"கல்வியில் கரையில்லாத காஞ்சி மாநகர்' எனப் போற்றப்படும் காஞ்சிபுரத்தில் வழிபாடு சிறப்புமிக்க பல திருக்கோயில்களில் ஒன்று நகரீசுவரர் கோயிலாகும்.
கருவறையில் இறைவன் லிங்க வடிவில் எழுந்தருளி அருள்புரிகின்றார். கருவறை தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மன், விஷ்ணு, துர்க்கை ஆகிய இறைவடிவங்கள் வழிபடப் பெறுகின்றன.
சண்டிகேஸ்வரர், வடக்கு திருச்சுற்றில் எழுந்தருளி அருள்புரிகின்றார். மேலும், கல்யாண விநாயகர், முருகன், திருமால், நாகராஜர், வள்ளலார் சந்நிதிகளும் அமைந்து, அனைத்து தெய்வங்களையும் வழிபடுமாறு அமைத்துள்ளது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.
காஞ்சிபுரம் நகரம் அமைத்தபொழுது இந்தக் கோயில் ஏற்பட்டிருக்க வேண்டும். வழிபாட்டில் உள்ள ஒரு நடுக்கல் சிற்பத்தில் குதிரை மீது அமர்ந்த கோலத்தில் வீரன் ஒருவன் போரிடும் கோலத்தில் காணப்படுகிறான். காலின் கீழே குதிரை விழுந்து கிடக்கிறது. சிற்பத்தின் மேல் பகுதியில் லிங்கத்தை இரு பெண்கள் வழிபடும் கோலத்தைக் காண முடிகிறது.
இந்தக் கல்லின் நடுப்பகுதியில் "மல்லன் சாலி, நணி ராகுத்தர் மகனார் வயிரவ தேவர்' என்ற கல்வெட்டுப் பொறிப்பு காணப்படுகிறது.
14 - 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இச்சிற்பம் கோயிலின் வரலாற்றுச் சிறப்புக்கு சான்றாக விளங்குகிறது.
அறநிலையத் துறை வழிகாட்டுதலின்படி, இந்தக் கோயிலின் தொன்மை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு,
அக். 21}இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.
பேருந்து நிலையம் அருகே இக்கோயில் அமைந்துள்ளது.
தொல்லியல் துறை (பணி நிறைவு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.