சுபகாரியங்கள் நடைபெறும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன் 9 முதல் ஜூன் 15) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
சுபகாரியங்கள் நடைபெறும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன் 9 முதல் ஜூன் 15) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

முகத்தில் பொலிவு உண்டாகும்.  காரியங்களை முடித்துவிடுவீர்கள்.  பிறரிடம் நன்மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள்.  வருவாயை ஏற்படுத்த முயற்சிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு கடன் கோரிக்கைகள் நிறைவேறும்.  வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணக்கமாக இருப்பார்கள்.

விவசாயிகளுக்கு கால்நடைகளால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகள் மேலிடக் கட்டளைகளை மதிப்பார்கள்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களின் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

முயற்சிகளுக்கு முழுப்  பலன் கிடைக்கும்.  குடும்பத்தைவிட்டு பிரிந்தவர்களை ஒன்றுசேர்ப்பீர்கள்.  

பழைய கடன்களை அடைப்பீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒற்றுமையாகப் பழகுவார்கள். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் சீரான நிலையைக் காண்பார்கள்.  விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறுவார்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணியில் வெற்றிவாகை சூடுவார்கள். கலைத்துறையினர் முழுத் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

பெண்கள் செலவினங்களைச் சுபச் செலவாக மாற்றுவார்கள். மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

வெற்றிக்கு முழு அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் போல் நடிக்கும் விரோதிகளை ஒதுக்குவீர்கள். பொருளாதாரம் உயரும். மனதுக்கினிய பயணங்களைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வார்கள். விவசாயிகள் புதிய பாசன வசதிகளைப் பெருக்குவார்கள்.

அரசியல்வாதிகள் எதிரிகளின் ரகசிய திட்டங்களைப் புரிந்துகொள்வார்கள். கலைத்துறையினர் எதிர்பாராத வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெண்கள் குழந்தைகளால் மகிழ்வார்கள். மாணவர்கள் கவனமாக இருக்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பிறரின் உதவிகள் கிடைக்கும்.  உள்ளதை மறைக்காமல் வெளிப்படுத்துவீர்கள்.  பயணங்களால் நன்மை உண்டாகும். வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். வியாபாரிகள் கடனைத் திருப்பிச் செலுத்துவார்கள். விவசாயிகள் தரமான விதைகளைப் பயிரிடுவார்கள்.  

அரசியல்வாதிகள் பயணங்களால் புதிய தொண்டர்களைப் பெறுவார்கள். கலைத்துறையினர் ஒப்பந்தங்களைத் திறம்பட செய்து முடிப்பார்கள்.

பெண்கள் குடும்பத்தில் நிம்மதி நிறையக் காண்பார்கள்.  மாணவர்கள் பொறுப்புடன் நடப்பார்கள்.
சந்திராஷ்டமம் - ஜூன் 9,10.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

அரசு ஆதரவு கிடைக்கும்.  திட்டமிட்டு சேமிப்பை உயர்த்துவீர்கள்.  செல்வாக்கு உயரும்.  புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு போட்டி பொறாமை அதிகரிக்கும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை முடிக்காமல் திணறுவார்கள். கலைத்துறையினர் தடைகளைத் தாண்டி முன்னேறுவார்கள்.

பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - ஜூன் 11,12,13.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தேவையற்ற ஆசைகளைக் குறைப்பீர்கள். முடங்கிக் கிடந்த தொழிலுக்கு உயிர் கொடுப்பீர்கள். நேர்மையாக நடப்பீர்கள்.

எவருக்கும் கடன் கொடுக்காதீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டு, முடிப்பார்கள். வியாபாரிகள் மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பார்கள்.

விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் லாபம் பெருகும். அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் உண்டாக்கித் தருவார்கள்.

கலைத்துறையினரின் புகழ் உயரும். பெண்கள் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

சந்திராஷ்டமம் - ஜூன் 14,15.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் நடைபெறும்.

உத்தியோகஸ்தர்கள் கால நேரத்தை வீணாக்காமல் உழைத்து புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள். வியாபாரிகள் புதியவர்களை நம்பி கடன் தர வேண்டாம். விவசாயிகள் கால்நடைகளால் பலன் பெறுவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு பலவழிகளிலும் வருமானம் தேடி வரும்.   கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்கள் குழந்தைகளால் சந்தோஷமடைவார்கள். மாணவர்கள் கடுமையான உழைப்பால் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதாரம் மேம்படும்.   சுற்றுலா சென்றுவர திட்டமிடுவீர்கள். உயர்ந்தோரின் அறிவுரைப்படி நடப்பீர்கள். பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் புதிய அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் குறைந்த முதலீட்டில் வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.  

அரசியல்வாதிகளின் மதிப்பும், மரியாதையும் உயரும். கலைத்துறையினர் புதிய வாகனங்களை வாங்குவார்கள். பெண்கள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவார்கள். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சகளைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தொழிலை மேம்படுத்த கடுமையாக உழைப்பீர்கள்.  அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள்.  பெற்றோரிடம் அனுசரித்து நடப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் முக்கிய வேலைகளுக்கு முன்னுரிமை அளிப்பீர்கள்.

வியாபாரிகள் சிறிய போட்டிகளைச் சந்திப்பார்கள்.  விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்குவார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

கலைத்துறையினர் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவார்கள். பெண்கள் கணவர்வழி குடும்பத்தினருடன் சுமுகமாகப் பழகுவார்கள்.  மாணவர்கள் உடற்பயிற்சிகளைச்  செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

புதிய வீடு, நிலம் வாங்க முன்பணம் கொடுப்பீர்கள்.   தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.  பங்குச் சந்தையிலும் முதலீடு செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கவனத்துடன் பணிபுரிவார்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளில் விற்பனை செய்ய முயற்சிப்பார்கள். விவசாயிகள் சக

விவசாயிகளுக்குத் தகுந்த ஊதியம் வழங்குவார்கள். அரசியல்வாதிகள் அரசுத் துறையினருடன் இணக்கமாகப் பழகுவார்கள்.

கலைத்துறையினர் பொருளாதார நிலை சீரடையும்.  பெண்கள் குடும்பப் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பார்கள். மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வருமானம் படிப்படியாக உயரும்.  கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள்.  நட்பைத் தக்க வைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும்.  வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணக்கமாகப் பழகுவார்கள். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவார்கள்.

அரசியல்வாதிகள் தகவல்களை அனுப்பும்போது கவனமாக இருப்பார்கள். கலைத்துறையினர் திறமையை வெளிப்படுத்துவார்கள்.  பெண்கள் எண்ணிய காரியங்களை வெளிப்படுத்துவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குடும்ப நலனுக்காக,   அக்கறை எடுப்பீர்கள்.  தொழிலில் அதிக உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.  அரசு சலுகைகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் புதுப்புது சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பீர்கள். வியாபாரிகள் கூட்டு வியாபாரத்தில் கவனம் தேவை. விவசாயிகளுக்கு பூச்சிகளால் பாதிப்பு இருக்காது.

அரசியல்வாதிகளின் செயல்களை எதிர்க்கட்சியினரும் பாராட்டுவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

பெண்கள் சொத்துகளை வாங்குவார்கள். மாணவர்கள் பெற்றோரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com