பதவி உயர்வு நிச்சயம் இந்த ராசிக்கு! வாரப் பலன்கள்

இந்த வாரம் யாருக்கு என்னென்ன பலன்கள்....வாங்க தெரிஞ்சிக்கலாம்.
பதவி உயர்வு நிச்சயம் இந்த ராசிக்கு! வாரப் பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மார்ச் 15 - 21) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தோற்றத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் கூடும். மரியாதை உயரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகள் வெற்றி பெறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு

விற்பனை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு தானிய விற்பனை லாபமாக அமையும். அரசியல்வாதிகள் முனைப்புடன் செயல்படுவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்

களுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

தொழிலில் புதிய மாற்றத்தைப் புகுத்துவீர்கள். கடன் வசூலாகும். உடன்பிறந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். பெற்றோருக்கு மருத்துவச் செலவு உண்டாகாது.

உத்தியோகஸ்தர்கள் பிறருடன் நட்புடன் பழகுவீர்கள். வியாபாரிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். விவசாயிகள் குத்தகைப் பாக்கிகளைத் திரும்பச் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குப் பேச்சில் கவனம் தேவை. கலைத் துறையினர் உடனிருப்போருக்காகப் பாடுபடுவீர்கள். பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் நல்ல யோகம் உண்டாகும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். குடும்பப் பெரியோர் ஆதரவு தருவார்கள். உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பணவரவும் திருப்தியாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணைவார்கள். விவசாயிகள் விளைச்சலால் லாபம் அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு உயரும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் கணவரின் தேவையறிந்து உதவுவீர்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தையும் மன வலிமையும் பெருக்கிக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தன்னம்பிக்கை வளரும், சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும். குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளை முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் நேர்மையோடு இருப்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நல்ல பலன் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவுவீர்கள். கலைத் துறையினருக்கு சிறப்பான வருவாய் உண்டு. பெண்கள் சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஏப். 4, 5, 6.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பிரியமானவர்களைச் சந்திப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளைக் குறித்த காலத்துக்குள் முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கல் விஷயங்களில் சிரமத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தில் ஆதரவு குறையும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் கணவரின் உடல் நலத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஏப். 7, 8.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாகும். புதிய தொழில் சார்ந்த எண்ணம் மேலோங்கும். திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தெளிவாகச் சிந்தித்து செயல்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அரவணைத்துச் செல்வீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். விவசாயிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் வழக்கு விஷயங்களில் விலகியே இருப்பீர்கள். கலைத் துறையினர் நல்ல செய்திகள் கிடைக்கும். பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை

வாங்குவீர்கள். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஏப். 9, 10.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

திட்டமிட்டபடி செயலாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பெற்றோர் பாசமாகப் பழகுவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் பிறரிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள் கட்சியில் பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புகழ் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஏப். 11.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். பொருளாதாரம் சீராகும். எடுத்த காரியங்கள் நிறைவேறும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரிகள் புதிய விற்பனை முறைகளைக் கையாளுவார்கள். விவசாயிகளுக்கு விவசாயத்தை மேம்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் நல்ல பெயரைத் தக்க வைப்பீர்கள். கலைத் துறையினரின் வருமானத்துக்கு குறைவு இருக்காது. பெண்கள் சுபச் செய்திகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் நேரத்தை வீணாக்காமல் ஆக்கபூர்வமான விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

நேர்வழியில் சிந்தனை செய்வீர்கள். தொழிலில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். எவருக்கும் பணம் வாங்கித் தர வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளைப் பகிர்ந்துகொள்வீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் சாதகமாகும். விவசாயிகள் தேவையான நீராதாரத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் வெற்றியைக் காண்பீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களை முடிப்பீர்கள். பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தோர் ஆதரவாய் இருப்பார்கள். சுப காரியங்களில் கலந்துகொள்வீர்கள். தொழிலில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நன்மைகள் ஏற்படும். அரசியல்வாதிகள் தேவையற்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கலைத் துறையினருக்குத் திறமைக்கேற்ற வரவேற்பு கிடைக்கும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவர்கள் உஷாராக இருக்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழிலை கவனத்துடன் நடத்துவீர்கள். பழைய உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கடன் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வியாபாரிகள் நண்பர்களுடன் கூட்டுத் தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள். விவசாயிகள் நிலங்களை குத்தகைக்கு எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் எண்ணங்களைச் செயலாக்குவீர்கள். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதார நெருக்கடிகள் குறையும். பூர்விக சொத்துகளில் ஆதாயம் கிடைக்கும். வாகனங்களை வாங்குவீர்கள். தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் கருத்துகளைத் திணிக்காதீர்கள். வியாபாரிகளுக்கு கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு நல்ல திருப்பம் உண்டாகும். கலைத் துறையினர் பிறரை ஆலோசித்து முடிவுகளை எடுப்பீர்கள். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com