நிகழ்வுகள் - ஸ்ரீராதா மாதவ கல்யாண மகோற்சவம்

சென்னை  குரோம்பேட்டை அஸ்தினாபுரம் ஸ்ரீராம ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீராதாமாதவ கல்யாண மகோற்சவம்.
ne_laxminarayana_perumal_koil_krishna_jayanthi_0609chn_100_5
ne_laxminarayana_perumal_koil_krishna_jayanthi_0609chn_100_5
Updated on
1 min read


ஸ்ரீராதா மாதவ கல்யாண மகோற்சவம்

சென்னை  குரோம்பேட்டை அஸ்தினாபுரம் ஸ்ரீராம ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீராதாமாதவ கல்யாண மகோற்சவம். பாகவத பத்ததியில், தஞ்சாவூர் ராஜேஷ் பாகவதர் குழுவினரால்  செப். 9,10-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
தொடர்புக்கு - 73970 88720.

நாம சங்கீர்த்தன சேவை 
சென்னை மடிப்பாக்கம் ஸ்ரீஹரிஹர புத்திர சாஸ்தா சேவா சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு பாகவத மேளா, கான்பூர் மகாதேவ பாகவதரின் 78}ஆவது ஆண்டு நாம சங்கீர்த்தன சேவை தொடக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் கேரள மாநிலம் குருவாயூரில் செப். 14 முதல் 17}ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

தொடர்புக்கு - 98849 28193.

ஸ்ரீகோகுலாஷ்டமி மகோற்சவம்
தாம்பரம் மணிமங்கலம் அருகே மலைப்பட்டு கிராமத்தில் மதுரபுரி ஆஸ்ரமத்தில் உள்ள ஸ்ரீப்ரேமிக வரதனின் 30-ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் செப். 7 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  முக்கிய நிகழ்வுகள்: செப். 10-கருட சேவை, 11-ஸ்ரீகோவிந்த பட்டாபிஷேகம், 15- ஸ்ரீராதா கல்யாணம்.

தொடர்புக்கு - 044- 2489 5875.

ஸ்ரீகுருஜி மஹா பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள தென்னாங்கூரில் உள்ள ஸ்ரீகுருஜி சுவாமி ஹரிதாஸ் கிரி, ஸ்ரீநாமாஜி சுவாமி நாமாநந்தகிர ஆராதனை விழாக்கள், பாகவத சப்தாஹம் வைபவங்கள் செப். 12 முதல் 20}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகள்: செப். 13} ஸ்ரீகுருஜி மஹா பூஜை, 20} ஸ்ரீநாமாஜி ஆராதனை.

தொடர்புக்கு - 91769 67153.

ஸ்ரீகுரு சமர்ப்பணம்
கிழக்கு தாம்பரம் அகஸ்தியர் தெருவில் உள்ள ஸ்ரீராம்ராம் சேவா சங்கம் பஜனை மண்டலி சார்பில், ஸ்ரீகிருஷ்ண ப்ரேமி அண்ணாவின் சமர்ப்பண நிகழ்ச்சிகள் செப். 9}ஆம் தேதி மாலை 4 முதல் இரவு 7 வரை நடைபெறுகின்றன.

தொடர்புக்கு - 94445 16496.

பாகவத நாம சங்கீர்த்தன மேளா

ஸ்ரீநாகராஜ பாகவதர் பஜனை சேவா மண்டலி சார்பில் பாகவத நாம சங்கீர்த்தன மேளா சென்னை உள்ளகரம் திரௌபதி அம்மன் கோயில் தெருவில் உள்ள எஸ்.ஆர்.கே. மஹாலில் செப். 22 முதல் 24}ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடர்புக்கு - 98848 77929.

கும்பாபிஷேகம்

நாகப்பட்டினம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் செப். 10 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com