11-இல் ராகு - கேது இருப்பின்....

ராகு - மின்னணுவியல் துறை, பாம்பு பண்ணை, பாம்பாட்டி, தொழுநோய் மருத்துவம், ஒற்றர் பணி, வெளிநாட்டு வர்த்தகம், சர்க்கஸ் மேலும் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசிக்கதிபதி சம்பந்தப்பட்ட தொழில். 
11-இல் ராகு - கேது இருப்பின்....
Published on
Updated on
1 min read

ராகு - மின்னணுவியல் துறை, பாம்பு பண்ணை, பாம்பாட்டி, தொழுநோய் மருத்துவம், ஒற்றர் பணி, வெளிநாட்டு வர்த்தகம், சர்க்கஸ் மேலும் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசிக்கதிபதி சம்பந்தப்பட்ட தொழில். 

கேது - மருத்துவம், கைரேகை, மதபோதனை, துறவறம், மெஸ்மரிசம், மதுபானம் மற்றும் மயக்கம் தரும் பொருள்கள், சிறைச்சாலை.

11-இல் ராகு - மூத்த சகோதர, சகோதரிகள் இருப்பார்கள். மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் அந்நிய மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பார். ஏதோ ஒரு வழியில் திடீர் தன பிராப்தி கிடைக்கும். 
தாய், தந்தை, களத்திரம் இவர்களிடமிருந்து ஒரு சமயத்தில் பிரிந்து வாழும் நிலைமையும் இவர்களுக்கு ஏற்படலாம்.

11-இல் கேது - அதிகம் புண்ணியம் செய்தவர். சிறிய வயதில் கஷ்டப்பட்டு பின்னர் சகல வசதியுடன் வாழ்வார். எல்லோரிடமும் நல்ல உறவு முறை இருக்கும். வயோதிக காலத்தில் ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும்.

11-ஆம் இடத்தில் கரும்பாம்பாகிய ராகு இருப்பின் அந்நிய ஜாதியாலும், பலராலும் பொருள்கள் சேரும். கீர்த்தியும், ஆளடிமை, வியாபார பலிதமும் உள்ளவராக இருப்பார். பொன், பொருள், ஆடை ஆபரண லாபம் உண்டாகும். ராஜசன்மானம் கிடைக்கும். உறவினர் விரோதம் இருக்கும். 

11-இல் கேது: 11}இல் செம்பாம்பாகிய கேது பகவான் இருப்பின் பலவகை வியாபாரம் செய்வார். அதிகாரம் புரிவார். பொன், பொருள் சேர்க்கை, ஆடையாபரண லாபம் பெறுவார். ராஜசன்மானம் கிடைக்கும். நிதி வரவு நிறைய இருக்கும். 

அதிகம் கற்றவராகவும், வித்தை பயின்றவராகவும் இருப்பார். உறவினர் விரோதம் இருக்கும். மூத்த சகோதரனுக்குப் பீடை ஏற்படும். ஜனங்களுக்கு பிரியமானவராக நடந்து கொள்வார்.

ராகு, கேது பகவான்களுக்கு சொந்த வீடு இல்லாததால் எந்த கிரகத்தின் வீட்டில் இருக்கிறார்களோ அந்த கிரகத்தின் ஆதிபத்யத்தையும், அதற்குண்டான பொறுப்புகளையும் எடுத்துச் செயல்படுவார்கள். அத்துடன் தனது காரகத்துவங்களையும் இணைத்துச் செயல்படுவார்கள். 

கிரகங்கள் அவர்களுக்குண்டான அனுகூல பாவம் (ராசிகள்) அமைந்திருப்பின், அவர்களின் இலாக்காக்களுக்கு உண்டான அமைப்புகள் அவர்களின் தசாபுக்தி அந்தரம் செயல்படும் போது நன்கு பரிமளிக்கச் செய்வார்கள். பலவீனமாக இருந்தால், அந்த வகையிலேயே பலவீனங்கள் அவர்களின் தசாபுக்தி அந்திர காலம் ஏற்படும் என அறிய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com