ஆனி அனுஷ மகோத்ஸவம்
சென்னை மேற்கு சைதாப்பேட்டை பார்ஸன் நகர் வளாகத்தில் ஓம் ஸ்ரீ மகா பெரியவா சத்சங்கம் டிரஸ்ட் சார்பில் அனுஷ மகோத்ஸவம் ஜூலை 1}இல் நடைபெறுகிறது. குரு பௌர்ணமியையொட்டி, வேதவியாச ஹோமம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகம்
சென்னை கிழக்கு தாம்பரம் அருகேயுள்ள மாடம்பாக்கம் அருள்மிகு தேணுகாம்பாள் சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் ஜூலை 5}ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
ஆனிப் பெருந்திருவிழா
திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவில் முக்கிய நிகழ்வுகள்: ஜூன் 30} சுவாமி வெள்ளிக்குதிரை வாகனம், அம்மன் வெள்ளி காமதேனு வாகனம், குதிரை வாகனம், அம்மன் வெள்ளி காமதேனு வாகனம், நடராஜப் பெருமான் திருவீதி உலா, ஜூலை 1} தேர்கடாட்சம் வீதியுலா, ஜூலை 2} திருத்தேரோட்டம், ஜூலை 3} தீர்த்தவாரி.
நாமசங்கீர்த்தனம்
சென்னை குரோம்பேட்டை நேரு நகர் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாம பாராயண மண்டலி சார்பில், ஜோதி நகர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீவிஷ்ணுசகஸ்ர நாம பாராயணம் 1,581 வார நிகழ்ச்சியும், தொடர்ந்து , ரகுவீர பட்டாச்சாரியார் சுவாமி நாம சங்கீர்த்தனமும் நடைபெறும்.
சுவாஸினிமண்டலி ஆனிவிழா
சென்னை திருவல்லிக்கேணி வெங்கடாசலம் தெருவில் ஸ்ரீபாண்டுரங்க சுவாஸினி மண்டலியின் 49}ஆவது ஆண்டு விழா பஜனை, திவ்ய நாம சங்கீர்த்தனம், ராதா கல்யாணம், ஆஞ்சனேயர் உற்சவம் போன்ற வைபவங்களுடன் ஜூன் 29 முதல் ஜூலை 2 வரை நடைபெறுகிறது.
வ்யாஸ பௌர்ணமி உற்சவம்
திருவள்ளூர் மாவட்டம் குருவாயல் கிராமம் ஸ்ரீஜகத்குரு வேதகாவ்ய வித்யாபவனம் டிரஸ்ட் வேத சாஸ்திரி பாடசாலையில் வ்யாஸ பௌர்ணமி உற்சவம் ஜூலை 1 முதல் 3}ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.