பம்மல் புஷ்பகிரீஸ்வரர்

பம்மலில் உள்ள ஸ்ரீ புஷ்பகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ள இத்தலம் சிவன் மலை என்றும் அழைக்கப்படுகிறது.
பம்மல் புஷ்பகிரீஸ்வரர்
Updated on
1 min read

பம்மலில் உள்ள ஸ்ரீ புஷ்பகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ள இத்தலம் சிவன் மலை என்றும் அழைக்கப்படுகிறது. பல்லாவரத்திலிருந்து திருநீர்மலை செல்லும் பிரதான சாலையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் இக்கோயில் உள்ளது.

மூலவர்: ஸ்ரீ புஷ்பகிரீஸ்வரர்

இறைவி: ஸ்ரீ புஷ்பாம்பிகை

குடியிருப்புகளுக்கு இடையில் 27 படிகள் கொண்ட சிறிய மலையில் கோயில் உள்ளது. கருவறைக்கு எதிரே பலிபீடம், ரிஷபம் உள்ளன. கருவறை வாசலில் துவாரபாலகர், விநாயகர், முருகன் ஆகியோர் உள்ளனர். மூலவர் சதுர ஆவுடையார் மீது இருக்கிறார். கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்கையுடன் லிங்கோத்பவர் சந்நிதிகள் உள்ளன.

பிரகாரத்தில் திருநீர்மலைப் பெருமாள் பாதம், ஆஞ்சனேயர், அம்பாள் சந்நிதி, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், நவகிரகங்கள் மற்றும் சிவகாமியுடன் நடராஜர் அருள் புரிகின்றனர்.

அம்பாள் ஸ்ரீ புஷ்பாம்பிகை பிரதான கோயிலின் வலது புறத்தில் கிழக்கு நோக்கிய தனிக் கோயிலில் உள்ளார். அம்பாள் சந்நிதிக்கு எதிரே ரிஷபம், பலிபீடம் உள்ளது. அம்பாள் அபய வரத ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். 

இரண்டு குடியிருப்பு வளாகங்களுக்கு இடையில் 27 படிகள் கொண்ட சிறிய மலையின் மீது கோயில் உள்ளது. இக்கோயில், கருவறை, அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கருவறை பாத பந்த அதிஷ்டானத்தில் உள்ளது. இக்கோயில் கடந்த சில ஆண்டுகளாக புனரமைக்கப்பட்டது. ஆதிஸ்தானத்திற்கு மேல் செங்கற்களால் கட்டப்பட்ட கோயில். சமீபத்திய புனரமைப்பின் போது முழு ஆலயமும் ஸ்தூபி வரை கல்லால் புனரமைக்கப்பட்டது. 

வழக்கமான பூஜைகள் தவிர, செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பஜனை, ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம், ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகி மற்றும் ஸ்ரீ ருத்ர மகா வேத பாராயணம் நடைபெறுகிறது.
பிரதோஷம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், பெüர்ணமி கிரிவலம், சதுர்த்தி, கிருத்திகை, தேய்பிறை அஷ்டமி, மாதாந்திர சிவராத்திரி, அமாவாசை ஆகிய நாள்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு: 98410 95451, 98417 48003.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com