பொன்மொழிகள்!

கோபம் மனிதர்களைக் கொல்கிறது. அதுவே அடக்கப்பட்டால் மனிதர்களை மேன்மைப்படுத்துகிறது.
பொன்மொழிகள்!
Published on
Updated on
1 min read

கோபம் மனிதர்களைக் கொல்கிறது. அதுவே அடக்கப்பட்டால் மனிதர்களை மேன்மைப்படுத்துகிறது.
-தர்மபுத்திரர் (மகாபாரதம்)

உடல், நீர்மேல் குமிழிபோல் நிலை இல்லாதது, பொருளும் சாஸ்வதமானது அல்ல. நாம் இன்று, "நாளைக்கு நல்ல காரியம் செய்யலாம்' என்று இருக்கக் கூடாது. "நாளை நாம் இருப்போம்' என்பது என்ன நிச்சயம்? நல்ல காரியங்களை நினைத்தவுடனே செய்ய வேண்டும்.
-ஸதாசாரம்

பிரம்மமுகூர்த்தம் என்ற விடியற்காலையில் விழித்துக்கொண்டு அறம், பொருள் ஆகியவை பற்றிச் சிந்திக்க வேண்டும்; அதனால் ஏற்படக் கூடிய உடலுழைப்பைப் பற்றியும் நினைத்துப் பார்க்கவேண்டும்; அது போலவே வேதத்தின் உட்பொருளைத் தியானம் செய்ய வேண்டும்.
-மனுஸ்மிருதி

நீங்கள் இன்பம் துன்பம் ஆகிய இரண்டிலிருந்தும் விலகுங்கள். எதன் மீதும் உணர்வுபூர்வமான பற்று இல்லாமல் வாழ்ந்தால், ஒருவன் தனக்குள் பரமாத்மாவைக் காணலாம்.
-வியாத கீதை

கடவுள், குரு, பெரியோர்கள், தாய், தந்தை ஆகியவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
-நீதி சாஸ்திரம்

உலகியல் ஆசை என்பது துறக்கப்பட வேண்டியஒன்றாகும். ஒழுக்கத்திலிருந்து வழுவாமல் இருக்கும் பொருட்டே திருமணம் போன்றவை ஏற்பட்டிருக்கின்றன. காட்டுமிராண்டிகள் ஒருபோதும் திருமணம் செய்துகொள்வதில்லை. உயர்வான பாதையில் பயணம் செய்யும் பக்குவப்பட்ட மனிதர்களே, "ஒருவனுக்கு ஒருத்தி' என்ற நியதியுடன் வாழ்கிறார்கள். அதாவது அவர்கள் திருமணத்தின் மூலமாகத் துறவை நோக்கிப் பயணம் செய்கிறார்கள்.
-ஸ்ரீ கருட புராணம்

கொடிய பணக்காரர்களுடைய பேச்சுக்கள், அவர்களுக்குச் சேவை செய்வதில் ஈடுபட்ட எங்களால் எப்படியோ பொறுத்துக்கொள்ளப்பட்டன; அவர்கள் முன் கண்ணீரை உள்ளே அடக்கிக்கொண்டு, சூனியமான மனதுடன் சிரிக்கவும் செய்தோம்; பணக்கொழுப்பால் பாழடைந்த மனம் படைத்தவர்களுக்குக் கைகூப்பி வணக்கமும்செய்தோம்.ஆசையே! வீணான ஆசையே! இதைவிட இன்னும் எந்த எந்த வகையில் நீ என்னை ஆட்டி வைக்கப்
போகிறாய்?
- வைராக்கிய சதகம், 4

பக்தியோகம் முக்குணங்களின் மீது பற்று ஏற்படுவதைத் தடுத்து விடுகிறது. ஆகையால் நம்மால் இந்த உலகில்,மகா புருஷர்களைப் பின்பற்றி, அடையக்கூடிய உயர்ந்த பக்தி ஒன்றே சாதனம் செய்யப்பட வேண்டும்.
-ஸ்ரீ நாராயணீயம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com