ஊதிய உயர்வு நிச்சயம் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன் 16 முதல் ஜூன் 22) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
ஊதிய உயர்வு நிச்சயம் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்
Updated on
3 min read

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன் 16 முதல் ஜூன் 22) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

திட்டமிட்ட வெளியூர் பயணங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.  புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.  பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் முதலீடுகளைச் செய்வார்கள். விவசாயிகள் பணியாளர்களை அன்புடன் நடத்துவார்கள்.  அரசியல்வாதிகள் காரியங்களைச் செய்துமுடிப்பார்கள். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் உறவினர்கள் வருகையால் மகிழ்வார்கள். மாணவர்கள் நல்ல பெயரை எடுப்பார்கள்.
சந்திராஷ்டமம்} இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

உங்களின் திறமைகள் பளிச்சிடும். புதிய திட்டங்கள் கைவந்து சேரும். பிறருக்கு உதவி நன்மதிப்பைப் பெறுவீர்கள்.  உடல் ஆரோக்கியம் 
நன்றாக இருக்கும்.  உத்தியோகஸ்தர்களின் பொருளாதார நிலை சீரடையும். வியாபாரிகள் பிரச்னைகளைச் சமாளிப்பார்கள். விவசாயிகள் விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்பார்கள்.  அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் 
கவனமாக இருப்பார்கள். கலைத்துறையினர் 
புகழைத் தக்க வைப்பார்கள்.  பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்}இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

அநாவசிய விவகாரங்களைத் தவிர்த்துவிடுங்கள். உடன்பிறந்தோரால் இடையூறு ஏற்படும்.  குடும்பத்தில் அமைதி நிலவும். மறைமுக எதிர்ப்புகள் தொடரும். உத்தியோகஸ்தர்கள் கவனம் தவறாமல் உழைப்பார்கள்.  

விவசாயிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். விவசாயிகள் புழுபூச்சிகளால் சிறு நஷ்டம் அடைவார்கள்.

அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருக்கவும். கலைத்துறையினர் சிக்கனமாகச் செலவு செய்வார்கள்.

பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமை நிலைநாட்ட கஷ்டப்படுவார்கள். மாணவர்கள் நண்பர்களை நம்ப வேண்டாம்.
சந்திராஷ்டமம்} இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

செல்வமும் செல்வாக்கும் உயரும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

குழந்தைகளின் கல்விக்காகச் செலவழிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறரிடம் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். வியாபாரிகள் சாதுர்யத்துடன் வியாபாரத்தை நடத்துவார்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்களால் லாபம் அடைவார்கள்.

அரசியல்வாதிகள் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவார்கள். கலைத்துறையினர் விழிப்புடன் இருப்பார்கள். பெண்கள் சவால்களைச் சாதகமாக்கிக் கொள்வார்கள். மாணவர்கள் பிற ஊர்களில் கல்வி பயில்வார்கள். 

சந்திராஷ்டமம்}இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

சுபகாரியங்கள் நடக்கும். குடும்ப உயர்வுக்காகப் பாடுபடுவீர்கள்.  குறை சொல்பவர்களைக் கண்டுகொள்ளமாட்டீர்கள்.  வெளியூர் பயணம் உண்டு.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். விவசாயிகளுக்கு பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாது.

அரசியல்வாதிகள் முன்யோசனை இல்லாமல் பேச வேண்டாம். கலைத்துறையினர் உற்சாகமாய் இருப்பார்கள். பெண்கள் புதிய மனைகளை வாங்குவார்கள். மாணவர்களின் செயல்திறன் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலை சிறக்கும். பூர்விகச் சொத்துகளில் பிரச்னைகள் நீங்கும். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.  தொழிலை நேர்த்தியாக நடத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணம் உண்டு. வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் சாதகமாகவே முடியும். விவசாயிகள் வரப்புப் பிரச்னைகளில் முடிவு காண்பார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடப்பார்கள். கலைத்துறையினருக்கு பணவரவு இருக்கும். பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பார்கள். மாணவர்கள் இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

தொழில்  வளர்ச்சியடையும். சேமிப்பை உயர்த்துவீர்கள்.  உடல் ஆரோக்கியம் கவனிக்க வேண்டிவரும். நகைச்சுவையாகப் பேசுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய அனுபவம் உண்டாகும்.

வியாபாரிகளுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  விவசாயிகளுக்கு சில உதவிகள் சாதகமாக அமையும். அரசியல்வாதிகளுக்கு அரசுப் பணியில் இருந்த இழுபறி மறையும்.

கலைத்துறையினருக்கு கடன் பிரச்னைகள் தீரும். பெண்கள் உடன்பிறந்தோரை அனுசரித்து நடப்பார்கள். மாணவர்கள் நண்பர்களோடு சிறு பயணங்களைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம் -  ஜூன் 16,17.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தொழிலில் சிறு பிரச்னைகள் தோன்றும். விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். சுப காரியங்கள் நடைபெறும்.

பழைய கடன்களை அடைப்பீர்கள்.  உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு.  வியாபாரிகள் விலை குறைந்த பொருள்களை வாங்கி விற்பார்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவார்கள்.  அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். கலைத்துறையினருக்கு பண வரவு உண்டு. பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டு. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.
சந்திராஷ்டமம்} ஜூன் 18,19,20.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

நண்பர்களுக்கு உதவி நன்மதிப்பை பெறுவீர்கள். புத்திசாலித்தனமும் தன்னம்பிக்கையும் கூடும்.  தொழிலில் வளர்ச்சியடைவீர்கள்.  அரசு உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும்.  வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளின் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.  

அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் உண்டு. கலைத்துறையினரின் எதிரிகள் விலகுவார்கள். பெண்கள் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொள்வார்கள். மாணவர்கள் பொறுமை, நிதானத்துடன் இருப்பார்கள்.
சந்திராஷ்டமம்} ஜூன் 21,22.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழிலில் இருந்த தடைகள் அகலும். வர வேண்டிய பணம் வந்துசேரும். சமுதாயத்தில்  உயர்ந்தோரை நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். மூத்த உடன்பிறந்தோர் ஆதரவாய் இருப்பார்கள். வியாபாரிகள் வியாபாரம் மேம்பட வாகனங்களை வாங்குவார்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகை கிடைக்கும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் 
எண்ணப்படி நடப்பார்கள். கலைத்துறையினருக்கு கடினமான நிலையிலும் வெற்றி உண்டு. பெண்கள் குடும்பத்தில் மேன்மையைக் காண்பார்கள். மாணவர்கள் நேர்மறையாகச் சிந்தித்துச் செயல்படுவார்கள்.
சந்திராஷ்டமம்}இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.  வீட்டில் உறவினர்கள் வருகை உண்டு.  இழுபறியான சூழ்நிலைகள் மாறும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரிகளின் நிலை இயல்பு நிலைக்குத் திரும்பும்.  விவசாயிகளுக்கு மானியம் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிரிகளையும் தன்வசப்படுத்துவார்கள்.  கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளா
தாரம் மேம்படும். பெண்கள் அணிகலன்களை 
வாங்குவார்கள்.  மாணவர்கள் போட்டிகளில் பரிசு பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்}இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வருமானம் உயரத் தொடங்கும். தொழிலில் மிகப் பெரிய மாற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பெற்றோருக்கு உதவி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றம் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளின் வருவாய் உயரும். அரசியல்வாதிகள் எந்தத் தவறையும் செய்ய வேண்டாம்.  கலைத்துறையினர் ரசிகர் மன்றங்களுக்குச் செலவழிப்பீர்கள்.  பெண்கள் வீட்டிலும் வெளியிலும் புகழடைவீர்கள். 

மாணவர்கள் நினைத்த கல்வி நிலையங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com