தெளிவாகச் சிந்திப்பவர்களாம் இந்த ராசியினர்! வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
தெளிவாகச் சிந்திப்பவர்களாம் இந்த ராசியினர்! வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.  உடன்பிறந்தோரின் வழியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.  தொழிலில் வியக்கத்தக்க மாற்றங்களைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைத்து நற்பெயர் எடுப்பார்கள். வியாபாரிகள் போட்டிக்கேற்ப விலையை நிர்ணயித்து லாபம் ஈட்டுவீர்கள். விவசாயிகள் மகசூலில் நல்ல வருமானம் ஈட்டுவார்கள்.

அரசியல்வாதிகளின் முயற்சிகள்   அனைத்தும் ஈடேறும். கலைத்துறையினர் நுண்ணறிவை வளர்த்துக் கொள்வார்கள். பெண்கள் தங்களின் கனிவான பேச்சால் அனுசரித்து நடப்பீர்கள்.  மாணவர்கள் புதிய பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.

சந்திராஷ்டமம் - 3,4.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து பழகுவார்கள். வியாபாரிகள் யோசித்து செயல்படவும். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவார்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவார்கள்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள். பெண்கள் குடும்பத்தாருடன் ஒற்றுமையாகப் பழகுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். 

சந்திராஷ்டமம் - 5,6

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

வருமானம் படிப்படியாக உயரும். குடும்பத்தில் நிம்மதிபூத்துக் குலுங்கும். கடன் சார்ந்த பிரச்னைகள் தீரும்.

எதிர்ப்புகள் விலகிவிடும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் எண்ணம்போல செயல்படுவார்கள். வியாபாரிகள் கடன் தர வேண்டாம்.

விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம். அரசியல்வாதிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் நடந்தேறும்.

கலைத்துறையினருக்கு வருவாய் கூடும். பெண்கள் குடும்பத்தினரின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - 7,8.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

விரோதம் பாராட்டும் நண்பர்களிடமிருந்து விலகி விடுவீர்கள். குடும்பத்துடன் திருத்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

பயணம் செய்ய நேரிடும். உத்தியோகஸ்தர்கள் கடன்களை அடைப்பார்கள். வியாபாரிகள் புதியவர்களைச் சந்தித்து வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகள் மகசூல் கூடக் காண்பார்கள்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு காட்டுவார்கள். கலைத்துறையினர் அரசால் பாராட்டப்படுவார்கள்.

பெண்கள் தர்ம காரியங்களில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். அன்னை வழியில் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும்.

யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. வியாபாரிகளுக்கு இழுபறி நீங்கி, சாதகமான வாய்ப்பு நிலவும்.

விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவார்கள்.  அறசியல்வாதிகள் அரசு அலுவலர்களின் நட்பைப் பெறுவார்கள்.  கலைத்துறையினர் நண்பர்களால் பயன் அடைவார்கள்.

பெண்களின் தனித்திறமை வெளிப்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.  சமுதாயத்தில் உயர்ந்தோர் நண்பர்களாவார்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சகஜ நிலையைக் கடைபிடிப்பார்கள். வியாபாரிகள் சிறிய முதலீடுகளில் வியாபாரத்தைப் பெருக்குவார்கள்.

விவசாயிகள் சக விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளைச்செய்வார்கள்.

அரசியல்வாதிகளின் நெடுநாளைய எண்ணங்கள் பூர்த்தியாகும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

பெண்கள் உறவினர்களுடன் அன்புடன் இருப்பார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

அரசு வழியில் இருந்த கட்டுப்பாடுகள் குறையும். பொருளாதாரம் சீராகவே இருக்கும்.  பழைய கடன்களையும் திருப்பி  அடைப்பீர்கள்.

குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகஸ்தர்கள் படிப்படியான உயர்வைக் காண்பார்கள். வியாபாரிகள் கோபப்பட வேண்டாம். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்வார்கள். கலைத்துறையினர் வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்குவார்கள்.

பெண்கள் சேமிப்புகளைக் கூட்டுவார்கள். மாணவர்கள் ஆரோக்கியத்தைப் பெருக்கிக் கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். யோகா, பிராணயாமம் கற்பீர்கள். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வுக்கான தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.

வியாபாரிகளுக்கு நண்பர்களுடன் சேரும் முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவார்கள்.

அரசியல்வாதிகள் மக்களிடம் கண்ணியமாக நடப்பார்கள். கலைத்துறையினர் ரசிகர்களுக்கு உதவுவார்கள். பெண்களுக்கு மருத்துவச் செலவு குறையும். மாணவர்களுக்கு மனத்துக்கு இனிய 
பயணம் உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

முடிக்க முடியாமல் விடுபட்டிருந்த காரியங்கள் நிறைவேறும். தெளிவாகச் சிந்தித்துக் காரியமாற்றுவீர்கள்.

உடல் ஆரோக்கியம், மனவளம் மேன்மையடையும்.  உத்தியோகஸ்தர்கள் பணிகளை சரியாக முடிப்பார்கள்.

வியாபாரிகள் அமைதியை நாடுவார்கள். விவசாயிகள் விளைச்சலில் லாபம் ஈட்டுவார்கள்.  

அரசியல்வாதிகள் அரசு வேலைகளில் அதிகம் ஈடுபடுவார்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்.

பெண்கள் கடுமையாக உழைப்பார்கள். மாணவர்களின் கோரிக்கைகள் நிறை
வேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வீர்கள்.  பிறருடன் உறவு மேன்மையடையும். சிறிய மருத்துவச் செலவு உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் சேர்ந்து, புதிய முதலீடுகளைச் செய்வார்கள்.

விவசாயிகள் பாசன வசதிகளில் கவனம் செலுத்துவார்கள். அரசியல்வாதிகள் எதிர்ப்புகளைச் சமாளிப்பார்கள்.

கலைத்துறையினர் ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பார்கள். பெண்கள் குடும்பத்தாருடன் அமைதியாகச் செல்வார்கள். மாணவர்கள் அறிவை வளர்த்துகொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

சிக்கல்கள் தீர்ந்து, வருவாய் அதிகரிக்கும்.  தொழிலில் இருந்த பிரச்னைகள் தீரும்.  எவருடனும் வாக்குவாதம் வேண்டாம்.

தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.  உத்தியோகஸ்தர்கள் உழைத்தால் முன்னேறலாம். வியாபாரிகள் புதிய கடைகளைத் திறப்பார்கள்.

விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவார்கள். அரசியல்வாதிகளின் புகழ் உயரும்.

கலைத்துறையினர் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வார்கள்.  பெண்கள் குழந்தைகளுடன் அன்போடு நடப்பார்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் பங்கேற்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.


மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழிலைத் திறம்பட நடத்துவீர்கள். எதிர்ப்புகள் இருக்காது. சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்களது வேலைகளைக் குறித்த காலத்துக்கு முன்பே முடித்துவிடுவார்கள். வியாபாரிகள் புதிய கடன்களை வாங்கி, வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகளுக்குப் புதிய குத்தகைகள் தேடிவரும்.

அரசியல்வாதிகளின் பொறுமையைச் சோதிக்கும் நிகழ்வுகள் நடக்கும். கலைத்துறையினர் உபரி வருவாயை ரசிகர்களுக்குச் செலவழிப்பார்கள்.

பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் படிப்பிலும், விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com