

சூரிய பகவானின் அதிதேவதை அக்னி பகவானாவார். இவர் பொன்னிற மேனியுடனும், மீசை தாடியுடனும், மூன்று கண்கள் ஏழு நாக்குகள், ஜெபமாலை, வரத ஹஸ்தம், சக்தி ஆயுதங்களை தாங்கி ஆட்டுக்கிடா வாகனத்தில் அமர்ந்திருப்பவர் ஆவார்.
சூரிய பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருக்கும் பட்சத்தில் புகழும் பொருளும் தரக்கூடிய வகையில் தொழில் அமையும். எல்லாவித ஆற்றல்களையும் உண்டாக்க கூடியவர் சூரிய பகவானாவார். தைரியத்துடன் பெரிய 'ப்ராஜெக்ட்டு' களை உருவாக்கச் செய்வார். அந்தஸ்தையும் ஏற்படுத்துவார்.
ஒரு பெரிய மருத்துவரை சூரிய பகவானால் உருவாக்க முடியும். மருந்துகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை அமைத்துக் கொடுப்பார். அடிக்கடி தொழில் நிமித்தம் பயணம் செய்ய வைத்து பயனும் ஏற்படுத்துவார். மற்றும் ஜீவனம் சுகமாக அமையும். வெளிநாட்டு பயணம், வெளிநாட்டு தொடர்பில் ஜீவனத்தை அமைத்துத் தருவார். தந்தையின் தொழிலால் ஜாதகருக்கு ஆதாயம் சேரும். தந்தைக்கும் உயர் நிலை உண்டாகும். பதவி ஏற்றத்திற்கு உத்திரவாதம் உண்டு. உடல் பலத்தால் சாதனை செய்ய முடியும். மர வியாபாரம் காடுகள் இவற்றால் லாபம் கிடைக்கும். காட்டு ஒப்பந்தம் செய்து கொண்டு தொழிலை அமைத்துக் கொள்ளலாம். துணிகள், மூலிகைகள், சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ணம் உள்ள பண்டங்கள் ஆகியவற்றின் தொடர்பில் தொழிலும் ஆதாயமும் அமைய வாய்ப்பு உண்டாகும். சூரிய பகவான் சுகஸ்தானமான நான்காம் வீட்டில் சுப பலத்துடன் அமர்ந்திருந்தால் சளித்தொல்லை உபாதை, இருதய நோய்கள் ஏற்படாது.
பூர்வ புண்ணிய, புத்திர, புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருக்கும் சூரிய பகவான் செல்வம், செல்வாக்கு, மதிப்பு, கம்பீரம், அறிவு, வைராக்கியம், கெளரவம், கண்டிப்பு, பலம், பராக்கிரமம், குழந்தைகளால் சந்தோஷம் ஆகியவைகளை கொடுப்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.