காரியத் தடைகள் விலகப்போகுது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்
பிப்ரவரி 25 முதல் மார்ச் 03-க்கான வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார்.


பிப்ரவரி 25 முதல் மார்ச் 03-க்கான வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் புத்துணர்ச்சியும் உண்டாகும் நேரமிது. நிலுவையில் இருந்து வந்த பண பாக்கிகள் திரும்பக் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் அன்பும் ஆதரவும் கூடும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு உதவி செய்து நற்பெயர் எடுப்பீர்கள். உங்கள் திறமைகள் வெளிப்படும். வியாபாரிகள் வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக அமையும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க அதிகம் செலவு செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் சில ஆதாயங்களைப் பெறுவீர்கள். கட்சி உட்பூசல் விஷயங்களில் தலையிடாமல் அமைதியாக இருக்கவும். கலைத்துறையினர் எதிர்பாராத செலவுகளால் திணறுவீர்கள். பொருளாதாரம் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் அனைவருடனும் அனுசரணையாக இருப்பீர்கள். சேமிப்புகள் கரையும். சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். உறவினர்களின் உதவியால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகளுக்கு ஆசிரியர், பெற்றோர் உதவியுடன் உங்கள் முயற்சிகள் பலிதமாகும். விளையாட்டுகளில் வெற்றிகளைக் காண்பீர்கள்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு உகந்தது. அனுகூலமான தினங்கள்: 25, 26. சந்திராஷ்டமம்: இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
வருமானம் படிப்படியாக உயரும் நேரமிது. உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். தோல்வியாகும் என்று நினைத்திருந்த காரியங்கள் யாவும் வெற்றி பெறும். மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் பழகும் போது நிதானமும், கவனமும் தேவை. மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்து பல வசதிகள் உங்களை வந்தடையும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் விரும்பிய பலனைப் பெறுவார்கள். மகசூல் அதிகரித்து சந்தையில் தானிய விற்பனை நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவார்கள். உங்களின் கனவு பலிக்கும். கலைத்துறையினருக்கு வருமானம் நன்றாக இருக்கும். புகழ், கெüரவம் உயரும் நிலை ஏற்படும்.
பெண்மணிகள் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். சில நேரங்களில் அமைதி காப்பது நல்லது. பெரியோர்களின் ஆசி கிடைக்கும். மாணவமணிகளுக்கு ஞாபகசக்தி, அறிவாற்றல் அதிகரிக்கும். விளையாட்டில் வெற்றி வாகை சூடுவீர்கள். படிப்பில் வெற்றி பெற கடுமையான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 28, 01. சந்திராஷ்டமம்: 25, 26, 27.
மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
செல்வத்துடன் செல்வாக்கும் உயரும் நேரமிது. செய்தொழிலில் சில மாற்றங்கள் உண்டாகும். பணவரவும் கூடும். பெற்றோர் வழியில் சிறுசிறு கலகங்கள் உண்டாகும். கடன் தொல்லை நீங்கும். தாழ்வு மனப்பான்மை மறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக ரீதியான பயணங்களால் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். வியாபாரிகள் புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். கூட்டாளிகளைத் தவிர்த்து விடுங்கள். விவசாயிகள் பூச்சி மருந்துகளை சரியாக பயன்படுத்தி வரவும். கால்நடைகளின் பராமரிப்புக்காக மிகுந்த செலவு ஏற்படும். சந்தையில் உங்கள் தானியங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் எந்த ஒரு காரியத்திலும் தீர யோசித்து சரியாக செயல்படவும். புதிய உத்வேகத்துடன் உங்கள் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் தொழிலில் கடுமையான போட்டி நிலவுவதால் உங்களுடைய அந்தஸ்தைப் பெற கடுமையாகப் போராடுவீர்கள்.
பெண்மணிகளுக்கு ஆன்மிக ஈடுபாட்டினால் மனம் தூய்மை அடையும். கணவருடனான ஒற்றுமை அதிகமாக இருக்கும். மாணவமணிகள் மனதை ஒருநிலைப்படுத்தி பாடங்களைப் படிக்கவும். விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள்.
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 26, 27. சந்திராஷ்டமம்: 28, 01.
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
வாக்கு சாதுர்யத்தின் மூலம் ஆதாயம் அடையும் நேரமிது. குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கையும் மேம்படும். மனதிற்கு பிடித்தமான பணிகளில் ஈடுபட்டு திருப்தி அடைவீர்கள். செல்வாக்கு உயரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அமையும். வியாபாரிகள் கூட்டுத்தொழிலின் பலம் மற்றும் பலவீனத்தைப் புரிந்துகொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான சிறந்த காலகட்டமாக இது அமைகிறது. விவசாயிகள் தங்களுக்கு சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். கடுமையாக உழைத்து நல்ல ஆதாயம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கைகூடும். தொண்டர்களின் மூலம் ஆதாயமடைவீர்கள். கலைத்துறையினர் சூழ்நிலைகளை அனுசரித்து முடிவெடுப்பீர்கள்.
