பொன்மொழிகள்!

உணவு கேட்டு தன்னிடம் வந்து நிற்பவனுக்கு உணவு அளிப்பவனே, "தானம் செய்தவன்' எனப்படுகிறான். அவனுக்கு வேள்வியின் பயன் முழுதும் கிடைக்கிறது. அவன் பகைவர்களையும் நண்பனாகப் பார்க்கிறான்.
பொன்மொழிகள்!
Updated on
1 min read

உணவு கேட்டு தன்னிடம் வந்து நிற்பவனுக்கு உணவு அளிப்பவனே, "தானம் செய்தவன்' எனப்படுகிறான். அவனுக்கு வேள்வியின் பயன் முழுதும் கிடைக்கிறது. அவன் பகைவர்களையும் நண்பனாகப் பார்க்கிறான்.

-யஜுர் வேதம்

சர்வசக்தி வாய்ந்த இறைவனின் சக்தியே உலகத்தின் தோற்றத்துக்குக் காரணம். உலக சிருஷ்டியில் இறைவன் எந்தவித மாறுதலையும் அடைவதில்லை. உலக சிருஷ்டி, அவருடைய சக்தியின் செயலே தவிர வேறில்லை. அவர் அதில் சம்பந்தப்படுவதில்லை. 

-ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்

பரம்பொருளான பரமாத்மாவிடம் குறை எதுவும் கிடையாது. அது குறைபாடு எதுவும் அற்றதாகவும், எல்லாக் குணங்களும் பொருந்தியதாகவும் விளங்குகிறது.

-பிரம்ம சூத்திரம் 3.2.11

பகவான் கூறியது: என்னுடைய தெய்விகக் குணங்களையும் லீலைகளையும் கேட்பதாலும், கீர்த்தனம் முதலியவற்றைச் செய்வதாலும், என்னிடம் கங்கையின் பிரவாகம் போன்ற சித்தவிருத்தியுடன் கூடிய உத்தமபக்தி உண்டாகிறது. அந்த பக்தியே சம்சாரமாகிய மரணத்தை வெல்வதாகும்.

-ஸ்ரீ நாராயணீயம்

""இல்லக விளக்கது இருள் கெடுப்பது,
     நல்லக விளக்கது நமசிவாயவே.''

பொருள்: "நமசிவாய' என்ற மந்திரம் உள்ளத்தில் விளக்காக இருந்து, மனதில் உள்ள இருளை நீக்குகிறது. நன்மைகள் வழங்கும் விளக்காக, "நமசிவாய' என்ற திருவைந்தெழுத்து விளங்குகிறது.

 -அப்பர் 1.111

பகைமை எதையும் அழிக்கிறது; அன்பு எதையும் வளர்க்கிறது. இரண்டிற்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கிறது.     

-நீதி சாஸ்திரம்

வேடர்கள் ஒரு மானைக் காட்டி மற்றொரு மானைப் பிடிக்கிறார்கள். அதுபோல் இறைவன் நம்மைப் போன்று மனித உடல் எடுத்து வந்து, நம்மை வசப்படுத்துவான். அதை உணர்வதே வழிபாடாகும்.

-ஞானரத்னாவளி

உண்மையில் என் இயல்பான தன்மையும், அந்தப் பரம்பொருளும் ஒன்றேதான்.

-அவதூத கீதை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com