பிறவிப்பிணி தீர்க்கும் திருமூலட்டான நாதர்!

தொண்டை மண்டலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஊர்களும், திருக்கோயில்களும் அமைந்துள்ளன.
பிறவிப்பிணி தீர்க்கும் திருமூலட்டான நாதர்!
Published on
Updated on
1 min read

தொண்டை மண்டலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஊர்களும், திருக்கோயில்களும் அமைந்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி வட்டத்தில் (வந்தவாசி-திண்டிவனம் சாலையில்) தெள்ளாறு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் அமைந்துள்ளது. தெளிந்த நீர் ஓடிய ஆறு என்று இவ்வூர் சிறப்பாக அழைக்கப்பட்டிருக்க வேண்டும். கல்வியில் சிறந்த சான்றோர்கள் நிறைந்த ஊராகவும் விளங்குகிறது. இவ்வூருக்கு வடக்கே சுமார் 25 கி.மீ. தொலைவில் வழிபாட்டு சிறப்புமிக்க செய்யாறு (திருவோத்தூர் அமைந்துள்ளது) பல்லவ மன்னவனாகிய மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் தெள்ளாற்றில் நிகழ்ந்த பெரும் போர் பல்லவர் வரலாற்றில் சிறப்பு பெற்று விளங்குகிறது.

பாண்டியர்களை வென்ற பல்லவ மன்னர் "தெள்ளாறு எறிந்த நந்தி' என்று புகழ் பெற்றான் நந்திக்கலம்பகம் இம் மன்னனின் சிறப்பை போற்றுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இவ்வூரில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ மூலட்டானேசுவரர் திருக்கோயிலில் அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய வாயிலுக்குள் நுழைந்தவுடன் மகாமண்டபம்,  அர்த்த மண்டபம்,  அந்தராளம் கருவறை என்ற அமைப்பில் திருக்கோயிலில் அமைந்துள்ளது. கருவறையில் ஸ்ரீ மூலட்டான நாதர் வட்டவடிவமான ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கத்திருமேனியராகக் காட்சி அளிக்கிறார். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி அம்பாள் அகிலாண்டேஸ்வரி சந்நிதியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் அழகிய வடிவினைக் கொண்டு வணங்கலாம். திருச்சுற்றில் கன்னிமூல கணபதி, வள்ளி தேவசேனை சமேத ஸ்ரீ சண்முகப்பெருமான் சந்நிதிகள் அமைந்துள்ளன.

இக்கோயிலில் வைப்புத்தலம் என்ற சிறப்பும் உடையது. திருநாவுக்கரசரும், சுந்தரரும் தமது திருப்பதிகங்களில் இத்தளத் தினைப் போற்றிப் பாடியுள்ளனர்.

ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து வெண்குன்ற கோட்டத்து விக்கிரம பாண்டிய வளநாட்டு தெள்ளாறு நாட்டுத் தெள்ளாறு என்று குறிக்கப்படுகிறது. மேலும் இங்கு எழுந்தருளி அருள் புரியும் இறைவன் மூலேசுவரர், தெள்ளாறுடையார் எனவும், கோயில் திருமூலட்டானம் உடையார் கோயில் என்றும் குறிக்கப்படுகிறது.

வழிபாடு சிறப்பு :

வழிபாடு சிறப்புமிக்க இத்திருக்கோயிலில் 2014-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. மனஅமைதியடைய சனி தோஷம் நீங்க மற்றும் பிறவிக்கடன் தீர்க்க வழிபாடு செய்யவேண்டிய அற்புத தலமாக தெள்ளாறு திருக்கோயில் விளங்குகிறது. தமிழ் இலக்கியமான நந்திக்கலம்பகமும், திருமுறைகள் போற்றும் "வைபவத்தல' என்ற சிறப்புடனும் விளங்கும். தெள்ளாறு ஸ்ரீ மூலட்டானநாதரை வழிபட்டு வலமான வாழ்வு பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com