கடக ராசிக்காரர்கள் இதை மட்டும் செய்யாதீங்க! வாரப் பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூலை 7 - ஜூலை 13) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
கடக ராசிக்காரர்கள் இதை மட்டும் செய்யாதீங்க! வாரப் பலன்கள்
Updated on
3 min read

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூலை 7 - ஜூலை 13) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

கடன் பிரச்னைகள் குறையும். தொழிலில் புதிய உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்கள் பிறரிடம் விட்டுக் கொடுத்து நடப்பார்கள். வியாபாரிகள் தன்னம்பிக்கையைக் காண்பார்கள். விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை திரும்பக் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் அனுகூலங்களைப் பெறுவார்கள். கலைத்துறையினருக்குப் பயணங்கள் கைகூடும். பெண்கள் பெரியோரின் ஆசிகளைப் பெறுவார்கள். மாணவர்கள் எதிர்காலத்துக்குத் திட்டமிடுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  வாகனங்களை வாங்குவீர்கள்.   உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழிலில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பளிச்சிடும். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள்.  விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் கவனமாக நடப்பார்கள்.

கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்களில் வருவாய் கிடைக்கும். பெண்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் ஈடுபடுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

ஆக்கபூர்வமாகச் சிந்திப்பீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள்.  எவரிடமும் வாக்குவாதம் வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள்  பக்குவமாகப் பேசுவார்கள். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.   விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரித்து லாபம் உயரும்.

அரசியல்வாதிகள் வேகத்திலும் விவேகத்துடன் பணியாற்றுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். பெண்கள் பிறரிடம் கவனமாக இருக்கவும். மாணவர்கள்  பிறரிடம் தங்களைத் திருத்தம் செய்துகொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

எவருக்கும் வாக்கு கொடுப்பதோ, பணம் வாங்கிக் கொடுப்பதோ கூடாது. உறவினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். 

ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள்.  பெற்றோரின் ஆதரவு தொடரும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.  வியாபாரிகளுக்கு கடன் பிரச்னைகள் விலகும்.  விவசாயிகள் கால்நடைகளை வளர்ப்பார்கள்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு.  கலைத்துறையினர் போட்டிகளைச் சமாளிப்பார்கள். பெண்கள் கணவரிடம் பாசத்தைப் பெறுவார்கள்.  மாணவர்களுக்கு உழைப்பு கூடும்.

சந்திராஷ்டமம் - ஜூலை 7,8.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் புதிய நுட்பங்களைப் புரிந்துகொள்வீர்கள்.  பூர்விக சொத்துகளால் லாபம் கிடைக்கும்.  மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.  பயணங்களில் நன்மை கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் கடினமான வேலைகளை எளிதில் முடிப்பீர்கள். வியாபாரிகள் எவருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம்.  விவசாயிகளுக்கு புதிய குத்தகை சுலபமாகக் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் செயல்களில் திறமையைக் காட்டுவார்கள்.  பெண்கள் சிந்தித்து செயல்படுவார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 9,10.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் குதூகலம் நிறையும். சுப செலவுகளைச் செய்வீர்கள்.  உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவீர்கள். கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பயணங்களை மேற்கொள்வார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் சமநிலையைக் காண்பார்கள். விவசாயிகள் தொழிலாளர்களுக்கு உதவி செய்வார்கள்.

அரசியல்வாதிகள் எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பார்கள். கலைத்துறையினர் நன்மதிப்பைப் பெறுவார்கள். பெண்கள் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வார்கள். மாணவர்கள் கைத்தொழிலை கற்பார்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 11,12.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

சொத்துகளை வாங்குவீர்கள்.  புதிய நிதித் திட்டங்களில் ஈடுபடுவீர்கள்.  சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். கோயில்களுக்கும் செல்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வர வேண்டிய பணம் தடையின்றி வரும். வியாபாரிகள் புதிய முதலீடுகளால் முன்னேறுவார்கள். விவசாயிகள் குத்தகை பாக்கியைத் திருப்பி அடைப்பார்கள். 

அரசியல்வாதிகள் இலக்குகளை எட்டுவார்கள்.  கலைத்துறையினர் பாராட்டுகளைப் பெறுவார்கள். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். மாணவர்கள் நல்ல நண்பர்களிடம் பழகுவார்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 13.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகளில் துணிந்து ஈடுபடுவீர்கள். மற்றவர்களிடமிருந்த பிரச்னைகளைத் தீர்த்துகொள்வீர்கள். அரசு உதவிகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் திறம்பட பணியாற்றுவார்கள்.  வியாபாரிகள் முக்கிய முடிவை எடுப்பார்கள்.  விவசாயிகள் ஊடுபயிர்களைப் பயிரிடுவார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவுவார்கள்.  கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். பெண்கள் ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துவார்கள். மாணவர்கள் ஆசிரியர்களிடம் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

குறுக்கு வழியைத்  தேட மாட்டீர்கள். புதிய அனுபவங்களைக் கற்பீர்கள். பெற்றோர்களை மதித்து நடப்பீர்கள்.  விலகியிருந்த உறவினர்கள் குடும்பத்துடன் இணைவார்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய வேலைகளைப் பெறுவார்கள்.  

வியாபாரிகளுக்கு கடன் பிரச்னைகள் குறையும்.  விவசாயிகள் புதிதாக நிலங்களை வாங்க முன்பணம் செலுத்துவார்கள்.  அரசியல்வாதிகள் திடீர் பயணம் செய்ய நேரிடும். கலைத்துறையினருக்கு  ஆதாயம் கிடைக்கும்.

பெண்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவார்கள்.  மாணவர்கள்  ஆத்ம பலத்தைப் பெருக்கிக் கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழிலை புதிய இலக்குக்கு எடுத்துச் செல்வீர்கள்.  எவரிடமும் சச்சரவு இல்லாமல் நிதானமாகப் பழகுவீர்கள். பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கவனமாக இருப்பார்கள். வியாபாரிகள் புதிய கடன்களைப் பெறுவார்கள். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துக்குச் செலவழிப்பார்கள்.  அரசியல்வாதிகள் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

கலைத்துறையினர் சமூகப் பணிகளில் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். பெண்கள் மனதுக்கு விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணி காக்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.  சுபகாரியங்கள் நடைபெறும். உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளை சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பார்கள்.  வியாபாரிகளுக்கு லாபம் மேம்படும். விவசாயிகள் விவசாயத்தைப் பெருக்குவார்கள். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்கள் சுற்றுலா சென்றுவருவார்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வருவாய் கூடுதலாக இருக்கும்.  கனிவான பேச்சால் பலரின் அறிமுகம் கிடைக்கும். இழுபறி பிரச்னைகளுக்கு முடிவு கிடைக்கும்.  நவீன கருவிகளை வாங்குவீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு நம்பிக்கை கூடும். வியாபாரிகளுக்கு கடன் தீர்க்க உதவி கிடைக்கும்.  விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவார்கள்.

அரசியல்வாதிகள் எதிரிகளுடன் விட்டுக் கொடுத்து நடப்பார்கள். கலைத்துறையினர் பாராட்டுகளையும் விருதுகளையும் பெறுவார்கள்.

பெண்களுக்கு கணவரிடம் அன்னியோன்யம் கிடைக்கும். மாணவர்கள் யோகா கற்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com