அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 25 - 31 ) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.
மார்ச் மாதப் பலன்கள்
மார்ச் மாதப் பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 25 - 31 ) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

புதிய தன்னம்பிக்கை பிறக்கும். அரிதான காரியங்களைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி பணியை வெற்றியுடன் செய்து முடிப்பார்கள்.

வியாபாரிகள் சோர்வில்லாமல் உழைத்து லாபத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவையைப் பூர்த்தி செய்வார்கள். கலைத் துறையினர் புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

பெண்கள் உடல் ஆரோக்கியம், மன வளம் மேம்பட யோகா கற்பார்கள். மாணவர்கள் தங்களது ரகசியங்களைக் காப்பார்கள்.

சந்திராஷ்டமம் - ஆக. 25.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கும். நவீன தொழில்நுட்பங்களைக் கற்பீர்கள்.  பிறர் பாராட்டும் வகையில் நடப்பீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவத்தைப் பெறுவார்கள்.

வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள்.  விவசாயிகள் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திக் கொள்வார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வார்கள். கலைத் துறையினர்  புதிய திட்டங்களைச் செயல்படுத்துவார்கள்.

பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவார்கள்.  மாணவர்கள் 
கல்வியில் வளர்ச்சியை அடைவார்கள்.

சந்திராஷ்டமம் - ஆக. 26,27.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் சாதகமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சமூகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.  எதிர்பார்த்திருந்த பணம் கைவந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள் வருவாயை நல்வழியில் முதலீடு செய்வார்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வார்கள்.

விவசாயிகள் சக விவசாயிகளின் அறிவுரைகளைக் கேட்பார்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணியில் அமர்வார்கள். கலைத் துறையினரின் துன்பங்களுக்கு முடிவு கிடைக்கும்.

பெண்கள் குடும்பப் பொறுப்புகளை சுமப்பார்கள். மாணவர்களுக்கு பெற்றோரின் ஆதரவு உண்டு.

சந்திராஷ்டமம் - ஆக. 28,29.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள்.  சொத்துகளில் வருவாய் வரத் தொடங்கும்.  பழைய  நிலங்களை விற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல வருமானம் வரக் காண்பீர்கள்.

விவசாயிகள் புதிய பயிரை பயிரிடுவார்கள்.  அரசியல்வாதிகள் பேச்சாலும், செயலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள்.

கலைத் துறையினர் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தினரின் செயல்களால் வருத்தம் உண்டாகும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் விட்டுக் கொடுத்து நடக்கவும்.

சந்திராஷ்டமம் - ஆக. 30,31.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

திறமைகள் பளிச்சிடும். சுறுசுறுப்புடன் காரியமாற்றுவீர்கள்.  பெற்றோருக்கு மருத்துவச் செலவு செய்ய நேரிடும். கோபப்படுத்த முயல்வோரை சிரித்தபடியே கடந்துவிடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் புதிய வேலைக்கு விண்ணப்பிப்பார்கள். வியாபாரிகள் தடைகளைத் தாண்டி லாபம் பெறுவீர்கள். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவார்கள்.

அரசியல்வாதிகள் மற்றவர்கள் பொறாமைப்படும்படி நடப்பார்கள். பெண்கள் எதிரிகளிடமிருந்து விலகி விடுவீர்கள். மாணவர்கள் நெருங்கிய நண்பர்களிடமிருந்து உதவிகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தொழில் ரகசியங்களைப் பகிர மாட்டீர்கள். கடன்களை அடைப்பீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் கவனத்துடன் பணிகளைச் செய்வார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் எச்சரிக்கையுடன் இருக்கவும். விவசாயிகள் கடினமாக உழைப்பார்கள்.

அரசியல்வாதிகள் வெளியூர் சென்று வருவார்கள். கலைத் துறையினர் பிறரின் கண்டனங்களுக்குத் தக்கப் பதிலடி கொடுப்பார்கள்.

பெண்கள் கோயில்களுக்குச் செல்வார்கள். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

குடும்பத்தில் மரியாதையை உயர்த்திக் கொள்வீர்கள். காரியங்களைத் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் இடமாறுதலுக்கு விண்ணப்பம் செய்வார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஓய்வில்லாமல் உழைப்பீர்கள்.

விவசாயிகள் அநாவசியச் செலவுகளைத் தவிர்ப்பார்கள்.  கலைத் துறையினர் படைப்புகளில் பிரகாசிப்பார்கள்.

பெண்கள் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள். மாணவர்கள் எதிர்பார்த்த கல்வி நிலையங்களில் சேர்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிறரிடம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சொத்துகளில் வருவாய் வரத் தொடங்கும். வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைப்பீர்கள். வியாபாரிகள் தரகு வியாபாரத்தில் லாபத்தைக் காண்பார்கள். விவசாயிகள் நிலத் தகராறுகளில் வெற்றி காண்பார்கள்.

அரசியல்வாதிகள் அரசு அலுவலர்களின் உதவியைப் பெறுவார்கள்.  கலைத் துறையினர் வெளிவட்டாரச் செல்வாக்கை பெறுவார்கள். பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு உண்டாகும். சுப காரியங்கள் நடைபெறும்.  கடன்  வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் திறமையாகப் பணியாற்றி பாராட்டுகளைப் பெறுவார்கள்.

வியாபாரிகளுக்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். விவசாயிகள் கொள்முதல் வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பார்கள். அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருக்கவும்.

கலைத் துறையினர் உயர்ந்தோரை சந்திப்பார்கள். பெண்கள் புதிய சேமிப்புகளில் சேர்வார்கள். மாணவர்களுக்கு விரும்பிய பாடப் பிரிவுகளில் இடம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழிலில் போட்டிகள் குறையும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். வங்கிக் கடன் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பயணங்களால் ஆதாயம் பெருகும். வியாபாரிகள் முன்னேற்றம் அடைவார்கள்.

விவசாயிகள் மாற்றுப் பயிர்களையும் பயிரிடுவார்கள். அரசியல்வாதிகள் முக்கிய விஷயங்களில் கவனமாக இருக்கவும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

பெண்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே தொடரும். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உதவிகளைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

உடன்பிறந்தோருடன் சிறிது குழப்பம் ஏற்படும். பண வரவைப் பக்குவமாகக் கையாளுவீர்கள். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.

பழைய விஷயங்களைச் செயல்படுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள்  மற்றவர்களிடம் எச்சரிக்கையாகப் பேசவும். வியாபாரிகள் புதிய விற்பனை முறைகளைக் கையாளுவார்கள்.  

விவசாயிகள் பழைய குத்தகை பாக்கிகளை வசூலிப்பார்கள். அரசியல்வாதிகளை கட்சி மேலிடம் மதிக்கும். கலைத் துறையினர் வருமானம் உயரக் காண்பார்கள்.

பெண்களுக்கு சமூக நிலை உயரும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை. 

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உறவினர்களிடம் உங்கள்  மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கும். ஆன்மிகத் தேடல்கள் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் கண்ணியமாக நடப்பார்கள்.  வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வார்கள். விவசாயிகளுக்கு புழு பூச்சித் தொல்லைகள் எதுவும் இருக்காது. அரசியல்வாதிகள் தங்களது நிலை உயரக் காண்பார்கள்.

கலைத் துறையினர் நவீன தொழில்நுட்பங்களைக் கற்பார்கள். பெண்கள் கேளிக்கைகளில் பங்கேற்பார்கள்.  மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி காண்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com