இயேசுவின் நாமம்

நம் ஒவ்வொருவருக்கும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் பெயராலே அறியப்படுகிறோம்
இயேசுவின் நாமம்

நம் ஒவ்வொருவருக்கும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் பெயராலே அறியப்படுகிறோம். கர்த்தர் ஆதாம் என தாம் படைத்த மனிதருக்கு பெயர் வைத்தார். ஆதாம் தம் மனைவிக்கு ஏவாள் என பெயர் வைத்தான். ஆதாமும் ஏவாளும் நாம் காணும் கர்த்தரால் படைக்கப்பட்ட மரம், செடி, கொடி மற்றும் எல்லா ஜீவன்களுக்கும் பெயரிட்டார்கள்.
 அவர்கள் வைத்த பெயரே அவைகளின் பெயர் ஆயிற்று. பெயர் ஓர் அற்புத அடையாளம். பெயரில் குணம், செயல்பாடுகள் அறியப்படுகிறது. கர்த்தர் ஆதாம்- ஏவாள் வைத்த பெயர்களைக் கண்டு நல்லது என மகிழ்ந்தார். இன்றும் குடும்பப் பெயர் மிகவும் புனிதமாகவும் போற்றத்தக்கதாகவும் கருதப்பட்டு வருகிறது. பெயருக்கு தக்கப்படி பெருமை சேர்க்கவேண்டும். சில பெயர்கள் மிகவும் வெறுக்கப்படுகிறது. ஏனெனில் அப்பெயருக்குரியவர் செய்த தீய செயல்கள் காரணமாக அறியப்படுகிறது.
 குழந்தை இயேசுவுக்கு முன்பே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே இயேசு என்று பெயரிட்டார்கள் (லூக்கா 2: 21). இப்பெயர் அதுவரை யாருக்கும் பெயரிடப்படவில்லை. அப்பெயரின் பொருள் மீட்பர் என்பதாகும். ஆனால் அதன் கருத்து புரியவில்லை.
 குழந்தையின் பெற்றோர் யோசேப்பும் மரியாளும் ஏழைகளாக இருந்ததால் அவர்கள் குழந்தையை தேவ ஆலயத்துக்கு கொண்டு போனார்கள். இறைகட்டளைப்படி பிறக்கும் எல்லா முதல் ஆண் குழந்தைகளும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். எனவே, குழந்தையை எருசலேம் தேவ ஆலயத்துக்கு எட்டாம் நாளில் கொண்டு போனார்கள். அப்போது தமது தகுதிக்கு தக்கபடி காணிக்கையும் கர்த்தருக்கு பலி செலுத்தப்பட வேண்டும். ஏழை தச்சன் குடும்பம் பலி செலுத்த வசதியில்லாததால் ஒரு ஜோடி காட்டுப்புறா குஞ்சுகளை பலிக்காக கொண்டு போனார்கள்.
 ஆலய வாசலில் மிகவும் வயதான பக்தி வைராக்கியம் உள்ள ஒருவர் இருந்தார். அவர் பெயர் சிமியோன். இவர் வேண்டுதல் மிகவும் புதுமையானது. யூதர்களை மீட்க ஒரு தேவகுமாரன் பிறக்க வேண்டும். அக்குமாரனை தான் காணவேண்டும் என தினமும் ஜெபித்தார். ஆண்டுகள் பல கடந்தன. எனவே, பிறக்கும் குழந்தைகள் எல்லாம் எட்டாம் நாள் தேவ ஆலயத்துக்குக் கொண்டு வரப்படும்.
 அப்படி, முதல் குழந்தை கன்னிப்பெண்ணுக்கு பிறந்த தேவகுமாரனை காண தேவ ஆலயத்துக்கு வாசல்படியிலே இரவும் பகலும் ஜெபித்து உபவாசித்து இருந்தார். அவர் உள்ளத்தில் இயேசு குழந்தையை காண ஆவல் மிகுதியானது. "தேவ ஆவியாகிய கர்த்தர் அவரிடம் நீ கர்த்தருடைய கிறிஸ்துவை காணுமுன்னே மரணமடைய மாட்டாய்'' என கூறியிருந்தார். அவ்வாறு, தேவ ஆலயத்தில் காத்திருந்தபோது, இயேசு குழந்தையை அவருடைய பெற்றோர் கொண்டு வந்தார்கள். ""சிமியோன் குழந்தையை கைகளில் வாங்கி, " தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் செய்த உம்முடைய ரட்சணியத்தை என் கண்கள் கண்டது'' என வாழ்த்தினார்.
 சிமியோன் காலங்காலமாக காத்திருந்து குழந்தை இயேசுவைக் கண்டு மிகவும் மகிழ்ந்து வாழ்த்தினார். அவர் உயிர் ஆசை நிறைவேறிற்று. "நம் எல்லாருக்கும் பெயர் உண்டு. நமக்கு அறிவுறுத்தும்போது உன் பெயருக்கு ஏற்றபடி நட, உன் தந்தை உயர்ந்தவர். அவரின் மகன் அவர் பெயருக்கு ஏற்றபடி பெருமையாக இரு. கடவுளின் பெயரைச் சொல்லி அவரின் பிள்ளையான இயேசுவைப்போல் இரு'' என்ற அறிவுரையை எப்போதும் நாம் கேட்கிறோம். நாம் நம் பெயருக்கு ஏற்றபடி பெருமையாக வாழ்தல் வேண்டும். பெயர் பெற்றவராக வாழ்தல் கர்த்தர் விரும்பும் விருப்பம். பெயர் பெற்றோரை உலகம் வாழ்த்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளும். நாம் கர்த்தரின் பிள்ளைகள் அவரின் பெயருக்குத் தக்கபடி வாழ்வோம்.
 இயேசுவின் அருள் நம்முடனும் நமக்குரிய பெயரோடு இருக்கும்.
 - தே. பால் பிரேம்குமார்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com