ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்: விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்: விருச்சிகம்
Published on
Updated on
2 min read

விருச்சிக ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.

விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

17.03.2022 முதல் 11.07.2022 வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவீர்கள். மந்தமாக நடந்த காரியங்கள் துரிதமாக நடைபெறத் தொடங்கும். புதிய மாற்றங்களைக் கொண்டுவர முனைவீர்கள். அனைத்து விஷயங்களையும் புதிய கண்ணோட்டத்தில் காண்பீர்கள். சமுதாயத்தில் பொறுப்பான பதவிகள் கிடைக்கும். 

போட்டிகளுக்குத் தகுந்த வியூகங்களை அமைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தினர் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பேச்சு வண்மைனால் நன்மைகளை அடைவீர்கள். நுணுக்கமான பல விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உடலாரோக்கியம் தொடர்பான கஷ்டங்கள் மறையும். சிலர் வசிக்கும் வீட்டை புதுப்பிப்பார்கள். அதேநேரம் அநாவசியச் செலவுகளைத் தவிர்த்து சேமிப்புகளில் ஈடுபட மனம் விழையும் காலகட்டமாக இது அமைகிறது. 

12.07.2022 முதல் 06.02.2023 வரை உள்ள காலகட்டத்தில் புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறுவீர்கள். மனதளவில் புது விதமான உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். குடும்ப பாரத்தை மகிழ்ச்சியுடன் சுமப்பீர்கள். உற்றார் உறவினர்கள், உடன்பிறந்தோரால் பாராட்டப்படுவீர்கள். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தந்தை வழி உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும்.

07.02.2023 முதல் 28.11.2023 வரை உள்ள காலகட்டத்தில் பலதரப்பட்ட சிந்தனைகளுக்கு ஆட்படுவீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்படவும். செய்தொழிலில் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் சிறிது தாமதமாகவே கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் சில நன்மைகள் உண்டாகும். மற்றபடி சோர்வின்றியும், ஓய்வின்றியும் கடினமாக உழைத்து செயலாற்றுவீர்கள். பொருளாதாரம் ஏற்றமாகவே அமையும். 

பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அவர்களை வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். 

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய ஆலயங்களுக்கும் சென்று வருவீர்கள். பயணம் சார்ந்த எண்ணங்கள், சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடத் தொடங்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. 

உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு வெளியூர் அல்லது வெளி மாநிலங்களுக்கு மாற்றலாகிச் செல்லும் நிலைமை ஏற்படும். பயணங்களால் அனுகூலமான திருப்பங்களையும் சந்திப்பீர்கள். வியாபாரிகள் பேச்சுத் திறமையினால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். போட்டிகள் குறைந்து விற்பனையும் அதிகரிக்கும். நாணயத்துடன் நடந்து கொண்டு பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். 

விவசாயிகள் கடுமையாக உழைத்து வெற்றி பெறும் இலக்கை நோக்கி செல்வீர்கள். புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம். மறைமுக எதிரிகளால் சில தொல்லைகள் ஏற்படும். 

அரசியல்வாதிகள் முரட்டுப் பிடிவாதத்தால் சில சங்கடங்களைச் சந்திப்பீர்கள். தெளிந்த மனதுடன் செயலாற்றும் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டம் வந்து சேரும். 

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். தங்கள் செயல்பாடுகளில் தென்பட்ட சோம்பலைத் தவிர்த்து, சுறுசுறுப்பாக உழைத்து வெற்றி காண்பீர்கள். பெண்மணிகள் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து விடுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படலாம். கணவருடன் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடல்நலக்குறைவு ஏற்படலாம். மருத்துவ ஆலோசனை பெறவும்.  

மாணவமணிகள் விளையாட்டுகளில் கவனமாக ஈடுபடவும். பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரைகளை மதித்து நடப்பது நல்லது.  

பரிகாரம்: ஸ்ரீஐயப்ப சுவாமியை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com