
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூலை 21 - ஜூலை 27) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
புதிய பொறுப்புகளில் கவனமாக ஈடுபடுவீர்கள். முக்கிய முடிவுகளில் நிதானத்துடன் செயல்படுவீர்கள். எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். ஆலயங்களுக்குச் சென்றுவருவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடப்பார்கள். வியாபாரிகள் புதிய தொழில்களில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளின் துறை சார்ந்த பணிகள் சுமுகமாக முடிவடையும்.
அரசியல்வாதிகள் பொறுமை காக்கவும். கலைத் துறையினருக்கு சிறிது சிரமம் ஏற்படும். பெண்களின் இல்லத்தில் சந்தோஷம் நிறையும். மாணவர்களுக்குத் தேர்வில் மதிப்பெண் கூடும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உழைப்பு கூடினாலும் புகழுக்கு குறைவு இருக்காது. கவர்ச்சிப் பேச்சால் பிறரை கவருவீர்கள். குறுகிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு கடின பணிகளைச் செய்யும் நிலை ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டு. விவசாயிகளுக்கு தானிய விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் போட்டிகளைச் சமாளிப்பார்கள்.
கலைத் துறையினர் கடமையை உணர்வார்கள். பெண்கள் சுபநிகழ்ச்சிகளை நடத்துவார்கள். மாணவர்கள் விட்டுக் கொடுத்து நடப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
குழந்தைகள் நம்பிக்கையை ஊட்டுவார்கள். பெற்றோரிடம் இணக்கமாகப் பழகுவீர்கள். உடல், மன நலம் சீராகவே தொடரும். வருமானமும் உயரும்.
உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் வாகனங்களுக்குச் சிறிது செலவிடுவார்கள்.
விவசாயிகளுக்கு இடைத்தரகர்களிடம் கவனம் தேவை. அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் உத்வேகத்துடன் இருப்பார்கள். கலைத் துறையினர் பிறரிடம் நட்பு பாராட்டுவார்கள்.
பெண்கள் உறவினர்களோடு பாசத்தோடு இருப்பார்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டில் ஈடுபடுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
தொழில் போட்டி அகலும். புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். பிறரின் குறைகளைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். மருத்துவச் செலவுகள் ஏற்படாது.
உத்தியோகஸ்தர்கள் புதிய நுட்பங்களைக் கற்பார்கள். வியாபாரிகள் விட்டுக் கொடுத்து நடப்பார்கள். விவசாயிகள் பழைய பாக்கிகளைத் திரும்ப அடைப்பார்கள். அரசியல்வாதிகள் பயணங்களைச் செய்வார்கள்.
கலைத் துறையினர் சுறுசுறுப்புடன் பணிபுரிவார்கள். பெண்கள் உடன்பிறந்தோருடன் அனுசரித்து நடப்பார்கள். மாணவர்கள் கல்வியால் முன்னேற்றம் அடைவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
குடும்பத்தில் குதூகலம் கூடும். தரும காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்வு உண்டாகும். சொத்துகளை வாங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் சுமாரான நிலையை காண்பார்கள். விவசாயிகள் சோம்பேறித்தனத்தைக் கைவிடுவார்கள். அரசியல்வாதிகள் வெளியூர் பயணத்தால் அனுபவம் பெறுவார்கள்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சாதகமாகவே அமையும். பெண்கள் திட்டமிடும் காரியங்கள் சிறக்கும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாகப் பேணுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். சொத்துகளில் பாகப் பிரிவினை உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு இருந்த தொல்லைகள் நீங்கும். வியாபாரிகள் கூட்டாளிகளிடமிருந்து சற்று விலகியே இருக்கவும். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவார்கள்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். பெண்கள் பொறுப்புடன் நடப்பார்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
குடும்பத்தில் மழலைச் செல்வம் உண்டாகும். சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். சிக்கனமாக வாழப் பழகுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் கடமையோடு பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.
விவசாயிகளின் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் நன்மதிப்பைப் பெறுவார்கள்.
கலைத் துறையினர் தங்கள் திறமைக்குச் சவால்விடும் ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்கள், கணவர் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மாணவர்கள் எவரிடமும் இணக்கமாகப் பழக வேண்டாம்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
தொழிலை புதிய வழிகளில் கொண்டு செல்வீர்கள். விலகிய உறவினர்கள் குடும்பத்தாரோடு இணைவார்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றுவார்கள். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும்.
விவசாயிகள் தீவனங்களுக்குச் செலவழிப்பார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் அன்பை பெறுவார்கள்.
கலைத் துறையினர் பொருளாதாரச் செலவை சரிசெய்வார்கள். பெண்களுக்கு வயிற்று உபாதைகள் நீங்கும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் அளந்து பேசுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
பெருந்தன்மையோடு நடப்பீர்கள். மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும். எதிர்த்தவர்கள் விலகிவிடுவார்கள். புதியவர்களால் பலன் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர்களால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரசியல்வாதிகள் உள்கட்சிப் பூசலால் மனம் கலங்குவார்கள்.
கலைத் துறையினர் பிறருக்கு உதவி செய்வார்கள். பெண்கள் யோகா கற்பார்கள். மாணவர்கள் நன்கு படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
தொழில் விறுவிறுப்பாக நடக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்களுக்குப் பண உதவி செய்வீர்கள். நல்ல செய்தி வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு. விவசாயிகளின் பணிகள் குறித்த நேரத்தில் நிறைவடையும். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தால் அங்கீகரிக்கப்படுவார்கள்.
கலைத் துறையினர் கடினமான விஷயங்களுக்குத் தீர்வு காண்பார்கள். பெண்கள் புதிய வீடு வாங்க முயற்சிப்பார்கள். மாணவர்கள் உடனிருப்போரின் நல்ல எண்ணங்களைப் புரிந்துகொள்வார்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 21,22.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் காரியங்கள் அலைச்சல் இல்லாமல் முடிவடையும். தக்க நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். பயணங்களால் முக்கிய திருப்பம் உண்டு.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவுவார்கள். வியாபாரிகளுக்கு
வங்கிக் கடன் உண்டு. விவசாயிகள் கால்நடைகளை வாங்குவார்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சிப் பணிகளில் ஆர்வம் ஏற்படும்.
கலைத் துறையினருக்கு பிரச்னைகளில் தெளிவு கிடைக்கும். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்புகளைத் தொடர்ந்து முடிப்பார்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 23,24.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
தொழிலில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். துணிந்து செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் கண்காணிப்பு தேவை.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்.
கலைத் துறையினரின் செல்வாக்கு உயரும். பெண்களுக்கு புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் விழிப்புணர்வு மேம்படும்.
சந்திராஷ்டமம் - ஜூலை 25,26,27.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.