

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூலை 14 - ஜூலை 20) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். புகழும் கௌரவமும் உயரும். சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். பொருளாதார நிலை உயரும்.
உத்தியோகஸ்தர்கள் கோபத்தை வெளியே காட்ட மாட்டார்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பார்கள். விவசாயிகள் விளைச்சலைப் பெருக்குவார்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.
கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தம் தேடி வரும். பெண்கள் குடும்பத்தாரோடு மகிழ்ச்சியோடு இருப்பார்கள். மாணவர்கள் எவரிடமும் அளவோடு பழகுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
தொழிலில் இருமடங்கு வெற்றி பெறுவீர்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட மாட்டீர்கள். வாகனங்களுக்கு பழுது செலவு உண்டாகும். சிலர் புதிய வீடு மாறுவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். விவசாயிகள் பழைய குத்தகைகளைத் திருப்பிச் செலுத்துவார்கள். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் பயமின்றி பழகுவார்கள்.
கலைத்துறையினர் புதிய வருவாயைக் காண்பார்கள். பெண்கள் புதிய நட்புகளைப் பெறுவார்கள். மாணவர்கள் பெற்றோரிடம் அனுசரித்து நடப்பார்கள்.
சந்திராஷ்டம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
செயல்களைக் கச்சிதமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் சிறு பிரச்னை உண்டு. வியாபாரிகள் வேலையாள்களை உற்சாகப்படுத்துவார்கள்.
விவசாயிகளுக்குத் தடைபட்ட காரியங்கள் நிறைவு பெறும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவில் சில பிரச்னைகள் தீர்வாகிவிடும். கலைத்துறையினர் சூட்சுமங்களை அறிந்து செயல்படுவீர்கள். பெண்கள் பொறுமையுடன் இருக்கவும். மாணவர்கள் திட்டமிட்டு படிப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். நல்ல செய்திகள் வந்து சேரும். போட்டிகள் இருக்காது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அன்பைப் பெறுவார்கள்.
வியாபாரிகள் வேலையாள்களுக்கு உதவுவார்கள். விவசாயிகள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவார்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தின் கட்டளையை நிறைவேற்றுவார்கள்.
கலைத்துறையினர் தன்னம்பிக்கையுடன் நடப்பார்கள். பெண்கள் கலகங்களைச் சமாளிப்பார்கள். மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
குல தெய்வப் பிரார்த்தனைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் உயரும். தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். வயிறு உபாதைகள் வந்து மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் நிறைவேறும்.
வியாபாரிகள் கடன்களை அடைப்பார்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் பெறுவார்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தின் விருப்பத்தை தொண்டர்களுடன் நிறைவேற்றுவார்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.
பெண்கள் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்களுக்கு ஆதரவு வலுப்படும்.
சந்திராஷ்டமம் -இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
பழைய கடன்களை அடைப்பீர்கள். பங்குச் சந்தையில் வருவாய் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அரசு சலுகைகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
வியாபாரிகள் புதிய முதலீடுகளை யோசித்துச் செய்வார்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள்.
அரசியல்வாதிகளுக்கு பயணங்களில் கவனம் தேவை. கலைத்துறையினரின் பொருளாதாரம் மேம்படும். பெண்கள் சுப காரியங்களால் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் விளையாட்டுத் துறையில் திறம்பட ஈடுபடுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
மந்தமான காரியங்கள் விறுவிறுப்பாக நடக்கத் தொடங்கும். விஷயங்களைப் புரிய வைப்பீர்கள். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். யாரையும் பகைக்க வேண்டாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு போனஸ் கிடைக்கும். வியாபாரிகள் கடினமாக உழைப்பார்கள். விவசாயிகள் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரையும் மதிப்புடன் நடத்துவார்கள். கலைத்துறையினர் திறமையுடன் செயல்படுவார்கள். பெண்கள் புதிய பொருள்களை வாங்குவார்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 14.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
வங்கிக் கடன் கிடைக்கும். தடைகளைத் தாண்டுவீர்கள். குடும்ப உயர்வுக்காக உழைப்பீர்கள். உறவினர்கள் மனமறிந்து காரியமாற்றுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.
வியாபாரிகள் பண விஷயத்தில் வாக்கு கொடுக்காமல் நடக்கவும். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிட்டு வருமானத்தைப் பெருக்குவார்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் நலத்தில் பங்கு பெறுவார்கள். கலைத்துறையினர் சாதனைகளைப் புரிவார்கள். பெண்களுக்கு கணவர் வீட்டாருடனான அன்பு வெளிப்படும். மாணவர்களுக்கு நல்ல யோகம் உண்டாகும்.
சந்திராஷ்டமம் - ஜூலை 15,16,17
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
வருவாயைப் பெருக்குவீர்கள். உயர்ந்தோரின் ஆலோசனைகளைப் பெறுவீர்கள். குல தெய்வ வழிபாட்டைச் செய்வீர்கள். துரோக நண்பர்களிடம் இருந்து விலகிவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள்.
வியாபாரிகள் வியாபாரத்தை மேம்படுத்துவார்கள். விவசாயிகள் கால்நடை வியாபாரத்தையும் செய்து பலனடைவார்கள். அரசியல்வாதிகள் வம்பு வழக்குகளில் ஈடுபடாமல் நடக்கவும். கலைத்துறையினருக்கு வெளிநாடு யோகம் உண்டாகும்.
பெண்கள் கணவருடன் சுமுகமாக இருப்பார்கள். மாணவர்கள் ஆசிரியர் சொல் கேட்டு நடப்பார்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 18,19.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
சில விரயங்கள் ஏற்படும். எதிர்ப்புகளையும் மீறி ஏற்றம் பெறுவீர்கள். தொழிலில் அமோக வெற்றி பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நற்பெயரை எடுப்பீர்கள். வியாபாரிகள் அகலக்கால் வைக்காமல் முதலீடுகளைச் செய்யவும்.
விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவார்கள். அரசியல்வாதிகள் நேர்மையாக நடப்பார்கள். கலைத்துறையினர் கடுமையாக உழைப்பார்கள்.
பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளைக் குறைத்துகொள்ளவும்.
சந்திராஷ்டமம் - ஜூலை 20.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். புதிய நட்புகளால் வாய்ப்புகள் கிடைக்கும்.
போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சிக்கல்களில் இருந்து விடுபடுவார்கள்.
வியாபாரிகள் வீண் செலவுகளைத் தவிர்ப்பார்கள். விவசாயிகள் பழைய குத்தகைகளை அடைப்பார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு நிதியுதவி செய்வார்கள்.
கலைத் துறையினர் புதிய வழிகளைத் தேடுவார்கள். பெண்கள் செலவுகளைக் குறைப்பார்கள். மாணவர்கள் கடினமாக உழைப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
உங்கள் வேலைகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். புதிய அனுபவம் கிடைக்கும். சுப காரியங்களை நடத்துவீர்கள். செல்வாக்கு உயரக் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள். வியாபாரிகள்
வியாபார நுணுக்கங்களைக் கற்பார்கள். விவசாயிகள் கால்நடைகளைப் பராமரிப்பார்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துக்கு ஏற்ப மாறுவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வார்கள். இறைபணிகளில் பெண்கள் ஈடுபடுவார்கள். விரும்பிய பாடப் பிரிவில் மாணவர்களுக்குச் சேர்க்கை கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.