அத்திப்பாக்கத்தில் அதிசய சிவன்

கள்ளக்குறிச்சி மாவட்டம்,  திருக்கோவிலூர் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் குன்றுபோல மணல் குவியலில் சிவலிங்கம் 2017}ஆம் ஆண்டில் வெளிப்பட்டது.
அத்திப்பாக்கத்தில் அதிசய சிவன்


கள்ளக்குறிச்சி மாவட்டம்,  திருக்கோவிலூர் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் குன்றுபோல மணல் குவியலில் சிவலிங்கம் 2017}ஆம் ஆண்டில் வெளிப்பட்டது.

இதைக் கண்ட கிராம மக்கள் மணல் குவியலை பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அகற்றியபோது,  ஏழு அடி உயரஆவுடையாருடன் கூடிய சிவலிங்கம், விநாயகர் உருவம் புடைப்புச் சிற்பமாகக் கொண்ட பலகைக்கல்,  தேவியின் சிலை உள்ளிட்டவை உடைந்த நிலையில் கிடைத்தன. 

இவ்வூர் வயலின் நடுவில் உள்ள பெரிய உருண்டை வடிவப்பாறை ஒன்றை "கோட்டங்கல்லு" என்று அழைக்கின்றனர்.  கி.பி.1737}38} ஆம் ஆண்டு கல்வெட்டு இது என  குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.1181 மூன்றாம் குலோத்துங்க சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டில், இறையூரான் ராஜராஜ சேதியராயன் வன்னியராயன் மகனான பெரியுடையான் ராஜராஜ கோவளராயன் பல்லவராயன் குளம்  வெட்டிய செய்தி கூறப்பட்டுள்ளது.  

இந்தக் கல்வெட்டை அடுத்து, சற்று முன்னே சென்றால்,  டி.அத்திப்பாக்கம் பெரிய ஏரியின் வாய்க்கால் பகுதிப் பக்கம்  ஒரு பெரிய குளம் வறண்ட நிலையில் தூர்ந்துள்ளது. இதையே இவ்வூர் மக்கள் "பார்வதி குளம்' என அழைக்கின்றனர். இந்தக் குளம் சிவன் கோயிலின் திருக்குளமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. 

இந்தப் பார்வதி குளத்துக்குள் இறங்கும் வழியில் தலை, பாதத்தின் பீடம் உடைந்த பெண் தெய்வக் கல் சிற்பம் கண்டறியப்பட்டது. இந்தச் சிலை நான்கு கரங்களுடன், மேல் கரங்களில் ஒன்று உடைந்தும், மற்றொன்று தாமரை மலரைத் தாங்கியும், கீழ் இரு கரங்கள் அபய வரத முத்திரையிலும் காட்சி அளிக்கின்றன. கழுத்தை ஆபரணங்கள் அணி செய்ய, மார்பில் முப்புரி நூல் அணிந்து, இடுப்பில் இருந்து பாதம் வரை ஆடையணிந்து காணப்படுகிறது. இது கி.பி.12-13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது. இதன் மூலம் இவ்வூரில் வைணவக்கோயிலும் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

பழங்காலத்தில் செல்வச்செழிப்போடு சைவ}வைணவ கோயில்கள் நிறைந்த அத்திப்பாக்கம் அந்நிய மன்னர்களின் படையெடுப்பில் சிதிலமடைந்து பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கிராம மக்கள் சிலைகளை சிறு கொட்டகையில் அமைத்து, வழிபட்டு வருகின்றனர்.

கோயில் திருப்பணிக்கு உதவ விரும்புவோர் தொடர்புக்கு: ஆர்.ராஜேந்திரன் - 78717 27298.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com