12 ராசிக்கான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்.27- நவ.2) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
12 ராசிக்கான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்.27- நவ.2) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

சிலர் சொத்துகளை வாங்க முயற்சிப்பார்கள்.  தொழிலில் அபார வளர்ச்சியை அடைவீர்கள்.  பணம் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. வியாபாரிகள் சில்லறை வணிகத்தில் கவனம் செலுத்துவீர்கள். விவசாயிகள் தானியங்களை விற்று லாபம் அடைவீர்கள். அரசியல்வாதிகள் திட்டங்களில் வெற்றியடைய தொண்டர்களின் பங்கு உதவியாக இருக்கும். கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். 

பெண்கள் பெரியோர்களை மதித்து செல்வாக்கை உயர்த்துவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

உயர்ந்தவர்களோடு பழகுவீர்கள். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடன்பிறந்தோரிடம் சுமுகமான உறவு ஏற்படும்.  வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் உண்டு. 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் மனமறிந்து நடப்பீர்கள்.  வியாபாரிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகள் கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் உயரும். கலைத் துறையினர் சக கலைஞர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். 

பெண்கள் உறவினர்கள் வருகையால் மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இல்லத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.  மனதில் இறைசார்ந்த சிந்தனைகள் ஏற்படும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வு உண்டு. வியாபாரிகள் சில நுட்பங்களைக் கற்பார்கள்.  விவசாயிகளுக்கு பிறரின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் செல்வார்கள். கலைத் துறையினருக்கு சாதகமான சூழல் உண்டாகும். 

பெண்களுக்கு மனக் கவலைகள் நீங்கி, புத்துணர்வு உண்டாகும்.  மாணவர்கள் உடன்பிறந்தோரின் படிப்புக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

சரியான இலக்குகளை நிர்ணயித்து உழைப்பீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.  மனதை ஒருமுகப்படுத்துவீர்கள்.  வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பேச்சை கேட்டு நடப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணக்கமாக நடப்பீர்கள். விவசாயிகள் நல்ல லாபம் காண்பீர்கள்.  அரசியல்வாதிகள் மக்கள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். 

கலைத் துறையினருக்குத் திருப்பங்கள் உண்டாகும். பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.  மாணவர்கள் உற்சாகத்துடன் இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பாகப்பிரிவினையில் வேகத்துடன் நடப்பீர்கள். தொழிலைத் திறம்பட நடத்துவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்குக் கூட்டுத் தொழிலில் ஒற்றுமை கிடைக்கும். விவசாயிகள் புதிய குத்தகை முயற்சிகளில் இறங்குவீர்கள். அரசியல்வாதிகள்  மாற்றுக்கட்சியினரிடம் சுமுகமான  உறவை வளர்ப்பீர்கள்.

கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.  பெண்களுக்கு குடும்பத்தினரிடம் பாசம் அதிகரிக்கும். மாணவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக். 27.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். திட்டமிட்ட பணிகளைச் செய்வீர்கள்.  பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.  புதிய நட்புகளால் நன்மை உண்டாகும். 

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பிரச்னைகளை தாங்களே தீர்த்துக்கொள்வார்கள். வியாபாரிகள் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். கலைத் துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.  

பெண்கள் நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.  மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் கவனம் செலுத்தவும்.

சந்திராஷ்டமம் - அக். 28, 29.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

உடல் ஆரோக்கியம், மன வளம் மேன்மையடையும். தொழிலில் பிரச்னைகள் குறையும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உயர்பதவிகளில் இருப்போரின் ஆதரவு கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்கள் விழிப்புடன் பணியாற்றுவார்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளைப் பெறுவார்கள். விவசாயிகள் லாபம் ஈட்டுவார்கள். 

அரசியல்வாதிகள் புதிய ஆதரவாளர்களைப் பெறுவார்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களின் குடும்பப் பொருளாதாரம் மேன்மை அடையும். மாணவர்கள் குடும்ப நிலையை அனுசரித்து நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - அக். 30, 31, நவ. 1.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

அரசு சலுகைகள் கிடைக்கும்.  வருமானம் உயரத் தொடங்கும். உடன்பிறந்தோரிடம் இருந்த  மனக்கசப்புகள் தீரும். தெய்வ வழிபாட்டில் மனதை ஈடுபடுத்தவும். 

உத்தியோகஸ்தர்கள் குழப்பங்களுக்குத் தீர்வு காண்பீர்கள். 
வியாபாரிகள் திருப்பங்களைக் காண்பீர்கள். விவசாயிகள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். 

கலைத் துறையினர் போட்டியாளர்களைப் பொருட்படுத்த மாட்டார்கள். பெண்கள் மழலை பாக்கியம் உண்டாகக் காண்பீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - நவ. 2.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

றமைகளை வெளிப்படுத்துவீர்கள்.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பெற்றோருடன் ஒற்றுமையாகப் பழகவும். 

உத்தியோகஸ்தர்கள் சக பணியாளர்களின் பதவி உயர்வுக்கு  உதவுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவீர்கள். அரசியல்வாதிகள் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள்.  கலைத் துறையினருக்கு மூத்தோரின் ஆதரவு கிடைக்கும். 

பெண்கள் குடும்பத்தினரால் நேசிக்கப்படுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில்  வசதிகளைப் பெருக்குவீர்கள். எடுத்த காரியங்களை வெற்றியுடன் முடிப்பீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய சேமிப்புகளில் சேர்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் நிலையைத் தக்க வைப்பீர்கள். வியாபாரிகள் அசாதாரண நிலையைக் காண்பார்கள். விவசாயிகள் விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்பார்கள். அரசியல்வாதிகள் போட்டிகளைச் சமாளிப்பார்கள். 

கலைத் துறையினர் பண விஷயத்தில் கவனமாக இருப்பீர்கள். பெண்களுக்கு உடனிருப்போரிடம் இருந்த மனக் கசப்புகள் நீங்கும். மாணவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வருமானம் சிறப்பாக இருக்கும். கடன்கள் வசூலாகும். காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும். விவேகத்துடன் பணியாற்றுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் புதிய வேலைகளுக்கு மாறுவீர்கள்.   வியாபாரிகள்  புதிய யுக்திகளைக் கையாளுவார்கள். விவசாயிகள் புதிய பயிர்களை பயிரிடுவார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவார்கள். 

கலைத் துறையினர் மூத்தவர்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பெண்கள் புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள்.  மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும். குடும்பத்தினரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச் சுமை குறையும். வியாபாரிகள் கடையை பிரதானமான இடத்துக்கு மாற்றுவார்கள். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளின் புகழ் உயரும். 

கலைத் துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். பெண்கள் வசீகரப் பேச்சால் பிறரை கவருவார்கள். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com