இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்?

இந்த வாரம் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள்....வாங்க தெரிஞ்சிக்கலாம்.
இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Published on
Updated on
3 min read

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மே 31 - ஜூன் 6) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உடல் உபாதைகள் அகலும். தெளிவான மனநிலையுடன் காணப்படுவீர்கள். தொழிலில் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்களுக்குக் கீழ்பணிபுரிவோர் ஆதரவாய் இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்த இறுக்கமான சூழல் தீரும். வியாபாரிகள் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு கால்நடைகளில் வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்குகள் சாதகமாகும்.

கலைத் துறையினர் பொறுமையுடன் செயலாற்றவும். பெண்கள் குழந்தைகளால் மகிழ்வடைவீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிதாகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். அரசு சலுகைகள் கிடைக்கும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழலுக்கேற்ப பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் புதிய வியாபாரத்தில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சலைக் காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் வருமானம் பெருகக் காண்பீர்கள். மாணவர்கள் புத்துணர்வுடன் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பப் பிரச்னைகள் தீரும். உறவினர்கள் ஆதரவாய் இருப்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் சிறப்பைக் காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு அரசு அலுவலர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

கலைத் துறையினர் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். பெண்கள் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து காரியங்களைச் சாதிப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டில் திறமைகளைக் காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலை சிறிய முதலீடுகளைச் செய்து விரிவுபடுத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் நற்பெயரை எடுப்பீர்கள். மனதுக்கினிய பயணங்களைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைத்து பொருளீட்டுவீர்கள். வியாபாரிகள் துணிந்து முதலீடு செய்து வெற்றியடைவீர்கள். விவசாயிகளுக்கு குத்தகை பாக்கி வசூலாகும். அரசியல்வாதிகள் கட்சி வேலைகளை நிதானமாக ஈடுபடுவீர்கள்.

கலைத் துறையினர் சக கலைஞர்களுக்கு உதவுவீர்கள். பெண்கள் கணவர் குடும்பத்தாருக்கு உதவுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளைக் கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 31.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். எதிர்ப்புகள் இருக்காது.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் புதிய இடங்களுக்குச் சென்று வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகள் ஊடுபயிர்களைப் பயிரிட்டு லாபம் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் நெருக்கம் காட்டுவீர்கள்.

கலைத் துறையினர் அமைதியாகப் பணியாற்றுவீர்கள். பெண்கள் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மாணவர்கள் வீண் சண்டைகளில் இருந்து விலகி இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 1, 2.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

கவனமாகத் திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். சொத்துகளை வாங்க முன்பணம் கொடுப்பீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவுவார்கள். வியாபாரிகள் புதிய கடைகளைத் திறக்க முயற்சிப்பார்கள். விவசாயிகள் குத்தகைகளில் லாபம் காண்பார்கள். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் அதிகரிக்கும்.

கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் புதிய அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 3, 4.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சுமுகமாக முடிவடையும். வியாபாரம் சூடுபிடித்து வருமானம் கூடத் தொடங்கும். விவாயிகளுக்கு லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் கட்சியில் முன்னிலைப்படுத்தப்படுவீர்கள்.

கலைத் துறையினர் உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் பெறுவீர்கள். பெண்கள் குடும்பப் பொருளாதாரத்தில் நல்ல நிலையை எட்டுவீர்கள். மாணவர்கள் படிப்பில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 5, 6.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தில் குதூகலம் நிறையும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் புதிய நுட்பங்களைக் கற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை சரியாக முடிப்பீர்கள். வியாபாரிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். விவசாயிகள் குத்தகை பாக்கிகளைத் திரும்பச் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகள் கட்சி நிர்வாகம் சார்ந்த பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

கலைத் துறையினர் புதிய படைப்புகளைப் படைப்பார்கள். பெண்கள் கேளிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மாணவர்கள் பெற்றோருக்கு உதவுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

குடும்பப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பீர்கள். தொழிலில் அதிசயமான நிகழ்வுகள் நடந்தேறும். பயணங்களில் அபிருத்தி உண்டாகும். பொதுக் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் கடைகளைப் புதுப்பிப்பீர்கள். விவசாயிகளுக்கு கைநழுவிய குத்தகைகள் திரும்பக் கிடைக்கும். அரசியல்வாதிகளின் பேச்சை தொண்டர்கள் கேட்பார்கள்.

கலைத் துறையினர் ரசிகர்களால் மகிழ்வார்கள். பெண்களுக்கு இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் திறமையாகப் பணியாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. வியாபாரிகள் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புச் செலவு உண்டாகும். அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடப்பீர்கள்.

கலைத் துறையினருக்குப் பாராட்டுகள் குவியும். பெண்களின் உடல் ஆரோக்கியம், மன வளம் அதிகரிக்கும். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் பங்கேற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

நம்பகமானவர் என்று பெயரை எடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். அரசு சலுகைகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல்- வாங்கலில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் புதிய இலக்குகளை விளைச்சலில் எட்டுவீர்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணியில் கவனமாக ஈடுபடுவீர்கள்.

கலைத் துறையினர் புதிய கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள். பெண்களின் பெருமை குடும்பத்தில் உயரும். மாணவர்கள் மனதில் புதிய சிந்தனைகள் மலரும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழிலில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். போட்டியாளர்களின் சதியை முறியடிப்பீர்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் நன்மை பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். விவசாயிகளுக்கு புழு, பூச்சிகளால் தொல்லை எதுவும் ஏற்படாது. அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கலைத் துறையினருக்கு வருமானம் உயரும். பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com