பெண்மணிகளுக்கு புனிதத் தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழ்நிலை உண்டாகும். குழப்பமான சிந்தனைகள் மூலம் சோர்வு ஏற்படும். மாணவமணிகள் விடாமுயற்சியுடன் படித்தால் அதிக மதிப்பெண்களைப் பெறலாம். படிப்பிலும், விளையாட்டிலும் உங்கள் திறமை சிறப்பாக வெளிப்படும்.
பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 27, 28. சந்திராஷ்டமம்: 02, 03.
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
செய்தொழிலில் வருமானம் பல மடங்கு பெருகும் நேரமிது. இழுபறியாக இருந்து கொண்டிருந்த வழக்குகளில் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அகலும்.
உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் சில நன்மைகளை அடைவீர்கள். மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் ஜாக்கிரதையாக இருக்கவும். முன் கோபத்தைத் தவிர்த்து, பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். விவசாயிகள் நீர் வரத்து அதிகரித்தாலும் வேலையாட்களின் மூலம் சில பிரச்னைகளை சந்திப்பீர்கள். நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் நிறைவேறும்.
அரசியல்வாதிகளுக்கு உடலாரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பிரயாணங்களை சற்று தள்ளி வைக்கவும். கலைத்துறையினருக்கு பொருளாதார நிலை மேம்படும். பெயரும் புகழும் அதிகரிக்கும்.
பெண்மணிகள் சுப காரியங்களில் பங்கேற்று மகிழ்வீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவரின் பாராட்டுகளைப் பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகள் உடலாரோக்கியம் சீராக இருக்க, யோகா, பிராணாயாமம் போன்றவை செய்து வரவும். உண்பது, உறங்குவது போன்றவற்றை சரியான நேரத்தில் கடைப்பிடிப்பது உத்தமம்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 28, 02. சந்திராஷ்டமம்: இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்த ஆயத்தமாகும் நேரமிது. உடலாரோக்கியமும் மேன்மை அடையும். தெய்வ வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களில் முன்னேற்றப் பாதை புலப்படும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களால் பல தொந்தரவுகளைச் சந்திப்பீர்கள். உங்களின் கெüரவம் பாதிக்காத வகையில் நடந்து கொள்வீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது. விவசாயிகளுக்கு கால்நடைகளால் செலவுகள் அதிகமாகும். பழைய கடன்களை அடைத்து நிம்மதியாக இருப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கூட்டாளிகளால் சிறிது கலகங்கள், குழப்பங்கள் உண்டாகும். எதிலும் கவனமாக இருந்து வரவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலைகளில் நிறைய தாமதம் ஆனாலும் பொறுமையாக செய்து முடிப்பீர்கள்.
பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து பொறுமையை கடைப்பிடியுங்கள். மாணவமணிகளுக்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஆதரவு அளிப்பார்கள். உங்கள் லட்சிய இலக்கினை அடைய பெரும் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 28, 02. சந்திராஷ்டமம்: இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும் நேரமிது. பெற்றோரின் அறிவுரை மற்றும் ஆதரவினால் செய்தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். முக்கியமான விஷயங்களில் நிதானத்தை கடைப்பிடித்து வரவும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் நட்பு உண்டாகும். வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் சரியாக நடந்து கொள்ளவும். கூட்டாளிகளிடம் கவனம் தேவை. விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் மூலம் லாபம் உண்டாகும். விளைச்சல் அதிகம் இருக்கும். வயல், வரப்பு வழக்குகளில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பொருளாதார நிலை உயரும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு சக கலைஞர்களுக்கும் உதவுவீர்கள்.
பெண்மணிகள் உடன்பிறந்தோரிடமும் ஒற்றுமையாக இருப்பீர்கள். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். கவனம் தேவை. மாணவமணிகள் நண்பர்களைத் தவிர்க்காமல் ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஒருமித்த மனதுடன் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.
பரிகாரம்: அம்மனை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 27, 01. சந்திராஷ்டமம்: இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
இறைவழிபாடு அதிகரிக்கும் நேரமிது. பொருளாதார நிலை படிப்படியாக உயரும். வருங்கால கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும். மதிப்பு, மரியாதை சமூகத்தில் உயரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளால் நன்மை அடைவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக அமையும். விவசாயிகள் விளைநிலத்தை நன்கு பராமரித்து வரவேண்டும். கையிருப்புப் பொருள்களின் மீது அதிக அக்கறை கொள்ளவும்.
அரசியல்வாதிகள் விரோதிகளையும் நண்பர்களாக ஆக்கிக் கொள்வார்கள். உட்கட்சி பூசலால் சற்று மனக்குழப்பம் உண்டாகும். கலைத்துறையினர் தங்களின் செயல்பாடுகள் மூலம் அனைவரையும் கவர்வீர்கள். சக கலைஞர்களுக்கு தேவையான உதவிகளை செய்து உதவுவீர்கள்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உண்டாகும்.
