தாழம்பூவுக்கு சாப விமோசனம் அளித்த சிவன்!

தாழம்பூவுக்கு சாப விமோசனம் அளித்த சிவன்!
Updated on
1 min read

பார்வதி தேவிக்கு சிவன் வேதாகமங்களின் ரகசியத்தை உபதேசித்தலே, "திருஉத்தரகோசமங்கை' எனும் திருப்பெயர் பெற்று வருகிறது.

சிவன் தாழம்பூவுக்கு சாப விமோசனம் அளித்த திருத்தலம் என்பதால், இறைவனை தாழம்பூவால் வழிபடலாம். இறைவன் மங்களநாதர், அம்பிகை அருள்தரும் மங்களேஸ்வரி. உமையம்மைக்கு சிவன் திருத்தாண்ட காட்சியை இங்குதான் முதல் முதலில் ரகசியமாக காண்பித்தார்.

எங்கும் இல்லாத, வண்ணமாக மரகத நடராஜராக எழுந்தருளியுள்ளார் சிவன். தில்லைக்கு முன்பே பஞ்சகிருத்திய பரமானந்த தாண்டவத்தை நிகழ்த்தியுள்ளார். ஆதிசிதம்பரமாக இன்றும் கருதப்படுகிறது. நடராஜரின் பிரதிநிதியாக சந்திரமெüலீஸ்வரர் நித்தியபடி உச்சிக் காலத்தில் எழுந்தருளி, சர்வ அபிஷேக திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜிக்கப்படுகிறார். ஆருத்ரா உற்சவத்தில் மரகத திருமேனி தரிசனமும், சந்தன முழுக்காப்பு தரிசன நிகழ்வும் வழக்கமாக நடைபெறுகின்றன. இதுவே மூர்த்தியின் மிகப்பெரிய சிறப்பாகும்.

மாணிக்கவாசகருக்கு இறைவன் முழு உருவக்காட்சி அளித்த திருத்தலம். எங்கும் இல்லாத வண்ணமாக சுத்த பிரணவ ஞான தேகத்துடன் எழுந்தருளியுள்ளார். திருவாதவூரார்.

தல விருட்சமாக இலந்தை மரம் உள்ளது. அக்னி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பொய்யார் தடம் பொய்கை, வியாச தீர்த்தம், மங்கல தீர்த்தம் என பல பெயர்களைக் கொண்டு, தீர்த்தங்கள் சிறப்புடன் விளங்குகின்றன. வேதவியாசர், பராசரர், காகபுஜ, கண்டரிஷி, மிருகண்டு முனிவர் ஆகியோர் வழிபட்ட திருத்தலம்.

ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்துக்கு உள்பட்ட இக்கோயிலில் ஏப்ரல் 4 காலை 9 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

}பொ.ஜெயச்சந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com