பொன்மொழிகள்.. தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

மண்மேல் இளமை, செல்வம், யாக்கை முதலியவற்றின் நிலையாமையை நன்றாக உணர வேண்டும். அவை உள்ளபோதே நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பொன்மொழிகள்.. தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
பொன்மொழிகள்.. தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
Published on
Updated on
1 min read

மண்மேல் இளமை, செல்வம், யாக்கை முதலியவற்றின் நிலையாமையை நன்றாக உணர வேண்டும். அவை உள்ளபோதே நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
-சிலப்பதிகாரம்

உனது திருவருளை கண்ணாரவும், உள்ளத்தாயினும் கண்ட அன்பரைக் கண்டால், உலகத்து மக்களும் விண்ணுலகத் தேவரும் வணங்க மாட்டாரோ? பராபரமே!
-தாயுமானவர், பராபரக்கண்ணி. 

சூரியனைப் பார்த்தபிறகு பனித்துளி தூர விலகி விடுகிறது. அதுபோல், இறைவனுடைய அடியார்கள் படும் துயரங்கள் அனைத்தும் இறைவனுடைய திருவருள் பட்ட உடனேயே தூர விலகிவிடும்.
-பாம்பாட்டிச் சித்தர் 

இறைவனது நாமத்தைப் பாடாமல் இருப்பது, அவனைஅவமதிப்பது போலாகும்.
-மகான் போதேந்திரர்

எவன் ஒருவன் பொங்கி எழும் கோபத்தைப் பாம்பு பழைய தோலை உரித்து நீக்குவதுபோல் பொறுமையால் நீக்குகிறானோ, அவன்தான் ஆண்பிள்ளை எனப்படுவான்.
-வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம் 55.6

இன்பம் அனுபவிப்பதற்கு சொர்க்கமும், துன்பம் அனுபவிப்பதற்கு நரகமும் இருக்கின்றன. இன்ப துன்பங்களுக்கு மேற்பட்ட மேலான ஆன்மிக ஆனந்தத்தை அடைவதற்கு இந்த உலகம் இருக்கிறது.    
-சுவாமி ராம்சுக்தாஸ்
உணவு தேடிவருகின்ற யாரையும் உணவு தராமல் திருப்பி அனுப்பக் கூடாது. இதுஉங்கள் கடமை. எனவே பல வழிகளில் ஏராளமாக உணவை உற்பத்தி செய்ய வேண்டும். யார் எப்போது வந்தாலும், "இவருக்கு உணவு தயாராக இருக்கிறது' என்று சொல்லுமளவிற்கு உணவு தாராளமாக இருக்க வேண்டும்.
-தைத்திரீய உபநிஷதம் 3.10.1

தவறு செய்த மகனைத் தந்தை அடித்தால் உடனே தாய் அவனை அணைப்பாள். தாய் அடித்தால் தந்தை அணைப்பான். இறைவா! எனக்குத் தந்தையும் தாயும் நீயே! அடித்தது போதும். அணைக்க வேண்டும். 
 -வள்ளலார்

கோபத்தால் மனிதன் பிறருக்கு செய்யும் தீமையைவிட, தனக்கே அதிக தீங்கு செய்து கொள்கிறான்.
-ராமகீதை (ஸ்ரீராமருக்கு அவரது குரு வசிஷ்டர் கூறிய அறிவுரை) 

விவேகியின் மனம் கங்கையின் ஆழமான மடுவைப் போன்று சலனமில்லாதது. விவேகி போற்றப்படுகின்றபோது பெருமைப்படுவதில்லை; தூற்றப்படுகின்றபோது  கவலைப்படுவதில்லை. 
- விதுரநீதி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com