ஆயிரம் சூரிய கிரஹண ஆதித்தன் வழிபாடு

"செங்கதிர்த் தேவர் சிறந்த ஒளியைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!'
ஆயிரம் சூரிய கிரஹண ஆதித்தன் வழிபாடு

"செங்கதிர்த் தேவர் சிறந்த ஒளியைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!' என்பார் காயத்ரி மந்திர தமிழ்மொழி பெயர்ப்பாக மகாகவி பாரதியார். தாயினும் பரிந்து சகலரையும் ஒளியால் காக்கும் கடவுள் அவராவார். எனவே தான் சிவாலயங்களில் ஒவ்வொரு நாளும் காலசந்தி பூஜை சூரியனிடமிருந்தே தொடங்குகிறது. அநேக சிவாலயங்களில் சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது பூஜிக்கும் நாள்கள் விசேஷமாகும்.  

ஆரோக்கியமான வாழ்வு பெற தினசரி சூரியனின் பன்னிரு நாமங்களைக் கூறி,  பன்னிரு முறை நமஸ்காரம் செய்ய வேண்டுமென காஞ்சிப் பெரியவர் அருளுகின்றார். 

யோகா கலையில் சூரிய நமஸ்காரம் முக்கியமானதாகும்.  வைட்டமின் டி4  கிடைக்க,  ஒரு நாளில் சிறிது நேரமாவது சூரிய ஒளியில் உலவுவது அவசியம்.
ஞாயிற்றுக்கிழமையில் சப்தமி திதி வந்தால் அந்நாள் "பானுசப்தமி' எனப் போற்றப்படுகின்றது. ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு தெய்வங்களின் வழிபாட்டுக்கு உகந்ததாக உள்ளது. சதுர்த்தி - விநாயகர், பஞ்சமி - வராகி, ஷஷ்டி - முருகன், அஷ்டமி - பைரவர், துர்கை கிருஷ்ணர், நவமி -  ராமர், பெüர்ணமி - அம்பிகை போல சப்தமி சூரியனுக்கு உகந்த நன்னாளாகும். சூரியன் 7 குதிரைகள் கொண்ட குதிரை பூட்டிய தேரில் வலம் வருகிறார் என்பது மரபு. 

அறிவியல் நிறப்பிரிகையில் ஏழு வண்ணங்கள்(விப்ஜியார்) உள்ளன என்கிறது. இத்தகு ஆற்றலை அள்ளித் தருகின்ற சூரிய பகவானை வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நாளாக"ஸ்ரீ சூரிய சப்தமி மஹாபர்வம்" எனும் மிக மிக அரிதான பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற அதிசய நன்னாள் ஜூன் 
25}ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  அமைகின்றது. இந்த நாளின் அமைப்பே மிகவும் விசேஷமானது.

வளர்பிறை, சப்தமி, ஞாயிற்றுக்கிழமை, மாதங்களில் ஆனி மாதம் இவை எல்லாம் ஒன்றாக இணையும்போது அந்த நாளில் "வ்யதி பாத யோகம்' 
எனும் யோகம் அமைந்திருக்க வேண்டும். இவற்றுடன் கூட அன்றைய தினத்தில் பூர நட்சத்திரம் வந்திருக்க வேண்டும். இவை எல்லாம் ஒன்றிணையும் நாள் "பாதார்க்க யோகம்' என்று அழைக்கப் பெறுகிறது. இப்புண்ணிய காலம் பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அமையும் அபூர்வ தினமாகும் எனவும் இந்நாளில் வழிபாடு செய்தால் ஆயிரம் சூரிய கிரஹண காலத்தில் வழிபாடு செய்த பலன் நமக்கு கிடைக்கும் என ஜகத்குரு ஸ்ரீúக்ஷத்ரம்சகடபுர ஸ்ரீ வித்யா பீடாதீஸ்வர ஸ்ரீ வித்யாபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகள் அருளியிருக்கிறார்.

இந்த நாளில் காலையில் எழுந்து தலையில் எருக்கம் இலைகளை வைத்துகொண்டு கடலிலோ அல்லது நதிகளில் புனித நீராடலாம்.  வீட்டிலேயே தாங்கள் நீராடப்போகும் நீரில் மோதிர விரலால் "ஓம்'  என்று எழுதி சகல தீர்த்தங்களையும் பிரார்த்தனை செய்து,  ஏழு எருக்கம் இலைகளை சிறிது மஞ்சளுடன் தலையில் வைத்து கிழக்கு நோக்கி நின்று நீராடலாம். இதுவேகூட புனித நீராடல் ஆகும். பிறகு சூரிய பகவானை நோக்கி வழிபாடு செய்ய வேண்டும். 

ஸ்ரீராமன் போரில் வெற்றி பெற ஸ்ரீ அகஸ்தியர் அருளிச்செய்த ஆதித்ய ஹ்ருதயம்(தமிழில் மொழிபெயர்ப்பு உள்ளது)  பாராயணம் செய்து வழிபடலாம். 

அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று சூரியனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம். வேதம் ஓதுபவர்களுக்கு கோதுமையை தானம் செய்து பலன் பெறலாம். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.  சூரியதேவன் அருளால் உடல்நலம், நீண்டஆயுள், நிறைச்செல்வம், உயர் புகழ், மெய்ஞானம், ஆகியவை கைகூடும். குழந்தைகள் இந்த வழிபாடு செய்வதன் மூலம் கல்வியில் மிக உன்னதமான முன்னேற்றம் காண்பார்கள். 

இப்புனித நன்னாளில் கிழக்கு தாம்பரம் அகஸ்தியர் தெருவில் உள்ள சகடபுரம் கிளை ஸ்ரீ மடத்தில் உள்ள ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி கோயிலில் தற்போது சென்னையில் முகாமிட்டிருக்கும் ஸ்ரீ ஜகத்குரு சகடபுரம் ஆச்சாரிய மஹா சுவாமிகளின் திவ்ய சந்நிதியில் வேத பண்டிதர்களால் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. 

தகவல்களுக்கு : 90117 99221.
(ஸ்ரீ சூர்ய சப்தமி மஹாபர்வ புண்ணியகாலம்} ஜூன் 25)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com