சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டத்தில் 45 அடி உயரத்தில் நந்தீஸ்வரன் சிலை அமைக்கப்படுகிறது. உலகிலேயே மிக உயரமான சிலை அமைந்துள்ள இந்தக் கோயில் கும்பாபிஷேகம் 2024}இல் நடைபெறவுள்ளது.
இதன் திருப்பணியில் ஈடுபட்டுள்ள நாற்பத்து இரண்டு வயதான ராஜவேலுவிடம் பேசியபோது:
"ஜோதிடம் கற்று பிரசங்கம் சொல்லி வந்தேன். எனது நிலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தேன். சிவனுக்கு முன் வணங்க வேண்டிய நந்தீஸ்வரனுக்கு,
உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்க வேண்டும் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நினைத்தேன்.
மலேசியாவில் உள்ள முருகன் சிலை, வாழப்பாடி அருகேயுள்ள ஏத்தாப்பூரில் 146 அடியில் உள்ள முருகன் சிலையை தத்ரூபமாக வடிவமைத்த சிற்பியான திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி குழுவினரைத் தொடர்பு கொண்டேன்.
எனக்குச் சொந்தமான இரு ஏக்கர் நிலத்தில் மூன்று ஆண்டுகளாகத் தொடர் கட்டுமானப் பணிகளுக்குப் பின்னர், தற்போது சிற்ப சாஸ்திர ஆமக விதிப்படி 45 அடி உயரத்தில் மிக நேர்த்தியாக, மேற்கு நோக்கி நந்தீஸ்வரர் சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
நந்தீஸ்வரன் சிலைக்குள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் பிரம்மாண்டமான சிவன் திருவுருவச் சிலையும், தியான மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பாகும்.
தற்போதே பக்தர்கள் இந்தக் கோயிலைக் காண வருகை தருகின்றனர்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.