பொன்மொழிகள்!

உண்மையைப் பேச வேண்டும். அதையும் பிரியமாகப் பேச வேண்டும். பிரியமில்லாத உண்மையைச் சொல்லக் கூடாது. பிரியமிருந்தாலும் பொய்யைச் சொல்லக் கூடாது;  இது பழைமையான தர்மம்.
பொன்மொழிகள்!


உண்மையைப் பேச வேண்டும். அதையும் பிரியமாகப் பேச வேண்டும். பிரியமில்லாத உண்மையைச் சொல்லக் கூடாது. பிரியமிருந்தாலும் பொய்யைச் சொல்லக் கூடாது;  இது பழைமையான தர்மம்.
-மனுஸ்மிருதி

யாருமற்ற அனாதைகளையும், ஏழைகளையும் அடித்துத் துன்புறுத்தக் கூடாது. அதனால் வரும் பாவம் எங்குச் சென்றாலும் தொலையாது தொடர்ந்து வந்து வருத்திக்கொண்டே இருக்கும்.                
-கொங்கணச் சித்தர்

ஞானி ஒருபோதும் தனிமையில் இல்லை. அவன் தனக்குள்ளேயே அனைத்திற்கும் அதிபதியான இறைவனுடனேயே இருக்கிறான். 
-இந்து மதம்

சிலர் மண்ணாசைக்கும் பெண்ணாசைக்கும் மயங்காத தூய்மையான இதயம் உள்ளவர்கள். அவர்களிடம் ஸ்ரீமந் நாராயணனாகிய என்னுடைய அருட்சக்தியின் வெளிப்பாடு அதிகமாக இருக்கும். இதற்கு நேர்மாறான வாழ்க்கையில் உழல்பவர்களிடம் ஒருபோதும் நான் வெளிப்படுவதில்லை.    
-கருட புராணம்

நாம் சத்தியம், நற்சொல், நற்செயல், பெருந்தன்மை, பொறுமை என்று உலக நன்மைக்கான வேலைகளில் ஏதாவதொன்றைச் செய்துகொண்டேயிருக்க வேண்டும். இவையெல்லாம் மிகவும் உதவுபவை. 
-மகான்களுடைய சீரிய உபதேசம்

பிறந்தவர்கள் இறப்பதும், இறந்தவர்கள் பிறப்பதும் இயல்பாகும். தர்மம் சிறப்பைத் தரும், அதர்மம்துன்பத்தைத் தரும்.
-மணிமேகலை (கந்தில்பாவை)

நாம் வேத சாஸ்திரங்கள் கற்று தேர்ந்த பெரியோர்களை நமஸ்காரம் செய்ய வேண்டும். அவ்விதம் செய்தால், கற்பகமரம் போல அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு பல நன்மைகளைக் கொடுக்கவல்லது.
-சாஸ்திர நீதிகள்

உழைப்பு உயர்வைத் தரும், நல்ல எண்ணம் நன்மையைத் தரும், ஒழுக்கம் பெருமையைத் தரும்.
-நீதி சாஸ்திரம்

எவ்வளவோ பேசுகின்ற மனிதன், தான் பிறக்கும்போது தன்னுடன் சொத்து சுகங்களை எடுத்து வந்தானா? இல்லை இறந்து சுடுகாடு போகும்போது அவன் எதையாவது எடுத்துக்கொண்டு போகிறானா?
-பட்டினத்தார்

சிவனடியார்கள் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், நடந்தாலும், மென்றாலும், துயின்றாலும், விழித்தாலும், மன்றாடும் சிவபெருமான் திருவடிகளை மறவாத உணர்வு உடையவர்கள்.
-பெரிய புராணம்

தேவசக்தியே தூலப் பொருட்களாகவும், சூட்சும பொருட்களாகவும், அமுதமாகவும் விளங்குகிறது.
-பிரச்ன உபநிஷதம் 2.5

யோகிகள் சிலருக்கு  சிரத்தை, வீரியம், ஞாபகசக்தி, மனஒடுக்கம், மெய்ப்பொருள் உணர்வு ஆகியவைகள் வாயிலாக சமாதி கூடுவதுண்டு.
-பதஞ்சலி யோக சூத்திரம் 

பணம் சேரச் சேர மனமும் மாறிக்கொண்டே போகும். பணத்தாசை பிடித்தவர்களுக்கு நல்ல உறவினர்கள் இருக்கமாட்டார்கள்; பெரியோர்களிடமும் அவர்களுக்கு மதிப்பு இருக்காது
.-சுபாஷிதம் (ஒரு சம்ஸ்கிருத சுலோகம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com