மனம் சுத்தமடைய...

கங்கை நதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா கங்கா புஷ்கரம். ஏற்கெனவே 2011-இல் நடைபெற்றது.
மனம் சுத்தமடைய...

கங்கை நதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா கங்கா புஷ்கரம். ஏற்கெனவே 2011-இல் நடைபெற்றது. தொடர்ந்து, 2023-இல் நடைபெறுகிறது. ஏப்.22 முதல் தொடங்கி, மே 3-ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறுகின்றன.

கங்கோத்ரி, கங்காசாகர், ஹரித்வார், பத்ரிநாத், கேதாரிநாத், வாராணசி, பிரயாக்ராஜில் இது சிறப்பாக நடைபெற்று வருகிறது. தில்லியிலிருந்து முதலில் ஹரித்வார் சென்று, கங்கா ஸ்நானம், மாலை ஆரத்தி, ஹார்கி பவுரி என்ற இடத்தில் பார்த்து அங்குள்ள மானசாதேவி கோயிலையும் தரிசிக்கலாம். ஹரித்வாரிலிருந்து உத்தரகாசி, பிறகு கங்கோத்ரி, ரிஷிகேஷ், ஹரித்வார், தில்லி என பயணம் மேற்கொள்கின்றனர். அனைத்து இடங்களிலும் கங்கையில் குளியல் நடைபெறுகிறது.

யமுனோத்ரியில் சுடுநீர் ஊற்றி குளியல்,  உத்தரகாசியில் காசி விசுவநாதர் தரிசனம் என்று பக்தர்கள் மனம் குளிர தரிசனம் நடைபெறுகிறது.இந்திய-திபெத் எல்லையில் உள்ள மானாகிராம் என்ற அழகிய கிராமத்தைப் பார்க்கலாம். 
கங்கையானது அலக்நந்தா,  பாகிரதி, புலிகங்கா, பிந்தர், மந்தாகிணி, பிலகங்கா ஆகிய நதிகள் இணைந்தது.  தேவ பிரயாகையில் அலக்நந்தா பாகிரதியுடன் சேர்ந்து கங்கை ஆகிறது. பின்னர், 2,525 கி.மீ. ஓடி கடலில் கலக்கிறது. இந்த புஷ்கரா 12 நதிகளில்  இந்தியாவில் கொண்டாடப்
படுகிறது.
குறிப்பிட்ட நதியின் ராசிக்குள் வியாழன் நுழையும்போது, முதல் 12 நாள்கள் ஆடி புஷ்கர நாளாகவும், அந்த நதியிலிருந்து வியாழன் செல்லும் கடைசி 12 நாள்கள் அந்திய புஷ்கர நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
பலன்கள்: குறிப்பிட்ட நேரத்தில் சூரியன் நதிநீரை காந்தமாக்கி குணப்படுத்தும் திறனை அளிக்கிறது என்றும் இந்தச் சக்தி தியானத்தால் கிடைக்கும் சக்திக்கு சமமாகும் என்பது ஐதீகம். இந்த நேரத்தில் ஆற்றில் ஓடும் நீரை பிடித்துவந்து வீட்டில் சூரிய உதயத்துக்கு முன் அல்லது பிற்பகல் 12 மணி அளவில் குளித்தால் அந்தச் சக்தி உடலை வலுவேற்றும் என்பதும் நம்பிக்கை.

இந்த 12 நாள்களில் கங்கையில் குளித்தால்,  மனம், உடல், ஆன்மா சுத்தமடையும் என்பது ஐதீகம். கொல்கத்தாவில் இருந்து சுமார் 135 கி.மீ. தொலைவில் உள்ள கங்காசாகர் என்ற இடத்தில் கங்கா ஸ்தானம் மிகவும் விசேஷம். ஏனெனில், இங்குதான் கங்கை கடலில் கலக்கிறது. கங்கையில் எந்தப் புனிதக் கரையில் குளித்தாலும், தானங்களை அளிப்பது மிகவும் நன்மைகளைத் தரும்.

-ராஜி ராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com