

தொண்டு செய்பவர்கள் பணிவோடு தொண்டு செய்ய வேண்டும்.
-பெரிய புராணம்
இந்த உலகில், பிரபலமான ஒரு பழமொழி இருக்கிறது. அது, ""மனிதன் எதை நினைக்கிறானோ, அதுவாகவே ஆகிறான்!'' என்பதாகும். அதன்படி, தன்னை முக்தனாக நினைப்பவன் முக்தனாகவே ஆவான்; தன்னை பந்தப்பட்டவனாக நினைப்பவன் எப்போதும் பந்தப்பட்டவனாகவே ஆவான். நீங்கள் இந்த உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள்.
-அஷ்டாவக்ர கீதை
ஆராய்ந்து பார்த்தால், உயிர்களைக் கொல்லாமல் இருத்தல் ஒப்பற்ற அறமாகும். அதற்கு அடுத்த இரண்டாவது அறம் சத்தியம் பேசுவதாகும்.
-திருக்குறள், 323
தன் உணவை நண்பர்களுக்கும் தெய்வங்களுக்கும் படைக்காமல் தானே உண்பவன் அறிவிலி. அவன் உண்பது சோறல்ல; அது முழுவதும் பாவம்.
-ரிக் வேதம்
பால் அருந்தும் குழந்தையின் பசுங்குடல் மிகவும் நுட்பமானது. அந்தக் குழந்தைக்குத் தோன்றிய நோயை நீக்குவதற்கு மருந்து அளித்தால், அந்தக் குழந்தையின் குடல் தாங்காது. ஆகவே குழந்தையின் தாய், மருந்தை தன் பாலில் குழைத்துப் புகட்டி குழந்தையின் நோயைத் தீர்க்கிறாள்.
அதுபோல் அருட் சக்தியாகிய சிவகாமி அம்மை, நடராஜரின் திருவருள் நிறைந்த நடனத்தை, தான் கண்டு களிக்கிறார்; பின்பு அவள் ஆன்மாக்களாகிய நமக்கு திருநடனப் பயனை அருள் புரிகிறாள். ஆதலால் நாம் அம்மையுடன் கூடிய ஆனந்தக்கூத்தனையே தரிசிக்க வேண்டும்.
-சிதம்பர மும்மணிக் கோவை
இறைவன் திருநாமத்தை உச்சரிக்கும்போது பக்தி உருக்கம் வேண்டும்.
-ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்
மக்கள் எந்தக் குலத்தில் பிறந்திருந்தாலும் எத்தகையவராக இருந்தாலும் அந்தக் குலத்தில் உயர்ந்த கல்வி கற்றவரையே முதன்மையாக உபசரித்து, ""வருக'' என்று மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.
-நறுத்தொகை - 38
இறைவனின் நாமத்தை ஜபம் செய்யாத நாட்கள் எல்லாம் வீணான நாட்கள் ஆகும்.
-அப்பர் 6.1.1
நன்மை கூறும் நண்பர்களை அவமதித்து நடப்பவன், பிறகு அநேக துன்பங்களை அனுபவிப்பான் என்பது நிச்சயம்.
-துரோணர், மகாபாரதம்
சங்கடத்தில் ஆழ்ந்திருக்கும் பக்தர் "ஸ்ரீ ராமநாமம்' சொன்னால், அவருடைய மிகப் பெரிய கொடிய சங்கடங்கள் விலகிவிடும். அவர் சுகம் அடைவார்.
-துளசிதாசர் (துளசி ராமாயணம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.