12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்.2 - பிப்.8) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
12 ராசிக்குமான வாரப் பலன்கள்
12 ராசிக்குமான வாரப் பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்.2 - பிப்.8) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

சமூகத்தில் உயர்வான நிலையை அடைவீர்கள். தொழிலில் புதிய முதலீடு செய்வீர்கள்.  வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.  கல்விக்காகச் செலவழிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.  

வியாபாரிகள் விற்பனையை பெருக்குவீர்கள். விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்துவீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தின் கட்டளைப்படி நடப்பீர்கள். கலைத் துறையினரின் பொருளாதார நிலை உயரும். பெண்கள் நிலைமையை 

புரிந்துகொள்வீர்கள். மாணவர்கள் வெளியூர் சென்று பயில வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - பிப். 4, 5.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

நன்கு உழைத்து பொருளீட்டுவீர்கள்.  நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வாகனங்களைப் பழுதுபார்க்க நேரிடும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரிகள் வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள்.  

விவசாயிகளின் மகசூல் பெருகும். அரசியல்வாதிகள் எதிரிகளின் சூழ்ச்சி பலிக்க இடம் தர மாட்டீர்கள். கலைத் துறையினர் பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். பெண்கள் குழந்தைகள்  விஷயத்தில் மனக்குறைகள் நீங்கும். 

மாணவர்கள் தேவையற்ற விஷயங்களை அறவே தவிர்த்திடுங்கள்.

சந்திராஷ்டமம் - பிப். 6, 7.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வருமானம் உயரத் தொடங்கும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் செய்யாத குற்றத்துக்காக, குறை கூறப்படுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் முக்கிய செயல்களைச் செய்து முடிப்பீர்கள். 

அரசியல்வாதிகளின் தனித்தன்மை வெளிப்படும். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைத் தேடிப் பெறுவீர்கள். பெண்கள் உடன்பிறந்தோருக்கு மதிப்பு அளிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சாதனைகளைப் படைப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப். 8.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

அரசு சலுகைகள் கிடைக்கும்.  செல்வாக்கு உயரும். குழந்தைகள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள்.  தொழிலில் நிலவிய இடையூறுகள் அகலும். உத்தியோகஸ்தர்கள் புதிய பணிக்கு மாறுவீர்கள். 

வியாபாரிகளுக்கு தவறிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விவசாயிகள் கால்நடைகளால் பயன் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளின் மனதில் புதிய சிந்தனைகள் உதயமாகும். கலைத் துறையினர் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பெண்கள் பிறரால் மதிக்கப்படுவார்கள். மாணவர்கள் புதிய பயிற்சிகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் புதிய விஷயங்களை கற்பீர்கள்.  இழுபறியான காரியங்கள் நிறைவேறும். கடன்களைத் திரும்ப அடைப்பீர்கள். குழந்தைகளின் திறமை வெளிப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு உண்டு.  

வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படாது.  விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் எந்த பாதிப்பும் ஏற்படாது. கலைத் துறையினர் பொருளாதார நிலையில் சற்று ஏற்றங்களைக் காண்பீர்கள். 

பெண்களுக்கு குழந்தைகள் விஷயத்தில் சிறிது மனக்குறை ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற விஷயங்களை அறவே தவிர்த்துவிடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

நல்ல திருப்பங்கள் உண்டாகும். பண விஷயங்களில் கவனமாக இருப்பீர்கள். எவருக்கும் கடன் கொடுக்க மாட்டீர்கள். மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களால் பெருமையடைவீர்கள். 

வியாபாரிகளுக்கு கொடுக்கல் } வாங்கல் விஷயம் சிறப்பாக முடிவடையும். விவசாயிகள் கொள்முதலில் லாபத்தைக் காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு கூடும். கலைத் துறையினர் புதிய நுட்பங்களைக் கற்பீர்கள். 

பெண்கள் பெற்றோருடன் இணக்கமாகச் செயல்படுவீர்கள். மாணவர்கள் புதிய படிப்புகளில் சேருவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.  தனித்தே காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு பிறர் உதவியாக இருப்பார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகள் கட்சிக் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள்.  கலைத் துறையினரின் செயல்திறன் அதிகரிக்கும். 

பெண்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உங்கள் பேச்சில் இனிமை கூடும்.  விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் இருந்தாலும், சிக்கனத்தைக் கடைப்பிடிப்பீர்கள். 

தரும காரியங்களில்  ஈடுபடுவீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் தனித்துப் பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் எச்சரிக்கையுடன் ஈடுபடவும். விவசாயிகள் பூச்சி மருந்துக்கு செலவு செய்வீர்கள். அரசியல்வாதிகள் புதிய பதவிகளில் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். 

கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். பெண்களுக்கு கணவருடன் உறவு மேம்படும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தொழிலில் எதிர்பார்த்த இலக்குகளை எட்டுவீர்கள். கடன்கள் வசூலாகும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். 

வியாபாரிகள் கடை ஊழியர்களை நன்றாக நடத்துவீர்கள். விவசாயிகள் குத்தகைகளில் நல்ல வருவாய் ஈட்டுவீர்கள். அரசியல்வாதிகளின் ஆலோசனைகளை கட்சி மேலிடம் ஏற்கும்.

கலைத் துறையினர் சில ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் பிறரை அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்கள் தியானம் கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

எதிர்ப்புகள் இருக்காது. திட்டமிட்டதுபோல் செயல்களைச் செய்து முடிப்பீர்கள். தொழிலில் ஆதாயம் பெருகும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயமாக பிரயாணம் செய்வீர்கள். வியாபாரிகள் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு சிறிது செலவு ஏற்படும். அரசியல்வாதிகள் மன உறுதியோடு இருப்பீர்கள். கலைத் துறையினருக்கு நன்மை உண்டு. பெண்கள் உறவினர்களை அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்கள் உயர்கல்விக்கான ஆலோசனைகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுபகாரிய பேச்சுவார்த்தை நல்ல முடிவுக்கு வரும்.  வெளியூர் பயணம் உண்டு. புதிய தொழில்நுட்பங்களைக் கற்பீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழல் நிலவும். விவசாயிகள் கடினமான வேலைகளை எளிதில் முடித்துவிடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

கலைத் துறையினர் உடனிருப்போரை புரிந்துகொள்வீர்கள். பெண்கள் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். மாணவர்கள் கவனமாக இருக்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

முயற்சிகள் வெற்றி பெறும். சுறுசுறுப்பாகச் செயலாற்றுவீர்கள். பொறுமைக்கு நல்ல பலன் கிட்டும். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர் களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். வியாபாரிகள் கடினமாக உழைத்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.

விவசாயிகள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள்.  அரசியல்வாதிகளிடம் மேலிடம் கருணை காட்டும். கலைத் துறையினருக்கு புதிய கலைநிகழ்ச்சிகள் ஒப்பந்தமாகும். 

பெண்கள் குடும்பத்தில் மருத்துவச் செலவு குறையக் காண்பீர்கள். மாணவர்கள் உடல் நலமும், மன வளமும் சிறக்கும்.

சந்திராஷ்டமம் - பிப். 2, 3.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com