Enable Javscript for better performance
நிகழ்வுகள்- Dinamani

சுடச்சுட

  

  108 கோ பூஜை விழா
   காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே (கூழமந்தல் ஏரிக்கரை) எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு விருட்ச விநாயகர் மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகளின் திருக்கோயிலில் ஜனவரி 17- ஆம் தேதி, காணும் பொங்கல் அன்று, காலை 7.00 மணிக்கு ஆலய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் கோ பூஜை துவங்கி நடைபெறுகின்றது. உலக நலன் கருதியும் குடும்ப நன்மைக்காகவும்; காலை 10.00 மணிக்கு 108 பசுக்களை (கன்றுகளுடன்) இடம் பெறச் செய்து, கோ பூஜை விழா நடைபெறுகின்றது. மதியம் 12.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
   தொடர்புக்கு: 94451 20996/ 99435 00878.
   நடராஜர் 4-ஆம் ஆண்டு வீதியுலா
   தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் திப்பிராஜபுரம், சென்னியமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி அருள்புரியும் இரட்டை லிங்கேஸ்வரர், ஸ்ரீ உண்ணாமுலை அம்பிகா சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர், ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீசொக்கநாதர் திருக்கோயிலில் (குழந்தை பாக்கிய பரிகாரத் தலம்) ஜனவரி 10 -ஆம் தேதி காலை 4. 00 மணிக்கு நடராஜர் அபிஷேகமும் மற்றும் வீதியுலாவும் நடைபெறும்.
   தொடர்புக்கு: 94430 86587/ 81242 47647.
   சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆராதனை
   தஞ்சாவூரில் ஸ்ரீ சத்குரு தியாக பிரம்ம 173 -ஆவது வார்ஷிக மகோத்சவம், மகானின் வம்சாவளியினரால் தஞ்சாவூர், தெற்கு வீதி, வரகப்பையர் சந்து இலக்கம் நெ.1407 இல்லத்தில், ஜனவரி 15 -ஆம் தேதி புதன்கிழமை புஷ்ய பகுள பஞ்சமியில் மகானால் ஆராதிக்கப்பட்ட ஸ்ரீ பட்டாபிராமமூர்த்திக்கு அபிஷேக, அலங்கார, தீபாரதனைகளுடன் ஆராதனை உத்சவம் நடைபெறுகின்றது. இதனையொட்டி, நடைபெறும் நிகழ்வுகள்: ஜனவரி 12 - பஜன், அஷ்டபதி, டோலோத்ஸவம்; ஜனவரி 13 - பாகவத பத்ததியில் சீதா ராமர் விவாகம்; ஜனவரி 14 - ராமர் லட்சார்ச்சனை ; ஜனவரி 16 - ஆஞ்சநேய உத்சவம் தொடர்புக்கு: எஸ்.தியாகராஜன் - 63824 30225 / 99441 65489.
   திருவையாற்றில் ஸ்ரீ தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா சார்பில் 173-ஆவது ஆராதனை விழா நிகழ்ச்சிகள் மகானின் சமாதி வளாகத்தில் ஜனவரி 11-இல் தொடங்கி, ஜனவரி 15 வரை நடைபெறுகின்றது. ஜனவரி 15 -ஆம் தேதி, காலை 9.00 மணி அளவில் நாடெங்கிலுமுள்ள சங்கீத வித்வான்களும், விதூஷிகளும் பங்கேற்று, பஞ்சரத்ன கீர்த்தனைகள் கோஷ்டி கானம் பாடி ஸ்ரீ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்துகின்றனர். அன்று இரவு 8.00 மணிக்கு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் பஞ்சலோக விக்ரம் அலங்காரத்துடன், இன்னிசை, நாதஸ்வர முழக்கத்துடனும் திருவீதி உலா நடைபெறுகின்றது. தஞ்சாவூரிலிருந்து, சுமார் 13 கி.மீ. தூரத்தில் திருவையாறு செல்லலாம்.
   அகல் விளக்கு தீபம்
   செங்கல்பட்டு மாவட்டம், மேலச்சேரி கிராமத்தில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் பௌர்ணமியை முன்னிட்டு, ஜனவரி 10 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி அளவில் 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றப்படுகின்றது. மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்க வேண்டி நடத்தப்படும் இந்த தீபம் ஏற்றும் பெருவிழாவில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்ளலாம்.
   தொடர்புக்கு: 98421 93081 / 94448 65777.
   ஸ்ரீ ரமண ஜயந்தி
   ஸ்ரீரமண மகரிஷிகளின் 140 -ஆவது ஜயந்தி மகோத்சவம், ஜனவரி 11-ஆம் தேதி சனிக்கிழமை, குரோம்பேட்டை ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள ஸ்ரீரமணாலயம் வளாகத்தில் வேத பாராயணம், பூஜை, ரமண சந்நிதி முறை, அட்சர மணிமாலை முதலிய பாராயணங்களுடன் காலை 8.30 மணியிலிருந்து நடைபெறுகின்றது.
   ஆண்டு விழா
   ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் சத்சங்கம் சார்பில் 29-ஆவது ஆண்டு விழா, மேற்கு அண்ணாநகர் தென்றல் காலனியில் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் வசந்த மண்டபத்தில் ஜனவரி 12 -ஆம் தேதி, கீதை பாராயணம், பக்தி இன்னிசை, சிறப்புரை போன்ற நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகின்றது.
   தொடர்புக்கு: 98418 39052 / 044 - 2618 4740.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai