

ராகு பகவானை குரு பகவான் பார்வை செய்வதால் என்ன பலன் உண்டாகும் என்று பார்ப்போம்:
புகழ் உண்டாகும், நடிப்புத் துறையில் வெற்றி கிடைக்கும்.
வெளிநாட்டுப் பயணங்களுக்கு வாய்ப்பு.
ஸ்பெகுலேஷன், நவீன விஞ்ஞானத் துறைகளிலும் முன்னேற்றம் உண்டாகும். கேது பகவானை குரு பகவான் பார்வை செய்வதால் என்ன பலன் உண்டாகும் என்று பார்ப்போம்:
வேத, வேதாந்தங்களின் விற்பன்னர்.
நூதன விஞ்ஞானத்தில் வளர்ச்சி.
திடீர் அதிர்ஷ்டமும், மந்திர சித்தியும் உண்டாகும்.
அஷ்ட மகா நாக யோகம்:
அஷ்ட மஹா நாகங்களாவன: அனந்தன், குளிகன், வாசுகி, சங்கல்பன், தட்சன், மஹா பத்மன், பத்மன், கார்கோடகன் ஆகியவைகளாகும்.
இதில் கீழே இருந்து பார்க்கும்பொழுது ஒவ்வொரு நாகமும் மற்ற நாகத்தைவிட பலம் பொருந்தியது என்றும், அனந்தன் என்கிற சேஷ நாகம் அனைத்து நாகங்களை விட பலம் பொருந்தியது என்றும் உள்ளது. பொதுவாக ராகு - கேது பகவான்கள் பலம் பொருந்திய மற்ற கிரகங்களுடன் இணைந்திருந்தால் அஷ்ட மஹா நாக யோகம் உண்டாகும். அந்த கிரகம் கொடுக்க வேண்டிய பலனை ராகு - கேது பகவான்கள் தங்கள் கையிலெடுத்துக் கொண்டு தன் பலத்துடன் சேர்த்து பலன் தருவார்கள். இதனால் ராகு-கேது பகவான்களின் தசை - புக்திகளில் மற்ற கிரகத்தின் காரகத்துவங்களும் வலுப்பெறும் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
வசுமதி யோகம்:
உப ஜய ஸ்தானங்களாகிய 3, 6, 10, 11- ஆம் பாவங்களில் சுப கிரகங்கள் இடம் பெற்றிருந்தால் இது வசுமதி யோகமாகும். இப்படிப்பட்ட யோகத்தை அடைந்தவர்கள் வாழ்நாளில் பெயர், புகழ், பணம், வசதி, மதிப்பு, அந்தஸ்துடன் திகழ்வர். ஆறாமிடத்தில் அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு-கேது பகவான்கள் இடம்பெற்றால் அது சிறப்பான யோகமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக ஆறாம் வீட்டில் ராகு பகவான் அமர்ந்திருந்தால் அது அஷ்டலட்சுமி யோகமாகும். இதனால் அந்த தசா புக்தி காலங்களில் எதிர்பாராத அளவில் திடீர் முன்னேற்றம் உண்டாகும்.
அஸ்தாங்கத தோஷம்:
சூரிய பகவானுக்கு ஒரு குறிப்பிட்ட பாகை வரையில் ஒரு கிரகம் சஞ்சரித்தால் அஸ்தாங்கத தோஷம் அல்லது அஸ்தமனம் பெறுவார்கள் என்பது விதி. அதேநேரம் சந்திர பகவான், ராகு - கேது பகவான்களுக்கு அஸ்தாங்கத தோஷம் உண்டாகாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.