

(தொடர்ச்சி...)
குருபகவான்: எண்- 3, அதிதேவதை பிரம்மன், மஞ்சள் நிறம், யானை வாகனம், உலோகம்- பொன், முல்லை மலர் பூஜைக்குரியது, அரச மர சமித்து யாகத்திற்குரியது. நவதானியம் - கொண்டைக்கடலை, பிராமணன், சௌமியர், சுவையில் தித்திப்பு, வாத நோய், வடகிழக்கு திசைக்கு அதிபதி, ஆண் கிரகம், நெடியர், சம்ஸ்கிருத பாஷை, மஞ்சள் நிறப்பட்டாடை ஏற்றது. தலம்- திருச்செந்தூர் முருகப்பெருமான், நவரத்தினங்களில் புஷ்பராகம் ஏற்றது.
குருபகவானின் ஆதிக்கமுடையவர்கள் கனக புஷ்பராகம். செவ்வந்திக்கல், டோபாஸ் கல் வைத்து தங்கத்தில் மோதிரம் செய்து அணிந்தால் அது சகலத்திற்கும் யோகம் தரும்.
பலன்கள்: உத்தமர், நாணயஸ்தர், வாக்கு சுத்தமானவர், பாக்கியவான், பிதுர்பக்தி பெருகும், பதவி உயரும். நல்ல ஆலோசகர் என்று பெயர் பெறுவார். பெண்களால் ஆதாயமுண்டாகும். தெய்வ பக்தி உடையவர். எழுத்து, கலை, புராணம், இதிகாசம், ஜோதிட மந்திர சாஸ்திரத்தில் உயர்வான முன்னேற்றம் உண்டாகும். அரசு உதவி கூடுதலாகக் கிடைக்கும்.
சுக்கிரபகவான்: எண்- 6, அதிதேவதை லட்சுமி, வெண்மை நிறம், கருட வாகனம், வெள்ளி உலோகம், வெண் தாமரை மலர் பூஜைக்குரியது, நவதானியங்களில் மொச்சை, பிராமணர், சௌமியர், சுவையில் தித்திப்பு, சிலேத்தும வியாதி, கிழக்கு திசை பரிபாலனம், பெண் கிரகம், நடுத்தரமானவர், தெலுங்கு மொழிக்கு ஆதிக்கம் செய்பவர், வெண்பட்டு வஸ்திரம் ஏற்றது. தலம்- ஸ்ரீரங்கம், நவரத்தினங்களில் ஏற்றது வைரம்.
சுக்கிரபகவானின் ஆதிக்கமுடையவர்கள் வைரம், டர்குவாய்ஸ், ஐயோலைட் போன்ற கல் வைத்து வெள்ளியில் மோதிரம் செய்து அணிந்தால் அது சகலத்திற்கும் யோகம் தரும்.
பலன்கள்: கம்பீரமான தோற்றம் உண்டாகும். கலை வளரும், தனம், வாக்கு, சௌபாக்கியம் கூடிவரும். நண்பர்கள் உறவினர்களால் அனுகூலமுண்டு. பெண்களால் முன்னேற்றம் பெறலாம்.
சனிபகவான்: எண்- 8, அதிதேவதை எமன், கறுப்பு நிறம், காக்கை வாகனம், உலோகம் இரும்பு, கருங்குவளை மலர் பூஜைக்குரியது, வன்னி மரச் சமித்து யாகத்திற்குரியது. குரூரர், சுவையில் கசப்பு, வாதநோய், மேற்கு திக்கு பரிபாலனம், அலி கிரகம், பல பாஷைக்குரியது. கருப்பு பட்டு வஸ்திரம் ஏற்றது. நீலக்கல் சனிபகவானின் ஆதிக்கமுடையவர்கள் நீலம், கார்னெட், அம்பர், கிருஷ்ண காந்தக்கல் வைத்து தங்கத்தில் மோதிரம் செய்து அணிந்தால் சகலத்திற்கும் யோகம் தரும். சிலர் வெள்ளியில் அணிவது நலம் என்பார்கள். இரண்டும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே.
பலன்கள்: நினைத்ததை முடிப்பவர், தாயாதிகள் வசமாவார்கள். மனைவியால் அனுகூலமுண்டாகும். வீடு, மனை, நிலபுலன் விவகாரங்களிலும், கோர்ட் விவகாரங்களிலும் வெற்றியைத் தேடித் தரும். மேலதிகாரிகளால் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.