மனுநீதி கண்ட மங்காத சோழ நாட்டில் பொன்னி நதி பாயும் புண்ணிய பூமியில் மங்கலூர் என்ற மங்காத ஊரில் கோயில் கொண்டு அருள்பாளிக்கும் எல்லை மகா காளி, பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறாள்.
திருமணத் தடை அகல, மகப்பேறு கிடைக்க, நோய்த் தொல்லைகள் அகல, வேண்டியவை கிடைக்க அம்மன் அருள்புரிவாள் என்பது ஐதீகம்.
திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட முத்துப்பேட்டை அருகேயுள்ள மங்கலூரில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு காளி அம்மன் சிலையை பக்தர்கள் வைத்து வழிபட்டு வந்தனர். பின்னர், அம்மனின் சக்தியை கண்ட ஊர் மக்கள், கோயிலை உருவாக்கி பெரிய அம்மன் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வந்ததால், அம்மன் சந்நிதிக்கு ஏராளமானோர் வரத் தொடங்கினர்.
இந்த நிலையில், வேலையின்றி தவித்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பெருமளவு பொருள் ஈட்டத் தொடங்கினர். அவர்கள் முயற்சியால், கோயிலில் பெரிய அளவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மகா காளி கோயிலுக்கு எதிரே பத்ரகாளி சிலையும், எதிர்புறத்தில் முன்னோடியார் கோயிலும், கிழக்கில் முனீஸ்
வரர் கோயிலும், மேற்கில் கருப்பசாமி கோயிலும்
பரிவாரத் தெய்வங்களாய் காட்சி அளிக்கின்றன.
வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு பக்தர்கள் முடிக்காணிக்கையைச் செலுத்துகின்றனர். ஆடித் திருவிழாவின்போது, பக்தர்கள் பால்குடம் ஏந்தி முளைப்பாரி ஊர்வலமும் மேற்கொள்கின்றனர். முத்துப்பேட்டை} பட்டுக்கோட்டை சாலையில் மங்கலூர் பேருந்து நிறுத்தம் அருகே கோயில் அமைந்துள்ளது.
தொடர்புக்கு} 8973626311.
கனக.கந்தசாமி, மங்கலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.