

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 11 - 17) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
முயற்சிகளில் பலன் கிடைக்கும். இழுபறியான செயல்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும். தன்னம்பிக்கை பலப்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிவோர் அனுகூலமாக நடப்பார்கள். வியாபாரிகள் புதிய இலக்குகளை நோக்கிப் பயணிப்பார்கள்.
விவசாயிகள் கடன்களைத் திருப்பிச் செலுத்துவார்கள். அரசியல்வாதிகள் மேலிடத்துக்குப் பணிந்து செயல்படுவார்கள். கலைத் துறையினரின் மதிப்பு உயரும். பெண்கள் குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
பூர்விகச் சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். உழைப்புக்கேற்ற வருவாய் கிடைக்கும். மனதுக்கினிய பயணம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள்.
வியாபாரிகள் வங்கிக் கடனை அடைப்பீர்கள். விவசாயிகள் விவசாயத்தில் புதிய உத்தியை புகுத்துவார்கள். அரசியல்வாதிகள் கட்சி மேம்பாட்டுக்கு நிதி வசூலிப்பார்கள். கலைத் துறையினர் பணப் பற்றாக்குறையைச் சரிசெய்வார்கள்.
பெண்கள் ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துவார்கள். மாணவர்கள் பிறரிடம் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஓய்வின்றி பணியாற்றுவீர்கள். மதிப்பு உயரத் தொடங்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணியை வீட்டுக்கு கொண்டு வர மாட்டார்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம்.
விவசாயிகள் கவனத்துடன் இருக்கவும். அரசியல்வாதிகள் கட்சிப் பணியை நல்லபடியாகச் செய்வார்கள். கலைத் துறையினர் உயர்ந்தோரின் மனம் கோணாமல் நடப்பார்கள்.
பெண்கள் புதிய சேமிப்புகளில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற பாடுபடுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
குடும்ப முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவீர்கள். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். பெற்றோருக்கு சிறிய உபாதைகள் வந்து மறையும். அரசு விஷயங்களில் கவனமாக இருப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். விவசாயிகள் கால்நடைகளை நல்ல முறையில் பராமரிப்பார்கள்.
அரசியல்வாதிகள் மேலிடத்தின் போக்கை அறிந்து நடப்பார்கள். கலைத் துறையினர் செல்வாக்கு பெறுவார்கள். பெண்கள் கணவருடன் ஆலோசித்து முடிவெடுப்பீர்கள். மாணவர்கள் போட்டிகளில் ஈடுபட வேண்டாம்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
பெற்றோரின் ஆதரவுடன் குடும்பத்தில் மகிழ்ச்சி காண்பார்கள். நண்பர்களால் நன்மைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் திறமையாகப் பணிபுரிவார்கள்.
வியாபாரிகள் கூட்டாளிகளிடம் இணக்கமாகப் பழகவும். விவசாயிகள் உரங்களைப் பயன்படுத்துவார்கள். அரசியல்வாதிகள் எவருக்கும் முன்ஜாமீன் போடாதீர்கள்.
கலைத் துறையினர் திறமையாக உழைப்பார்கள். பெண்கள் ஆடை, ஆபரணங்களை வாங்குவார்கள்.
மாணவர்கள் விருப்பப்பட்ட பாடப் பிரிவுகளில் சேர்வார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
கடினமான காரியங்களையும் சாதகமாக்கிக் கொள்வீர்கள். குடும்ப மரியாதையை உயர்த்துவீர்கள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் வளர்ச்சிக்கான செயல்களைச் செய்வார்கள்.
வியாபாரிகள் லாபத்தைக் காண்பார்கள். விவசாயிகள் விளைச்சலைக் காண்பார்கள். அரசியல்வாதிகள் நேர்வழியில் செல்வார்கள். கலைத் துறையினருக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். கல்வியிலும், விளையாட்டிலும் மாணவர்கள் மேன்மை அடைவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
தொழிலில் நிலையான முடிவெடுப்பீர்கள். பொருளாதாரத்தைப் பக்குவமாகச் சமாளிப்பீர்கள். அரசு உதவிகள் கிடைக்கும். பெயர் புகழ் உயரும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பாராட்டைப் பெறுவார்கள்.
