியம், துணிவு இருக்கும். வைராக்கியம் உண்டாகும். கௌரவம், பதவி, அந்தஸ்து அமையும். காரிய சித்தி உண்டாகும். உயர்பதவி பெறுவார்கள்.

செவ்வாய்பகவான்:  எண்- 9, அதிதேவதை சுப்பிரமணியர், சிவப்பு நிறமுடைவன். அன்ன வாகனம், செம்பு  உலோகம், சண்பக மலர் பூஜைக்குரியது. கருங்காலி சமித்து யாகத்திற்குரியது. துவரை நவதானியம், சத்திரியர், குரூர குணமுடையவர், தனவான், துவர்ப்பு, பித்தநோய், தெற்கு திசை பரிபாலனம், ஆண் கிரகம், மந்திர ஜபதப பாஷை, செம்பட்டு வஸ்திரம் ஏற்றது. தலம்- வைதீஸ்வரன்கோயில். நவரத்தினங்களில் ஏற்றது பவழம். செவ்வாய்பகவானின் ஆதிக்க குணமுடையவர்கள் பவழம் (கோரல்), பிளட் ஸ்டோன் கல் வைத்து தங்கத்தில் மோதிரம் அணிந்தால் அது சகலத்திற்கும் யோகம் தரும். பலன்கள்:  செல்வம் சேரும், வெற்றி கிட்டும். எதிரிகள் வசப்படுவார்கள்.

புதபகவான்:  எண்- 5, அதிதேவதை- மகாவிஷ்ணு, பச்சை நிறம், குதிரை வாகனம், பித்தளை உலோகம், வெண்காந்தள் மலர் பூஜைக்குரியது,  நாயுறுவி சமித்து யாகத்திற்குரியது. சுவையில் உப்பு, வாத நோய், வடகிழக்கு திசை பரிபாலனம், அலி கிரகம், ஜோதிட பாஷை சம்பந்தப்பட்டவர், பட்டு வஸ்திரம், தலம் -மதுரை சொக்கநாதர், நவரத்தினங்களில் ஏற்றது மரகதப்பச்சை. 

புதபகவானின் ஆதிக்கமுடையவர்கள் மரகதப்பச்சை, ஆனெக்ஸ், ஜேடு போன்ற கல் வைத்து வெள்ளியில் மோதிரம் அணிந்தால் அது சகலத்திற்கும் யோகம் தரும். 

பலன்கள்:  சகலத்திலும் வெற்றி உண்டு. வியாபார லாபம் கூடும். செல்வம் பெருகும். அனைவரும் வசமாவார்கள். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் அடுத்தடுத்து நடைபெறும்.

தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com