

சந்தர்ப்பம் வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதுதான் வெற்றிக்கு அடிப்படையாகும்.
-நீதி சாஸ்திரம்
ஹே தேவி! என் மூச்சுக்காற்று என்னைக் கைவிட்ட போதிலும், என் நாவானது உனது புனித நாமத்தை ஜபம் செய்துகொண்டிருக்க வேண்டும் - இதையே நான் உன்னிடம் வரமாகக் கேட்கிறேன்.
-ஸ்ரீ ஆதிசங்கரர்
மேரு மலையை வில்லாகக் கொண்டவர், வெள்ளிமலையான கைலாயத்தின் சிகரத்தில் வசிப்பவர், நாகராஜனை நாண்கயிறாகக் கொண்டவர், திரிபுரர்களை அழித்தவர், தேவர்களால் துதிக்கப்பட்டவர் - அப்படிப்பட்ட சந்திரசேகரனான பரமேஸ்வரனை நான் சரணடைகிறேன். என்னை மரணதேவன் யமனால் என்ன செய்ய முடியும்?
-மார்கண்டேய மகரிஷி இயற்றிய ஸ்ரீசந்திரசேகராஷ்டகம்
கடலுக்குள் ஆமை வாழ்கிறது. அது முட்டையிடுவதற்கு கரைக்கு வந்துவிடும். அதுபோல், கோயிலில் குடியிருக்கும் தெய்வம் மனிதன் பக்தி செய்து வேண்டும்போது, அவனுடைய உள்ளத்திலேயே இல்லம் அமைத்துக்கொள்வான்.
-சிவ வாக்கியர்
நாளை செய்ய வேண்டுமென்றால், அதை இன்று செய். இன்று செய்ய வேண்டுமென்றால், அதை இப்போதே செய். ஒரு கணத்தில் பிரளயமே வந்துவிடலாம்; பின்னர் என்ன செய்து என்னதான் பயன்?
-மகான் கபீர்தாசர்
எல்லோரும் சித்தர்களாக ஆகிவிட முடியாது. தனது சித்தத்தை அடக்குவது என்பது கடினம். ஆனால் சிறந்தவர்களாக விளங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்; மக்கள் தங்களின் எண்ணங்களில் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
-மயான யோகியார்
உலகியல் ஆசைகளை விட்ட நிர்மலமான மனதை, விஷ்ணுவின் திருவடிகளில் குவிக்க வேண்டும்.
-சப்தரிஷிகள் துருவனுக்குச் சொன்னது
""ஈசன்'' என்று கருதி எல்லா உயிர்களையும் நேசத்தால் நினைத்துக்கொள்.
-ஒளவை குறள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.