இந்த வாரம் யோகம் யாருக்கு? வார பலன்கள்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...
வார பலன்கள்
வார பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன் 21 - 27) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

புதிய வாகனங்களை வாங்குவீர்கள். தொழிலில் சாதகமான அனுபவங்களைப் பெறுவீர்கள்.

நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து பழகுவீர்கள். எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் மற்ற ஊழியர்களுக்கு வேலைப் பயிற்சியை அளிப்பீர்கள்.

வியாபாரிகளுக்கு வியாபாரம் பெருகும். விவசாயிகளுக்கு மதிப்பு உயரும்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்கள் யோகா கற்பீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

சரியான முடிவை எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். பரஸ்பரம் புரிதல் உண்டாகும். திடீர் வருவாயில் கடன்களை அடைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு தேடி வரும். வியாபாரிகள் தக்க நேரத்தில் கூட்டாளிகளின் உதவிகளைப் பெறுவீர்கள்.

விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கவனத்தைப் பெறுவீர்கள். கலைத் துறையினரின் புகழ் அதிகரிக்கும்.

பெண்கள் உற்சாகத்துடன் பொறுப்புகளை ஏற்பீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளைக் கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

போட்டிகளைச் சமாளிப்பீர்கள். ஆளுமைத் திறன்களை மேம்படுத்துவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் உயர்வைக் காண்பீர்கள்.

விவசாயிகள் விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினர் புதிய கலைகளைக் கற்பீர்கள்.

பெண்கள் குடும்பத்தினரின் குறைகளைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை,

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தடைபட்ட சுபகாரியங்கள் நடக்கும். உறவினர்கள் உதவியாய் இருப்பார்கள். பணவரவு அதிகரிக்கும். மனதில் நிம்மதி நிறையும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரிகள் சிறப்பான லாபத்தைக் காண்பீர்கள்.

விவசாயிகளைத் தேடி புதிய குத்தகைகள் வந்து சேரும். அரசியல்வாதிகள்

தங்களது வேலைகளை உடனடியாக முடிப்பீர்கள். கலைத் துறையினர் அலைச்சலின்றி சுலபமாகப் பணியாற்றுவீர்கள்.

பெண்களுக்குத் தன்னம்பிக்கை கூடும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

மதிப்பு உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பீர்கள். உயர்ந்தவர்களைச் சந்திப்பீர்கள். தொழிலில் மாற்றங்களைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளின் சீரிய முயற்சிகளுக்கு கூட்டாளிகள் ஆதரவை நல்குவார்கள், விவசாயிகளின் நிலப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பொறுமையுடன் நடப்பார்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

பெண்கள் நல்ல அனுகூலங்களைக் காண்பர். மாணவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.

ச ந்திராஷ்டமம்}இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொலிவுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். சொத்துகளை வாங்குவீர்கள். புதிய யுக்திகளைச் செயல்படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகக் கடன் கிடைக்கும். வியாபாரிகள் லாபத்தைக் காண்பீர்கள்.

விவசாயிகளின் விவசாயம் மேம்படும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் ஒப்பந்தங்களில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

பிரிந்த உறவினர்கள் குடும்பத்தோடு இணைவார்கள். உடனிருப்போர் பாசத்துடன் பழகுவார்கள். உங்களின் அறிவை பிறர் பாராட்டுவார்கள். வாழ்க்கைத் தரம் உயரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். விவசாயிகள் சிறிது செலவழிக்க நேரிடும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் அலட்சியப் போக்கைப் பெரிதுபடுத்த வேண்டாம். கலைத் துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும்.

பெண்களுக்கு ஆதரவு கூடும். மாணவர்கள் நல்லவர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதாரம் உயரும். கடன் வசூலாகும். போட்டியாளர்களின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வீர்கள். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆசி கிட்டும். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகள் விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் பயணம் செய்ய நேரிடும். கலைத் துறையினருக்கு பிறர் உதவிகள் கிட்டும்.

பெண்கள் சுபச் செலவுகளைச் செய்ய நேரிடும். மாணவர்கள் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 5, 6.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

வருமானம் சீராக இருக்கும். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். எவருக்கும் முன்ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். ரகசியங்களைப் பகிர வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரிகள் கடன் வசூலில் கவனம் செலுத்துவீர்கள். விவசாயிகள் புதிய சந்தைகளை நாடுவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்துக்கு சரியான தகவல்களை அனுப்புவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

பெண்கள் பெற்றோருக்கு ஆதரவாய் இருப்பீர்கள். மாணவர்கள் பயிற்சிகளைச் செய்யத் தொடங்குவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 7,8.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

நல்ல விஷயங்களைச் சிந்தித்துக் காரியமாற்றுவீர்கள். எடுத்தக் காரியங்கள் நிறைவேறும். உழைத்து வருவாயைப் பெருக்குவீர்கள். உபரி வருவாயை முதலீடு செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வருமானம் உயரும். விவசாயிகள் குத்தகைகளைத் திரும்ப அடைப்பீர்கள்.

அரசியல்வாதிகளோ எதிரிகளின் பலம் குறைய காண்பீர்கள். கலைத் துறையினர் கலைப் பயணங்களைச் செய்ய நேரிடும்.

பெண்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்கள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 9, 10, 11.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தாரிடம் ஒற்றுமை காணப்படும். உடனிருப்போரை அனுசரித்து நடப்பீர்கள். மரியாதை உயரும். சண்டை முடிவுக்கு வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் கூடுதல் அக்கறையைச் செலுத்துவீர்கள். விவசாயிகள் கூடுதல் மகசூலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு ஏற்றமிகு பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்கள் சிறப்பான வருவாய் கிடைக்கும். மாணவர்கள் கடுமையாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உடல் ஆரோக்கியம் மேம்படும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். யோகா கற்பீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் உயரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் தடைகளைத் தகர்த்தெறிவீர்கள். விவசாயிகள் தரமான விதைகளை வாங்கிப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகளின் ஆலோசனையை மேலிடம் கவனிக்கும். கலைத் துறையினருக்கு வருமானம் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கும்.

பெண்கள் கணவர் குடும்பத்தாருடன் நேசமாகப் பழகுவீர்கள். மாணவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X