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 26, 02. சந்திராஷ்டமம்: இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும் நேரமிது. வாழ்க்கை எனும் பாடம் நன்கு புரியத் தொடங்கும். செய்தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயற்சி செய்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வேலைகளை முடித்து விடுவீர்கள். சக ஊழியர்களால் சில கலகங்கள் ஏற்படும். வியாபாரிகள் புதியவர்களை நம்பி பொறுப்புகளைக் கொடுக்காதீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். விவசாயிகள் போட்டிகளைச் சமாளித்து இலக்கை எட்டி விடுவீர்கள். பாசன வசதிகளை மேம்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் அடிக்கடி பிரயாணங்கள் செய்ய நேரிடும். பயணங்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். வாய்ப்புகள் பெருகும்.
பெண்மணிகள் குடும்பத்தினருடன் பக்குவமாகப் பேசிப் பழகுவீர்கள். சுப காரியங்களில் பங்கேற்று மகிழ்வீர்கள். செலவுகளைச் சுருக்கமாக செய்து சேமிப்பீர்கள். மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். படிப்பில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 01, 02. சந்திராஷ்டமம்: இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் நேரமிது. கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். நலிந்தவர்களுக்கு உதவி புரிவீர்கள். உங்கள் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் வேலைகளை சிரமமில்லாமல் திட்டமிட்டு முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரிகள் கூடுதல் விழிப்புணர்வுடன் வியாபாரத்தை கவனித்து நடத்தவேண்டும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சற்று சிரமம் ஏற்படும். விவசாயிகள் நல்ல விளைச்சல் பெருகி லாபமடைவீர்கள். கால்நடைகளால் லாபம் அதிகமாகும்.
அரசியல்வாதிகள் சில இடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். சிலர் உங்களுக்கு ஆதரவாக கரம் நீட்டுவார்கள். கலைத்துறையினர் சரியான முடிவுகளை யோசித்து எடுப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் மூலம் பொருளாதார ரீதியில் நன்மை அடைவீர்கள்.
பெண்மணிகள் உடல் நலத்தில் சற்று கவனம் கொள்ள வேண்டும். ஆலயங்களின் தரிசனம் கிடைக்கும். மாணவமணிகள் விரும்பிய பாடப் பிரிவுகளில் செல்வதற்கான முயற்சிகளை தீவிரமாக்குவீர்கள். ஆசிரியர், பெற்றோர்களின் ஆதரவு உதவியாக இருக்கும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.
பரிகாரம்: அம்பாளை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 28, 03. சந்திராஷ்டமம்: இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
உங்கள் காரியங்களில் ஏற்பட்ட காரியத் தடைகள் விலகும் நேரமிது. கடன் சார்ந்த விஷயங்களில் ஏற்பட்ட தொல்லைகள் சற்று குறையும். உறவினர்களிடம் உறவில் சற்று விரிசல் ஏற்பட்டு, அன்யோன்யம் குறையும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் சற்று மனக் குழப்பம் ஏற்படும். வியாபாரிகளுக்கு பிரயாணங்களில் லாபம் இருந்தாலும் கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த விஷயங்கள் சற்று தாமதமாக முடியும். விவசாயிகளுக்கு பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். விளைச்சல் அதிகமாக இருந்தாலும் லாபம் சற்று குறைவாகவே இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்கள் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறைவேற்ற சிறிது தாமதம் ஆகும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
பெண்மணிகளுக்கு கணவர் வீட்டாருடன் சில கலகங்கள் ஏற்பட்டாலும், அனைத்தையும் சமரசம் செய்து விடுவீர்கள். மாணவமணிகள் ஆக்கபூர்வமாக சிந்தித்து, செயலாற்றவும். ஆசிரியர், பெற்றோரின் சொல்படி நடந்து கொள்வீர்கள்.
பரிகாரம்: சனீ பகவானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 01, 03. சந்திராஷ்டமம்: இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
குடும்பத்தில் நிம்மதி நிலவும் நேரமிது. எவருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள். ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். இல்லத்தில் மழலை வரவால் மகிழ்ச்சி உண்டாகும். அனைத்து காரியங்களும் வெற்றியடையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் இருந்தாலும் ஊதிய உயர்வில் பாதிப்பு வராது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளால் வேலைப்பளு குறையும். விற்பனையில் சற்று பாதிப்பு உண்டானாலும் சமாளிப்பீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி எதிர்கால வளத்திற்கு வித்திடுவீர்கள். விளைச்சல் அதிகரித்து லாபம் பெருகும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். உடல்நலத்தைப் பாதுகாக்கவும். கலைத்துறையினர் ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பீர்கள். சக கலைஞர்களிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
பெண்மணிகளுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மாணவமணிகள் கடின உழைப்பின் மூலம் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். யோகா, பிராணாயாமம் செய்து ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொள்வீர்கள்.
பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 02, 03. சந்திராஷ்டமம்: இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...