கருவை காக்கும் அம்மன்

கருவை காக்கும் அம்மன்
Published on
Updated on
1 min read

"தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட கடையநல்லூரில் அருள்மிகு ஸ்ரீ கடகாலீஸ்வரர் உடனுறை கரும்பால் மொழி அம்பாளை வழிபட்டால் மந்தபுத்தி விலகும்; பார்வைக் கோளாறு நீங்கும்; இழந்த பொருள் மீண்டும் கிடைக்கும்; சுக பிரசவம் நடைபெறும்' என்கின்றனர் பக்தர்கள்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கோயில் இருந்த இடத்தில் அமைந்திருந்த வில்வவனத்தில் ஆயர்கள் குடியிருந்து வந்தனர். இங்கு சிவலிங்கம் புவிக்கடியில் மறைந்து இருப்பதை உலகுக்கு காட்டுவதற்காக ஈசன், முனிவரின் வடிவில் வில்வ வனப் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு ஆயர்களை அழைத்து தாகத்துக்கு நீர் கேட்டபோது, மூங்கிலால் செய்யப்பட்ட கடகால் என்னும் பாத்திரத்தில் பாலை கொடுத்துவிட்டு ஆடுகளை கவனிக்கச் சென்றுவிட்டனர்.

பாலை அருந்திய முனிவர் கடகாலைக் கவிழ்த்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். திரும்பி வந்த ஆயர்கள் கடகாலை எடுக்க எவ்வளவு முயன்றும் அதை எடுக்க முடியாமல் போகவே, கோடாரி கொண்டு அதன் அடிப் பகுதியை வெட்டினர். அப்போது அதிலிருந்து ரத்தம் பீறிட்டபோது, அதிர்ந்த ஆயர்கள் மன்னரிடம் தெரிவித்தனர்.

ஆச்சரியப்பட்ட அங்கு வந்து பார்வையில்லாத மன்னன் அப்பகுதிக்கு சென்று அவ்விடத்தை தன் கைகளால் தடவிப் பார்த்தான். ரத்தத்தின் பிசுபிசுப்பை உணர்ந்தான். அப்போது நிலத்தில் மறைந்திருந்த லிங்கம் வெளிப்பட்டது. அதே வேளையில் மன்னனுக்கு பார்வையும் வந்துவிட்டது. மகிழ்வுற்ற மன்னன்அங்கேயே ஈசனுக்கு ஆலயம் அமைத்து, அருகில் நகரையும் நிறுவினார்.

கடகாலிலிருந்து இறைவன் வெளிப்பட்டதால் கோயில் ஈசன், "கடகாலீஸ்வரர்' எனப் பெயர் பெற்றார். ஊர்ப் பெயரும் கடையநல்லூர் என அழைக்கப்படலாயிற்று.

இக்கோயிலில் கடகாலீஸ்வரர், கரும்பால்மொழி அம்பாள் சந்நிதிகளும், பிரகாரத்தில் விநாயகர், சாஸ்தா, தட்சிணாமூர்த்தி, நாகர், முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, பைரவர், நவக்கிரகங்கள் அருள்பாலிக்கின்றனர். சனி, ராகு } கேது பகவான்களுக்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது சிறப்பு. அருகே நாகலிங்க மரமும் உள்ளது. தற்போது கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், முகப்பில் புதிய கல் மண்டபம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

தொடர்புக்கு 94423 94970 .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com