வியாபாரிகள் வருமானம் அதிகரிக்கப் பாடுபடுவார்கள். விவசாயிகள் கொள்முதலில் லாபத்தைக் காண்பார்கள்.
அரசியல்வாதிகள் அரசு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். கலைத் துறையினர் பிறருக்கு உதவுவார்கள். பெண்கள் குடும்பத்தில் அமைதியைப் பேணுவார்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வைக் காண்பார்கள்.
சந்திராஷ்டமம் - ஆக. 11.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
தொழிலில் பிரச்னைகளுத்குத் தீர்வு காண்பீர்கள். பெரியோரிடம் ஆசிகளைப் பெறுவீர்கள். பந்தயங்களில் ஈடுபட வேண்டாம். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சில சலுகைகளைப் பெறுவார்கள்.
வியாபாரிகளுக்கு வருவாய் படிப்படியாக உயரும். விவசாயிகள் பணியாளர்களின் மனக் குறையைத் தீர்த்து வைப்பீர்கள். அரசியல்வாதிகள் பிறர் கருத்துகளுக்கு மதிப்பு அளிப்பார்கள். கலைத் துறையினருக்கு வெற்றி கிடைக்கும்.
பெண்களின் குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். மாணவர்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வார்கள்.
சந்திராஷ்டமம் - ஆக. 12,13.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வருவாய் உயரும். குழந்தைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். நல்ல காரியங்களைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள்.
வியாபாரிகள் வியாபாரத்தை நிதானமாக நடத்துவார்கள். விவசாயிகள் மற்றவர்களின் பிரச்னையைத் தீர்க்க உதவுவார்கள். அரசியல்வாதிகளின் செயல்களை மேலிடம் பாராட்டும்.
கலைத்துறையினர் பயணம் மேற்கொள்வார்கள். பெண்கள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - ஆக. 14,15,16.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
அசையா சொத்துகளை வாங்க முயற்சிப்பீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தினரும் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். புதிய நண்பர்கள் வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பார்கள்.
உத்தியோகஸ்தர்கள் ஆற்றலை வெளிப்படுத்துவார்கள். வியாபாரிகள் லாபத்தைக் காண்பார்கள்.
விவசாயிகள் பயிர் விளைச்சலைக் காண்பார்கள். அரசியல்வாதிகள் வில்லங்கங்களில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். கலைத் துறையினரின் பயணத்தில் தடைகள் நீங்கும்.
உறவினர் வருகையால் பெண்கள் மகிழ்வார்கள். மாணவர்கள் நண்பர்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள்.
சந்திராஷ்டமம் - ஆக. 17.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பணப் பற்றாக்குறை நீங்கும். கடன் வசூலாகும். குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். ஆன்மிகத்தில் முழு மனதுடன் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் வேலை செய்யுமிடத்தில் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள வேண்டாம். வியாபாரிகள் தரகுப் பணியில் ஈடுபடுவீர்கள்.
விவசாயிகள் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். கலைத் துறையினர் அனைத்துக் காரியங்களிலும் நிலையான முடிவெடுப்பார்கள்.
பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவார்கள். மாணவர்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
தொழில் பிரச்னைகளில் சுமுக முடிவைக் காண்பார்கள். தொழில் போட்டிகளைத் தகர்த்தெறிவீர்கள். கடன்களைத் திரும்பச் செலுத்துவீர்கள்.
இல்லத்தில் குழந்தை பாக்கியம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள். வியாபாரிகள் இடையூறுகளைக் குறைப்பீர்கள். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவார்கள்.
அரசியல்வாதிகள் உஷாராக இருக்கவும். கலைத் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். பெண்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.