பொன்மொழிகள்!

சுற்றம், செல்வம், அழகு, உயர்குலம் முதலிய நலன்கள் நிலையானவை அல்ல.
பொன்மொழிகள்!

சுற்றம், செல்வம், அழகு, உயர்குலம் முதலிய நலன்கள் நிலையானவை அல்ல.
-வாக்குண்டாம்

ஹே விஷ்ணு! உனது திருநாமம் சின்மயமானது;  மிகவும் பிரகாசமானது. அதன் பெருமையே அளவிடற்கரியது. முழுவதுமாகச் சொல்வது இயலாதுதான். ஆனாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கூறுகிறோம். அதனால், நாங்கள் நல்லறிவும் பக்தியும் பெறுவோம்.                
-ரிக் வேதம் 1.15.63

பகவானது திருப்பெயர்களைக் கூறுவதில் ஏதாவது தவறு நேர்ந்தால், அந்தத் தவற்றால் நேரும் பாவங்களை திருநாமமே நீக்குகிறது.    
 -ஸ்மிருதி

ஆயிரம் திருநாமங்கள் கொண்டவரும், ஆயிரம் கோடி யுகங்களை இயக்குபவரும் அழிவற்றவருமான பகவானுக்கு வணக்கம்!
 -ஸ்காந்தம், வைஷ்ணவ காண்டம் - 24.20

ஒருவன் இறந்தபிறகு பரலோகம் செல்கிற வழிக்குக் கட்டுச்சோறு "ஹரி' என்ற இரண்டு எழுத்துக்கள். அந்த இரண்டெழுத்து சம்சார நோய்க்குச் சிறந்த மருந்து; இதுவே இந்த உலகில் துன்பங்களுக்கும், மனநோய்க்கும் மருந்தாகும்.
 -வாமன புராணம்

கம்மல், மூக்குத்தி, வளையல், சங்கிலி என்று அணிகலன்கள் பலவகையாக இருக்கின்றன; என்றாலும், அவை அனைத்தும் பொன்னால் செய்யப்படுபவையாகும். அதுபோல் பல்வேறு உருவங்கள் தெய்வத்திற்கு இருந்தாலும், அந்தத் தெய்வங்கள் அனைத்தும் ஒரே தெய்வத்தின் தோற்றங்களாகும்.
-திருமூலர் 

எந்த தேவி எல்லா உயிர்களிலும் தாய் வடிவத்தில் உறைகிறாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம்.     
-ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள், பாகம் 2, பக் 150

மனிதப்பிறவி பெற்றவன், பற்றற்ற சான்றோர்களின் சத்சங்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த சத்சங்கத்தால் பெற்ற ஆத்மஞானம் (பகுத்தறிவு) என்னும் கூரிய வாள் கொண்டு, தன்னுடைய இந்த உலகத்தில் இருக்கும் தளைகளை அறுத்தெறிய வேண்டும்.

பகவானது கல்யாண குணங்களை வாயாரப் பாட வேண்டும்; பிறர் சொல்லக் கேட்க வேண்டும். அதனால் பக்தியுணர்வு பெற்று, இந்த சம்சார மார்க்கத்தை மிகவும் எளிதாகக் கடந்து பகவானை அடையலாம்.
-ஸ்ரீமத் பாகவதம் 12.5.16

மக்களுக்கு கலியுகத்தில் ஹரியின் திருநாமத்தைத் தவிர வேறு புகலிடமில்லை.
-ப்ரஹந் நாரதீய புராணம் 1.41.15

""அச்சுதா! அநந்தா!  கோவிந்தா!'' என்ற மூன்று நாமோச்சாரண மருந்தினாலேயே அனைத்து நோய்களும் அழிந்துவிடும்  இது சத்தியம் என்று நான் கூறுகிறேன்.
-சரக ஸம்ஹிதை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com