ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்: துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்: துலாம்
Published on
Updated on
2 min read

துலாம் ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.

துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

17.03.2022 முதல் 11.07.2022 வரை உள்ள காலகட்டத்தில் செய்யும் காரியங்களில் சுலபமான வெற்றி உண்டாகும். உங்கள் துறையில் உயர்ந்தோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதியதாகத் தோன்றும் சிந்தனைகளைச் செயல்படுத்துவீர்கள். 

வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பெற்றோரும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உற்றார் உறவினர், உடன்பிறந்தோருக்கும் உதவிகரமாக இருப்பீர்கள். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். இதன் மூலம் செய்தொழிலையும் விரிவுபடுத்துவீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி
கரமான செய்திகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகு முறையின் மூலம் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சிலர் பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்களை வாங்கும் காலகட்டமிது. 

12.07.2022 முதல் 06.02.2023 வரை உள்ள காலகட்டத்தில் புதிய ஊர்களுக்கு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களிடம் மறைமுகமாக இருந்துவந்த திறமைகள் வெளிப்படும். நண்பர்கள், கூட்டாளிகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். வருமானத்தில் இருந்த நெருக்கடிகள், பிரச்னைகள் மறையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமுதாயத்தில் உங்கள் புகழ், பெருமை கூடும். குழந்தைகளையும் உயர்ந்த படிப்புகளில் சேர்ப்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். செய்தொழிலில் ஒரு சிறப்பான தெளிவும், புரிதலும் உண்டாகும்.  

07.02.2023 முதல் 28.11.2023 வரை உள்ள காலகட்டத்தில் அனைவரிடமும் அன்பு பாசத்துடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். செய்தொழிலில் பொறுப்புகள் கூடினாலும் கடின உழைப்பு இராது. இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். சிலர் நண்பர்களுடன் தூரதேசப் பயணங்களை மேற்கொள்வார்கள். 

அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப் பெறுவார்கள். அதோடு வழக்குகளிலும் வெற்றி பெறுவீர்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். 

புதிய இலக்குகளை நிர்ணயித்து பயணிப்பீர்கள். தவறிப்போன வாய்ப்புகள் மறுபடியும் உங்கள் கை வந்து சேரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் மூலம் சில சஞ்சலங்களும் ஏற்படலாம். தைரியத்துடன் செயலாற்றி பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். 

வியாபாரிகள் நண்பர்களுடன் சற்று எச்சரிக்கையுடன் பழகவும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும் பலத்த போட்டிகளைச் சந்திக்க நேரிடும். 

விவசாயிகள் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்களை காண்பீர்கள். திட்டமிட்ட பணிகளில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும். அதிக செலவுகள் செய்து பயிரிடுவதைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகள் மன உளைச்சலுக்கு ஆட்படாமல் இருக்க, ஆன்மிகப் பெரியோர்களை நாடிச்சென்று ஆசிகளைப் பெறுவீர்கள். மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களை ஒதுக்கி விட்டு திறந்த மனதுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். 

கலைத்துறையினர் எதிர்பார்த்த அளவுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். சக கலைஞர்களுக்கும் செலவு செய்து மகிழ்வீர்கள். புதிய வாய்ப்புகள் தேடிவரும். 

பெண்மணிகள் புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதில் கவனமாக இருக்கவும். செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்கவும்.   

மாணவமணிகள் விளையாட்டுகளின்போது விபத்துக்கு இடம் கொடுக்காமல் கவனத்துடன் இருக்கவும். மனதை ஒருநிலைப்படுத்தும் தியானம், யோகா போன்ற கலைகளைக் கற்றுக் கொள்ளவும். 

பரிகாரம்: ஸ்ரீ மீனாட்சி அம்மனை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com