பொன்மொழிகள்!

சித்தத்தின் மீது வெற்றி கொள்வதற்கு உறுதியான உபாயங்கள் நான்கு இருக்கின்றன.
பொன்மொழிகள்!


சித்தத்தின் மீது வெற்றி கொள்வதற்கு உறுதியான உபாயங்கள் நான்கு இருக்கின்றன. அவை 1. ஆன்மிக தத்துவ நூல்களை ஓதுவது, 2. நல்லோர் பெரியோர்களின் சத்சங்கம், 3.வாசனைகளை (சம்ஸ்காரங்களை) ஒழித்தல், 4. பிராணாயாமம் செய்தல் ஆகியவையாகும்.
-யோகவாசிஷ்டம்

இறந்த பிறகு புண்ணியவான்கள் ஒளி உலகத்திற்கும், பாவிகள் இருள் உலகத்திற்கும் செல்வார்கள்.
-ஸ்ரீ அருணகிரிநாதர்

நம்மிடம் அருள் என்னும் மேலான உணர்வு இருக்க வேண்டும். அது இல்லாதபோது உள்ளத்தில் அறிவு சுடர் விடாது. நாம் அந்த அருளுணர்வின் மூலம்தான் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் வெல்ல முடியும்.
- ஒளவையார்

பாழாய்ப்போன இந்த உலக மாயையை விட்டு மனம் தனித்து நிற்பது எப்பொழுது? மனமானது செம்மையாகத் திகழ்வதுதான் எப்பொழுது?
-சட்டைமுனி சித்தர்

வாழ்க்கையை ஒரு கர்ம யோகமாக வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அந்த ஆன்மிக முயற்சி ஒருபோதும் வீண்போகாது. அந்த முயற்சியில் குற்றம் கிடையாது. சிறிதளவு முயற்சிகூட பெரும் பயத்திலிருந்து ஒருவனைக் காப்பாற்றுகிறது.
-பகவத்கீதை 2.40

பிரம்மத்தைத் தவிர குரு வேறானவர் அல்லர். இது இரண்டு முறையும் சத்தியம்.
-குரு கீதை 1.10

உலகமே ஆத்மாவால் வழி நடத்தப்படுகிறது. ஆத்மாவே அனைத்திற்கும் ஆதாரம். பேருணர்வுப் பொருளான அந்த ஆத்மாவே இறைவன்.
-ஐதரேய உபநிஷதம் 3.3

"இந்த உலகத்தைப் படைத்த இறைவன் ஒருவனே' என்பதை அறிந்து அவனை வணங்க வேண்டும். எந்த விதமான தீய செயல்களையும் செய்யாமல் உத்தமனாக இந்தப் பூமியில் வாழ வேண்டும்.
-கும்பமுனி (அகத்தியர்) சித்தர்

பாத்திரத்தில் ஒரு சிறிய துவாரமிருந்தாலும், அதிலிருந்து எல்லா நீரும் வெளியேறி விடுகிறது. இதுபோலவே ஆத்ம சாதகனின் மனதில் தீய ஆசைகள் ஏற்பட்டால், சாதனையின் பயன் மறைந்துவிடுகிறது.
-மகான்களுடைய சீரிய உபதேசம்

உலகியலின் நடுவில் வாழ்கின்ற மூடர்கள் தங்களை "அறிவாளிகள்' என்றும், "பண்டிதர்கள்' என்றும் கருதுகிறார்கள். அவர்கள் மூப்பு, மரணம் ஆகியவற்றின் வசப்பட்டு உழல்கிறார்கள். குருடனால் வழிகாட்டப்பட்ட குருடர்களைப்போல், இவர்கள் மீண்டும் மீண்டும் பிறவிச்சூழலில் உழல்கிறார்கள்.
-முண்டக உபநிஷதம் 1.1.8

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com