குரு பகவானுக்கு ராசியானவை!

எண்: 3; அதிதேவதை பிரம்மன்; மஞ்சள் நிறம்; யானை வாகனம்; உலோகம் பொன்; முல்லை (மலர் - பூஜைக்குரியது) யாகத்திற்குரியது - அரச மர சமித்து; நவதானியம் கொண்டைக்கடலை; ஜாதி பிராமணர்
குரு பகவானுக்கு ராசியானவை!
Published on
Updated on
1 min read


எண்: 3; அதிதேவதை பிரம்மன்; மஞ்சள் நிறம்; யானை வாகனம்; உலோகம் பொன்; முல்லை (மலர் - பூஜைக்குரியது) யாகத்திற்குரியது - அரச மர சமித்து; நவதானியம் கொண்டைக்கடலை; ஜாதி பிராமணர், செüமியர்; சுவை தித்திப்பு, நோய் வாத நோய்; திசை வடகிழக்கு; பால் ஆண் கிரகம்; நெடியர் தோற்றம்; மொழி ஸம்ஸ்கிருதம்; மஞ்சள் நிறப் பட்டாடை ஏற்றது; கிரக ஸ்தலம் - திருசெந்தூர் முருகப்பெருமான், ஆலங்குடி, தென்குடித் திட்டை; நவரத்தினம் - புஷ்பராகம், செவ்வந்திக் கல், டொபாஸ்ட், ஜிர்கான் போன்ற கல் வைத்து தங்கத்தில் மோதிரம் அணிந்தால் அது சகலத்திற்கும் ஏற்றது.

குரு பலன்கள்: குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் உத்தமர், நாணயஸ்தர், வாக்கு சுத்தமுள்ளவர், பாக்கியவான், பிதுர் பக்தி பெருகும், பதவி உயரும், நல்ல ஆலோசகர் என்று பெயர் பெறுவர். பெண்களால் ஆதாயமுண்டாகும். அரசு உதவி கூடுதலாகக் கிடைக்கும். பொதுவாக குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த மனிதர்களாகவும் ஒரு சமூகத்துக்கோ ஊருக்கோ தலைவர்களாக இருக்கும் பாக்கியம் உண்டு. ஏராளமான புத்திர பாக்கியம் உண்டு. பணமுடை அடிக்கடி ஏற்பட்டாலும் தக்க சமயத்தில் தெய்வத்தின் அனுகூலத்தால் பணம் கிடைத்துவிடும். வாழ்க்கையில் இவருக்குப் பல சோதனைகள் ஏற்படும். சோதனைகளால் ஸ்புடம் போடப்படுவதால் பெரும் அறிவாளியாகிறார்.

குரு பார்க்க கோடி பாப நிவர்த்தி: ராகு / கேது பகவான்கள் 3, 6, 8, 12 இல் மறைந்திருந்தால் அவர்கள் தசையில் பிரபல யோகம் உண்டாகிறது. இவர்களை குரு பகவான் பார்த்திருந்தால் சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிவது போல் நல்ல பலன்களே நடைபெறுகின்றன. 

நவகிரங்களில் குரு பகவானுக்குத் தான் முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. சாட்சாத் சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாகி (தென் முகக் கடவுள்), கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களான சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கு (இவர்கள் நால்வரும் பிரம்மாவின் புத்திரர்களாவார்கள்) மெüன குருவாக ஞானத்தை உலகிற்கு உபதேசிக்கிறார்.

குரு பகவான் தேவர்களுக்கு ஆசானாவார். (சுக்கிர பகவான் அசுரர்களுக்கு குருவாவார்) உலகில் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் குரு பலமோ, குருவின் பார்வையோ தேவைப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com